Skip to main content

وَمَثَلُ
இன்னும் உதாரணம்
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
كَمَثَلِ
உதாரணத்தைப்போன்று
ٱلَّذِى
எவர்
يَنْعِقُ
கூவி அழைக்கிறார்
بِمَا
எதை
لَا يَسْمَعُ
கேட்காது
إِلَّا
தவிர
دُعَآءً
அழைப்பை
وَنِدَآءًۚ
இன்னும் சப்தத்தை
صُمٌّۢ
செவிடர்கள்
بُكْمٌ
ஊமைகள்
عُمْىٌ
குருடர்கள்
فَهُمْ
எனவே, அவர்கள்
لَا يَعْقِلُونَ
புரிய மாட்டார்கள்

Wa masalul lazeena kafaroo kamasalil lazee yan'iqu bimaa laa yasma'u illaa du'aaa'anw wa nidaaa'aa; summum bukmun 'umyun fahum laa ya'qiloon

(அறியாமையில் தங்களுடைய மூதாதைகளைப் பின்பற்றும்) அந்தக் காஃபிர்களின் உதாரணம். (அர்த்தத்தை உணராது) கூச்சலையும் ஓசையையும் மட்டும் கேட்கக் கூடியதின் (அதாவது கால்நடைகளின்) உதாரணத்தை ஒத்திருக்கின்றது. (மேலும், அவர்கள்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். ஆதலால், அவர்கள் (எதனையும்) அறிந்து கொள்ளவே மாட்டார்கள்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
كُلُوا۟
உண்ணுங்கள்
مِن طَيِّبَٰتِ
நல்லவற்றிலிருந்து
مَا
எவை
رَزَقْنَٰكُمْ
உங்களுக்கு வழங்கினோம்
وَٱشْكُرُوا۟
இன்னும் நன்றி செலுத்துங்கள்
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
إِيَّاهُ
அவனையே
تَعْبُدُونَ
வணங்குகிறீர்கள்

Yaaa ayyuhal lazeena aamanoo kuloo min taiyibaati maa razaqnaakum washkuroo lillaahi in kuntum iyyaahu ta'budoon

நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவைகளில் இருந்தே புசியுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருந்தால் அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள்.

Tafseer

إِنَّمَا حَرَّمَ
அவன் தடுத்ததெல்லாம்
عَلَيْكُمُ
உங்கள் மீது
ٱلْمَيْتَةَ
செத்ததை
وَٱلدَّمَ
இன்னும் இரத்தம்
وَلَحْمَ
இன்னும் இறைச்சி
ٱلْخِنزِيرِ
பன்றியின்
وَمَآ
இன்னும் எது
أُهِلَّ
கூறப்பட்டது
بِهِۦ
அதை
لِغَيْرِ
அல்லாதவருக்காக
ٱللَّهِۖ
அல்லாஹ்
فَمَنِ
ஆகவே, எவர்
ٱضْطُرَّ
நிர்ப்பந்திக்கப்பட்டார்
غَيْرَ بَاغٍ
பாவத்தை நாடாதவராக
وَلَا عَادٍ
இன்னும் வரம்பு மீறாதவராக
فَلَآ
அறவே இல்லை
إِثْمَ
குற்றம்
عَلَيْهِۚ
அவர் மீது
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Innamaa harrama 'alaikumul maitata waddama wa lahmal khinzeeri wa maaa uhilla bihee lighairil laahi famanid turra ghaira baaghinw wa laa 'aadin falaaa isma 'alaih; innal laaha Ghafoorur Raheem

