Yaa aiyuhal lazeena aamanuz kuroo ni'matallaahi 'alaikum iz hamma qawmun ai yabsutooo ilaikum aidiyahm fakaffa aidiyahum 'ankum wattaqullaah; wa'alal laahi fal yatawakalil mu'minoon
நம்பிக்கையாளர்களே! ஒரு வகுப்பார் உங்களுக்குத் தீங்கிழைக்கத் தீர்மானித்து தங்கள் கைகளை உங்களளவில் நீட்டியபொழுது, அல்லாஹ் அவர்களது கைகளை உங்களை விட்டுத் தடுத்து உங்களுக்குப் புரிந்த அருளை நீங்கள் நினைத்துப் பாருங்கள். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். மேலும், நம்பிக்கை கொண்ட அனைவரும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கவும்.
Wa laqad akhazal laahu meesaaqa Banee Israaa'eela wa ba'sanaa minhumus ani 'ashara naqeebanw wa qaalal laahu innee ma'akum la'in aqamtumus Salaata wa aataitumuz Zakaata wa aamantum bi Rusulee wa'azzartumoohum wa aqradtumul laaha qardan hasanal la ukaffiranna 'ankum saiyiaatikum wa la udkhilan nakum Jannaatin tajree min tahtihal anhaar; faman kafara ba'da zaalika minkum faqad dalla sawaaa'as Sabeel
நிச்சயமாக இஸ்ராயீலின் சந்ததிகளிடம் அல்லாஹ் உறுதிமொழி வாங்கியிருக்கின்றான். அன்றி, அவர்களிலிருந்தே பன்னிரண்டு தலைவர்களை (அப்போஸ்தலர்களை) நாம் அனுப்பி இருக்கின்றோம். (அவ்வாறு உறுதிமொழி வாங்கிய சமயத்தில் அவர்களை நோக்கி) "நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன். நீங்கள் தொழுகையை(த் தவறாது) கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கு உதவியும் புரிந்து, (கஷ்டத்திலிருப்பவர்களுக்கு) அல்லாஹ்வுக்காக அழகான முறையில் கடன் கொடுத்தால், நிச்சயமாக நான் (இவைகளை) உங்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக்கி வைத்து, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளிலும் உங்களை நுழைய வைப்பேன்" என்று அல்லாஹ் கூறினான். ஆகவே, உங்களில் எவரேனும் இதற்குப் பிறகும், நிராகரிப்பவராக ஆகிவிட்டால் நிச்சயமாக அவர் நேரான வழியில் இருந்து தவறிவிட்டார்.
Fabimaa naqdihim meesaa qahum la'annaahum wa ja'alnaa quloobahum qaasiyatany yuharrifoonal kalima 'ammawaadi'ihee wa nasoo hazzam mimmaa zukkiroo bih; khaaa'inatim minhum illaa qaleelam minhum fa'fu 'anhum wasfah; innal laaha yuhibbul muhsineen
அவர்கள் தங்களுடைய உறுதிமொழிக்கு மாறு செய்ததன் காரணமாக நாம் அவர்களைச் சபித்து, அவர்களுடைய உள்ளங்களை இறுகச்செய்து விட்டோம். அவர்கள் (தங்கள் வேத) வசனங்களை அவற்றின் (உண்மை) அர்த்தங்களிலிருந்து புரட்டு கின்றார்கள். அன்றி, (நம்முடைய இந்நபியைப் பற்றி) அதில் அவர்களுக்குக் கூறப்பட்டிருந்த பாகத்தையும் மறந்து விட்டார்கள். ஆகவே, (நபியே!) சிலரைத் தவிர அவர்களி(ல் பெரும்பாலோரி)ன் மோசடியை(ப் பற்றிய செய்தியை) நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டு வருவீர்கள். ஆகவே, இ(வ்)வ(ற்ப)ர்களை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து வாருங்கள். நிச்சயமாக அல்லாஹ் அழகிய பண்புடையவர்களை நேசிக்கின்றான்.
