Wallazeena sa'aw feee Aayaatinaa mu'aajizeena ulaaa ika As-haabul jaheem
அன்றி, எவர்கள் நம்முடைய வசனங்களைத் தோற்கடிக்க முயற்சிக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகளே!
Wa maaa arsalnaa min qablika mir Rasoolinnw wa laa Nabiyyin illaaa izaaa tamannaaa alqash Shaitaanu feee umniy yatihee fa yansakhul laahu maa yulqish Shaitaanu summa yuhkimul laahu aayaatih; wallaahu 'Aleemun Hakeem
(நபியே!) உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு நபியும், தூதரும் (எதையும்) ஓதிய சமயத்தில் அவருடைய ஓதுதலில் ஷைத்தான் குழப்பத்தை உண்டு பண்ண முயற்சிக்காமல் இருக்கவில்லை. (அவர்களுடைய ஓதுதலில்) ஷைத்தான் உண்டுபண்ணிய (தப்பான)தை அல்லாஹ் நீக்கிய பின்னர்தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்தி விடுகின்றான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
Liyaj'ala maa yulqish Shaitaanu fitnatal lillazeena fee quloobihim maradunw walqaasiyati quloobuhum; wa innaz zaalimeena lafee shiqaaqim ba'eed
(இவ்வாறு) ஷைத்தான் உண்டுபண்ணும் தப்பானதை, எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கின்றதோ அல்லது எவர்களுடைய உள்ளங்கள் (கல்லைப் போல்) கடினமாக இருக்கின்றனவோ அவர்களைச் சோதிப்பதற்கு (அல்லாஹ்) ஒரு காரணமாகவும் ஆக்கிவிடுகிறான். அன்றி, நிச்சயமாக (அத்தகைய கடினமான உள்ளங்களை உடைய) அநியாயக்காரர்கள் வெகு தூரமான விரோதத்தில்தான் இருக்கின்றனர்.
Wa liya'lamal lazeena ootul 'ilma annahul haqqu mir Rabbika fa yu'minoo bihee fatukhbita ahoo quloobuhum; wa innal laaha lahaadil lazeena aamanoo ilaa Siraatim Mustaqeem
எவர்களுக்கு (மெய்யான) கல்வி ஞானம் கொடுக்கப் பட்டிருக்கின்றதோ அவர்கள் நிச்சயமாக இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மை என்று திட்டமாக அறிந்து இதை நம்பிக்கை கொண்டு தங்கள் மனப்பூர்வமாகவே அவனுக்கு கட்டுப்படுவார்கள். நிச்சயமாக எவர்கள் (மெய்யாகவே) நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை, அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்.
Wa laa yazaalul lazeena kafaroo fee miryatim minhu hattaa taatiyahumus Saa'atu baghtatan aw yaatiyahum 'azaabu Yawmin 'aqeem
(எனினும்) நிராகரிப்பவர்கள் தங்களிடம் திடீரென்று மறுமை (நாள்) வரும் வரையில் அல்லது கடினமான வேதனையுடைய நன்மையற்ற நாள் அவர்களிடம் வரும் வரையில் இதைப் பற்றிச் சந்தேகத்திலேயே ஆழ்ந்து கிடப்பார்கள்.
Almulku Yawma'izil lillaahi yahkumu bainahum; fallazeena aamanoo wa 'amilus saalihaati fee jannaatin Na'eem
அந்நாளில், சர்வ அதிகாரமும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே அவர்களுக்குத் தீர்ப்பளிப்பான். எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்கள் மிக்க சுகமளிக்கும் சுவனபதியில் தங்கிவிடுவார்கள்.
Wallazeena kafaroo wa kazzaboo bi Aayaatinaa fa ulaaa'ika lahum 'azaabum muheen
எவர்கள் (நம்முடைய தீர்ப்பை) நிராகரித்து, நம்முடைய வசனங்களை பொய்யாக்குகின்றார்களோ அவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.
Wallazeena haajaroo fee sabeelil laahi summa qutilooo law maatoo la yarzuqan nahumul laahu rizqan hasanaa; wa innal laaha la Huwa khairur raaziqeen
எவர்கள் (தங்கள் இல்லங்களை விட்டு) அல்லாஹ்வுடைய வழியில் புறப்பட்டு பின்னர் (போரில்) வெட்டுப்படுகிறார்களோ அல்லது இறந்து விடுகின்றனரோ அவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் மிக்க அழகான (முறையில்) உணவளிக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், உணவளிப்பவர்களில் எல்லாம் மிக்க மேலானவன்.
La yudkhilan nahum mud khalany yardawnah; wa innal laaha la 'Aleemun Haleem
ஆகவே, நிச்சயமாக அவன் அவர்களை அவர்கள் விரும்பக்கூடிய இடத்தில் சேர்த்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனும், மிக்க பொறுமையுடையவனாகவும் இருக்கின்றான்.
Zaalika wa man 'aaqaba bimisli maa 'ooqiba bihee summa bughiya 'alaihi la yansurannahul laah; innal laaha la 'Afuwwun Ghafoor
இவ்வாறே (காரியம் நடைபெறும்.) எவரேனும் தன்னை (எதிரி) துன்புறுத்திய மாதிரியே அந்தளவுக்கு அவனைத் துன்புறுத்தி விட்டு, பின்னும் அவனை (அந்த எதிரியை)க் கொடுமை செய்தால் நிச்சயமாக அல்லாஹ் (கொடுமைக்குள்ளான) அவனுக்கு உதவி புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கிறான்.