(நம்பிக்கையாளர்களே!) தாமாக செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாத (வேறு) பெயர் கூறப்பட்டவைகள் ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். ஆதலால், எவரேனும் வரம்பு மீறாமலும், பாவம் செய்யும் நோக்கமில்லாமலும் இருந்து (இவற்றைப் புசிக்க) நிர்ப்பந்திக்கப்பட்டு விட்டால் (அது) அவர் மீது குற்றமாகாது. நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
يَكْتُمُونَ
மறைக்கிறார்கள்
مَآ
எவற்றை
أَنزَلَ
இறக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
مِنَ ٱلْكِتَٰبِ
வேதத்தில்
وَيَشْتَرُونَ
இன்னும் வாங்குகிறார்கள்
بِهِۦ
அதன் மூலம்
ثَمَنًا
தொகை
قَلِيلًاۙ
சொற்பம்
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
مَا يَأْكُلُونَ
அவர்கள் சாப்பிடுவதில்லை
فِى بُطُونِهِمْ
தங்கள் வயிறுகளில்
إِلَّا
தவிர
ٱلنَّارَ
நெருப்பை
وَلَا يُكَلِّمُهُمُ
இன்னும் அவர்களிடம் பேசமாட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
وَلَا يُزَكِّيهِمْ
இன்னும் அவர்களைப் பரிசுத்தமாக்க மாட்டான்
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
عَذَابٌ
வேதனை
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது

Innal lazeena yaktumoona maaa anzalal laahu minal kitaabi wa yashtaroona bihee samanan qaleelan ulaaa'ika maa yaakuloona fee butoonihim illan Naara wa laa yukallimu humul laahu Yawmal Qiyaamati wa laa yuzakkeehim wa lahum 'azaabun aleem

எவர்கள் வேதத்தில் அல்லாஹ் இறக்கியவைகளை மறைத்துவிட்டு அதற்கு விலையாகச் சொற்பத் தொகையைப் பெற்றுக் கொள்கின்றனரோ அவர்கள் நிச்சயமாகத் தங்கள் வயிற்றில் நெருப்பையே நிரப்பிக் கொள்கின்றார்கள். அன்றி, மறுமையில் அல்லாஹ் அவர்களுடன் (விரும்பிப்) பேசவும் மாட்டான். அவர்களை (மன்னித்து)ப் பரிசுத்தமாக்கி வைக்கவுமாட்டான். அவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனைதான் உண்டு.

Tafseer

أُو۟لَٰٓئِكَ
இவர்கள்(தான்)
ٱلَّذِينَ
எவர்கள்
ٱشْتَرَوُا۟
வாங்கினார்கள்
ٱلضَّلَٰلَةَ
வழிகேட்டை
بِٱلْهُدَىٰ
நேர்வழிக்குப் பதிலாக
وَٱلْعَذَابَ
இன்னும் தண்டனை
بِٱلْمَغْفِرَةِۚ
மன்னிப்புக்குப்பதிலாக
فَمَآ
எது
أَصْبَرَهُمْ
அவர்களைத் துணிவுகொள்ளும்படி செய்தது
عَلَى
மீது
ٱلنَّارِ
(நரக) நெருப்பு

Ulaaa'ikal lazeenash tarawud dalaalata bilhudaa wal'azaaba bilmaghfirah; famaaa asbarahum 'alan Naar

இவர்கள்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்புக்குப் பதிலாகத் தண்டனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்களாவர். (நரக) நெருப்பை (இவ்விதம்) அவர்கள் (சுவைத்து) சகிக்கும்படிச் செய்தது எதுவோ?

Tafseer

ذَٰلِكَ
அது
بِأَنَّ
காரணம்/நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
نَزَّلَ
இறக்கினான்
ٱلْكِتَٰبَ
வேதத்தை
بِٱلْحَقِّۗ
உண்மையுடன்
وَإِنَّ
இன்னும் நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
ٱخْتَلَفُوا۟
முரண்பட்டார்கள்
فِى ٱلْكِتَٰبِ
வேதத்தில்
لَفِى شِقَاقٍۭ
பகைமையில்தான்
بَعِيدٍ
தூரமான

Zaalika bi annal laaha nazzalal kitaaba bilhaqq; wa innal lazeenakh talafoo fil kitaabi lafee shiqaaqim ba'eed

இதன் காரணம்: நிச்சயமாக அல்லாஹ் (முற்றிலும்) உண்மையாகவே வேதத்தை இறக்கியிரு(க்க, சொற்பத் தொகையைப் பெறுவதற்காக அதன் வசனங்களை மறை)ப்பதுதான். மேலும், வேதத்தைப் புரட்டுகிறவர்கள் நிச்சயமாக (நேர்வழியை விட்டுப்) பிரிந்து வெகுதூரத்தில் இருக்கின்றார்கள்.

