Kazaalika wa qad ahatnaa bimaa ladaihi khubraa
(அவர்களுடைய நிலைமை உண்மையில்) இவ்வாறே இருந்தது. அவரிடமிருந்த எல்லா வசதிகளையும் நாம் நன்கறிவோம்.
Summa atba'a sababaa
பின்னர் அவர் (வேறு) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.
Hattaaa izaa balagha bainas saddaini wajada min doonihimaa qawmal laa yakaa doona yafqahoona qawlaa
(அங்கிருந்த) இரு மலைகளின் இடைவெளியை அவர் அடைந்தபோது அவற்றிற்கு அப்பாலும் மக்கள் சிலரைக் கண்டார். அவர்களுடைய பேச்சு (எளிதில்) விளங்கக்கூடியதாக இருக்கவில்லை,
Qaaloo yaa Zal qarnaini inna Yaajooja wa Maajooja mufsidoona fil ardi fahal naj'alu laka kharjan 'alaaa an taj'ala bainanaa wa bainahum saddas
அவர்கள் (இவரை நோக்கி ஜாடையாக) "துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜ், மஃஜூஜ் (என்னும் மக்கள்) எங்கள் ஊரில் (வந்து) பெரும் விஷமம் செய்கிறார்கள். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் நீங்கள் ஒரு தடையை ஏற்படுத்தும் பொருட்டு ஒரு தொகையை நாங்கள் சேகரம் செய்யலாமா?" என்று கேட்டார்கள்.
Qaala maa makkannee feehi Rabbee khairun fa-a'eenoonee biquwwatin aj'al bainakum wa bainahum radmaa
அதற்கவர், "என் இறைவன் எனக்குக் கொடுத்திருப்பதே (போதுமானது) மிக்க மேலானது. (உங்கள் பொருள் தேவையில்லை. எனினும், உங்கள்) உழைப்பைக் கொண்டு எனக்கு உதவி செய்யுங்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உறுதியான ஒரு (மதில் சுவற்றைத்) தடுப்பாக எழுப்பிவிடுகிறேன்" என்றும்,
Aatoonee zubaral hadeed, hattaaa izaa saawaa bainas sadafaini qaalan fukhoo hattaaa izaa ja'alahoo naaran qaala aatooneee ufrigh 'alaihi qitraa
"நீங்கள் (அதற்குத் தேவையான) இரும்புப் பாளங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்" என்றும் கூறி, "(அவைகளைக் கொண்டு வந்து இரு மலைகளுக்கிடையில் இருந்த பள்ளத்தை நிறைத்து) இரு மலைகளின் உச்சிக்கு அவை சமமாக உயர்ந்த பின்னர், நெருப்பாக பழுக்கும் வரையில் அதை ஊதுங்கள்" என்றார். (அதன் பின்னர்) "செம்பையும் என்னிடம் கொண்டு வாருங்கள். நான் அதனை உருக்கி அதன் மீது ஊற்றுவேன்" என்றார்.
Famas taa'ooo any yazharoohu wa mastataa'oo lahoo naqbaa
"பின்னர், அதனைக் கடந்து வர (யஃஜூஜ் மஃஜூஜ்களால்) முடியாது. அதனைத் துளைத்துத் துவாரமிடவும் அவர்களால் முடியாது" என்று கூறினார்.
Qaala haaza rahmatummir Rabbee fa izaa jaaa'a wa'du Rabbee ja'alahoo dakkaaa'a; wa kaana; wa du Rabbee haqqaa
(இவ்வாறு தயாரான தடுப்பைக் கண்ட அவர்) "இது என் இறைவனுடைய அருள்தான். என் இறைவனின் வாக்குறுதி(யாகிய யுக முடிவு) வரும் பட்சத்தில் இதனையும் தூள் தூளாக்கிவிடுவான். என் இறைவனின் வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே!" என்று கூறினார்.
Wa taraknaa ba'dahum Yawma'iziny yamooju fee ba'dinw wa nufikha fis Soori fajama'naahum jam'aa
அந்நாள் வருவதற்குள் சிலர் சிலருடன் (கடல்) அலைகளைப் போல் மோதும்படி நாம் விட்டுவிடுவோம். (பின்னர்) சூர் (எக்காளம்) ஊதப்பட்(டு அனைவரும் மடிந்து விட்)டால் பின்னர் (உயிர் கொடுத்து) அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து விடுவோம்.
Wa 'aradnaa jahannama Yawma'izil lilkaafireena 'ardaa
நிராகரிப்பவர்களுக்கு அந்நாளில் நரகத்தையே நாம் நிச்சயமாக அவர்கள் முன்பாக்குவோம்.