Tafseer

لَّيْسَ
அல்ல
ٱلْبِرَّ
நன்மை
أَن تُوَلُّوا۟
நீங்கள் திருப்புவது
وُجُوهَكُمْ
உங்கள் முகங்களை
قِبَلَ
நோக்கி
ٱلْمَشْرِقِ
கிழக்கு
وَٱلْمَغْرِبِ
இன்னும் மேற்கு
وَلَٰكِنَّ
எனினும்
ٱلْبِرَّ
நன்மை
مَنْ
எவர்
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
இன்னும் இறுதி நாள்
وَٱلْمَلَٰٓئِكَةِ
இன்னும் வானவர்கள்
وَٱلْكِتَٰبِ
இன்னும் வேதம்
وَٱلنَّبِيِّۦنَ
இன்னும் நபிமார்கள்
وَءَاتَى
இன்னும் கொடுத்தார்
ٱلْمَالَ
செல்வத்தை
عَلَىٰ
உடன்
حُبِّهِۦ
அதன் விருப்பம்
ذَوِى ٱلْقُرْبَىٰ
உறவினர்களுக்கு
وَٱلْيَتَٰمَىٰ
இன்னும் அநாதைகளுக்கு
وَٱلْمَسَٰكِينَ
இன்னும் ஏழைகளுக்கு
وَٱبْنَ ٱلسَّبِيلِ
இன்னும் வழிப்போக்கருக்கு
وَٱلسَّآئِلِينَ
இன்னும் யாசகர்களுக்கு
وَفِى ٱلرِّقَابِ
இன்னும் அடிமைகளுக்கு
وَأَقَامَ
இன்னும் நிலைநிறுத்தினார்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَءَاتَى
இன்னும் கொடுத்தார்
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
وَٱلْمُوفُونَ
இன்னும் நிறைவேற்றுபவர்கள்
بِعَهْدِهِمْ
ஒப்பந்தத்தை தங்கள்
إِذَا عَٰهَدُوا۟ۖ
அவர்கள் ஒப்பந்தம் செய்தால்
وَٱلصَّٰبِرِينَ
இன்னும் பொறுமையாளர்கள்
فِى ٱلْبَأْسَآءِ
கொடிய வறுமையில்
وَٱلضَّرَّآءِ
இன்னும் நோய்
وَحِينَ ٱلْبَأْسِۗ
இன்னும் போர் சமயத்தில்
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
ٱلَّذِينَ صَدَقُوا۟ۖ
உண்மையாளர்கள்
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
இன்னும் அவர்கள்தான்
ٱلْمُتَّقُونَ
அல்லாஹ்வை அஞ்சுபவர்கள்

Laisal birra an tuwalloo wujoohakum qibalal mashriqi walmaghribi wa laakinnal birra man aamana billaahi wal yawmil aakhiri wal malaaa 'ikati wal kitaabi wan nabiyyeena wa aatalmaala 'alaa hubbihee zawilqurbaa walyataa maa walmasaakeena wabnas sabeeli wassaaa'ileena wa firriqaabi wa aqaamas salaata wa aataz zakaata walmoofoona bi ahdihim izaa 'aahadoo wasaabireena fil baasaaa'i waddarraaa'i wa heenal baas; ulaaa'ikal lazeena sadaqoo wa ulaaa 'ika humul muttaqoon

மேற்கிலோ கிழக்கிலோ உங்கள் முகங்களை நீங்கள் திருப்பி விடுவதனால் மட்டும் நன்மை செய்தவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். (உங்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் (மறுமை நாளையும்), மலக்குகளையும், வேதங்களையும், நபிமார்களையும், நிச்சயமாக நம்பிக்கை கொண்டு (தனக்கு விருப்பமுள்ள) பொருளை அல்லாஹ்வுக்காக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், விடுதலையை விரும்பிய (அடிமைகள், கடன்காரர்கள் ஆகிய) வர்களுக்கும் கொடுத்து (உதவி செய்து,) தொழுகையையும் கடைப்பிடித்து தொழுது, ஜகாத்து (மார்க்க வரியு)ம் கொடுத்து வருகின்றாரோ அவரும்; வாக்குறுதி செய்த சமயத்தில் தங்களுடைய வாக்குறுதியை(ச் சரிவர) நிறைவேற்றுபவர்களும்; கடினமான வறுமையிலும், நோய் நொடிகளிலும், கடுமையான போர் நேரத்திலும் பொறுமையைக் கைக்கொண்டவர்களும் ஆகிய (இவர்கள்தாம் நல்லோர்கள்.) இவர்கள்தாம் (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்) உண்மையானவர்கள். இவர்கள்தாம் இறை அச்சமுடையவர்கள்!

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
كُتِبَ
கடமையாக்கப் பட்டுள்ளது
عَلَيْكُمُ
உங்கள் மீது
ٱلْقِصَاصُ
பழிவாங்குதல்
فِى ٱلْقَتْلَىۖ
கொலை செய்யப்பட்டவர்களுக்காக
ٱلْحُرُّ
சுதந்திரமானவன்
بِٱلْحُرِّ
சுதந்திரமான வனுக்குப் பதிலாக
وَٱلْعَبْدُ
இன்னும் அடிமை
بِٱلْعَبْدِ
அடிமைக்குப்பதிலாக
وَٱلْأُنثَىٰ
இன்னும் பெண்
بِٱلْأُنثَىٰۚ
பெண்ணுக்குப்பதிலாக
فَمَنْ
எவர்
عُفِىَ
மன்னிக்கப்பட்டது
لَهُۥ
அவருக்கு
مِنْ
இருந்து
أَخِيهِ
தன் சகோதரன்
شَىْءٌ
ஏதேனும்
فَٱتِّبَاعٌۢ
பின்பற்றுதல்
بِٱلْمَعْرُوفِ
கண்ணியமான முறையில்
وَأَدَآءٌ
இன்னும் நிறைவேற்றுதல்
إِلَيْهِ
அவரிடம்
بِإِحْسَٰنٍۗ
நன்றி அறிதலுடன்
ذَٰلِكَ
அது
تَخْفِيفٌ
சலுகை
مِّن
இருந்து
رَّبِّكُمْ
உங்கள் இறைவன்
وَرَحْمَةٌۗ
இன்னும் அருள்
فَمَنِ
இன்னும் எவர்
ٱعْتَدَىٰ
வரம்பு மீறினார்
بَعْدَ ذَٰلِكَ
அதற்குப் பின்னர்
فَلَهُۥ
அவருக்கு
عَذَابٌ
வேதனை
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது

Yaaa ayyuhal lazeena aamanoo kutiba alaikumul qisaasu fil qatlaa alhurru bilhurri wal'abdu bil'abdi wal unsaa bil unsaa; faman 'ufiya lahoo min akheehi shai'un fattibaa'um bilma'roofi wa adaaa'un ilaihi bi ihsaan; zaalika takhfeefum mir rahbikum wa rahmah; famani' tadaa ba'da zaalika falahoo 'azaabun aleem

நம்பிக்கையாளர்களே! கொலை செய்யப்பட்டவர்களுக்காக பழிவாங்குவது உங்கள்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. (ஆகவே, கொலை செய்யப்பட்டவன்) சுதந்திரமானவனாயின் (அவனை கொலை செய்த) சுதந்திரமானவனையே, (கொலை செய்யப்பட்டவன்) அடிமையாயின் (அவனை கொலை செய்த அந்த) அடிமையையே, (கொலை செய்யப்பட்டவள்) பெண்ணாயின் (கொலை செய்த அந்தப்) பெண்ணையே நீங்கள் கொலை செய்துவிடுங்கள். (ஆயினும், பழிவாங்கும் விஷயத்தில்) ஒரு சிறிதேனும் அ(க் கொலையுண்ட) வனுடைய சகோதரரால் மன்னிக்கப்பட்டுவிட்டால், மிக்க கண்ணியமான முறையைப் பின்பற்றி (அவனைக் கொலை செய்யாது விட்டு) விடவேண்டும். (பழிவாங்குவதற்குப் பதிலாகக் கொலையாளி ஒரு தொகையைத் தருவதாக ஒப்புக் கொண்டிருந்தால், அந்த நஷ்டஈட்டைத்) தயக்கமின்றி நன்றியோடு அவன் செலுத்திவிட வேண்டும். இ(வ்வாறு நஷ்டஈட்டை அனுமதித்திருப்ப)து உங்கள் இறைவனுடைய சலுகையும், அருளுமாகும். இ(வ்வாறு நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொண்ட)தற்குப் பின் எவரேனும் வரம்பு மீறி (நஷ்டஈடு கொடுத்த கொலையாளியைத் துன்புறுத்தி)னால் அவனுக்கு (மறுமையில்) மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு.

Tafseer

وَلَكُمْ
உங்களுக்கு
فِى ٱلْقِصَاصِ
பழிவாங்குவதில்
حَيَوٰةٌ
வாழ்க்கை
يَٰٓأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
அறிவாளிகளே
لَعَلَّكُمْ تَتَّقُونَ
நீங்கள் பயந்து கொள்ளவேண்டுமே

Wa lakum fil qisaasi hayaatuny yaaa ulil albaabi la 'allakum tattaqoon

அறிவாளிகளே! (கொலைக்குப்) பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை உண்டு. (ஏனென்றால், பழிவாங்கி விடுவார்கள் என்ற பயத்தால் கொலை செய்யக் கருதுபவனும், அவனால் கொலை செய்யக் கருதப்பட்டவனும் தப்பித்துக் கொள்ளலாம்.) நீங்கள் (அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகி அவனை) அஞ்சிக் கொள்ளுங்கள்.

Tafseer

كُتِبَ
கடமையாக்கப்பட்டது
عَلَيْكُمْ
உங்கள் மீது
إِذَا حَضَرَ
வந்தால்
أَحَدَكُمُ
உங்களில் ஒருவருக்கு
ٱلْمَوْتُ
மரணம்
إِن تَرَكَ
அவர் விட்டுச் சென்றால்
خَيْرًا
செல்வத்தை
ٱلْوَصِيَّةُ
மரணசாசனம்
لِلْوَٰلِدَيْنِ
பெற்றோருக்கு
وَٱلْأَقْرَبِينَ
இன்னும் உறவினர்களுக்கு
بِٱلْمَعْرُوفِۖ
நல்ல முறையில்
حَقًّا
அவசியமாக
عَلَى
மீது
ٱلْمُتَّقِينَ
அல்லாஹ்வை அஞ்சுபவர்கள்

Kutiba 'alaikum izaa hadara ahadakumul mawtu in taraka khairanil wasiyyatu lilwaalidaini wal aqrabeena bilma'roofi haqqan 'alalmut taqeen

(நம்பிக்கையாளர்களே!) உங்களில் எவருக்கும் மரணம் சமீபித்து அவர் பொருளை விட்டுவிட்டு இறப்பவராகவும் இருந்தால், (அவர் தன்னுடைய) தாய் தந்தைக்கும், பந்துக்களுக்கும், நியாயமான முறைப்படி (பொருள் சேர்வதற்காக) மரண சாசனம் (கூற) விதிக்கப்பட்டிருக்கிறது. (இது) இறை அச்சமுடையவர்கள் மீது கடமையாகும்.

Tafseer