Wa minal lazeena qaalooo innaa nasaaraaa akhaznaa meesaaqahum fanasoo hazzam mimmaa zukkiroo bihee fa aghrainaa binahumul 'adaawata walbaghdaaa'a ilaa yawmil Qiyaamah; wa sawfa yunabbi'uhumul laahu bimaa kaanoo yasna'oon
அன்றி, எவர்கள் தங்களை "நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்" எனக் கூறுகின்றார்களோ அவர்களிடமும் (இவ்வாறே) நாம் உறுதிமொழி வாங்கியிருக்கின்றோம். எனினும், அவர்களும் (இந்நபியைப் பற்றி தங்கள் வேதத்தில்) தங்களுக்குக் கூறப்பட்டிருந்த பாகத்தை மறந்து விட்டார்கள். ஆதலால், அவர்களுக்குள் பகைமையையும் கோபத்தையும் மறுமை நாள் வரையில் (நீங்காதிருக்கும்படி) மூட்டி விட்டோம். (இவ்வுலகில்) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை (மறுமையில்) அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காண்பிப்பான்.
yaaa Ahlal kitaabi qad jaaa'akum Rasoolunaa yubaiyinu lakum kaseeram mimmmaa kuntum tukhfoona minal Kitaabi wa ya'foo 'an kaseer; qad jaaa'akum minal laahi noorunw wa Kitaabum Mubeen
வேதத்தையுடையவர்களே! உங்களிடம் நிச்சயமாக நம்முடைய ஒரு தூதர் வந்திருக்கிறார். வேதத்தில் நீங்கள் மறைத்துக் கொண்ட பல விஷயங்களை அவர் உங்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிக்கின்றார். மற்றும் பல விஷயங்களை (அவர் அறிந்திருந்தும் உங்களுக்கு கேவலம் உண்டாகக்கூடாது என்பதற்காக அவைகளைக் கூறாது) விட்டுவிடுகின்றார். நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒளியும் தெளிவுமுள்ள ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கின்றது.
Yahdee bihil laahu manit taba'a ridwaanahoo subulas salaami wa yukhrijuhum minaz zulumaati ilan noori bi iznihee wa yahdeehim ilaa Siraatim Mustaqeem
(உங்களில்) எவர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பின்பற்றுகின்றார்களோ அவர்களை அதன் மூலமாக அல்லாஹ் சமாதானத்திற்குரிய வழியில் செலுத்துகின்றான். அன்றி, இருள்களில் இருந்தும் வெளியேற்றித் தன் அருளைக் கொண்டு ஒளியின் பக்கம் கொண்டு வருகின்றான். தவிர, அவர்களை நேரான வழியில் செல்லும்படியும் செய்கின்றான்.
Laqad kafaral lazeena qaalooo innal laaha huwal maseehub nu Maryam; qul famany-yamliku minal laahi shai'an in araada ai yuhlikal Maseehab na Maryama wa ummahoo wa man fil ardi jamee'aa, wa lillaahi mmulkus samaawaati wal ardi wa maa bainahumaa; yakhluqu maa Yashaaa'; wakhluqu maa yashaaa'; wallaahu 'alaa kulli shai'in Qadeer
எவர்கள், மர்யமுடைய மகன் மஸீஹை அல்லாஹ்தான் என்று கூறுகின்றனரோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர் களாகவே இருக்கின்றனர். ஆகவே (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மர்யமுடைய மகன் மஸீஹையும், அவருடைய தாயையும், உலகத்திலுள்ள (மற்ற) அனைத்தையும் அல்லாஹ் அழித்துவிடக் கருதினால் (அவனைத் தடுக்க) எவன்தான் சிறிதேனும் சக்தி பெறுவான்? (ஏனென்றால், வானங்கள், பூமி இன்னும் இவைகளுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்பியதை படைக்கின்றான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
Wa qaalatil Yahoodu wan Nasaaraa nahnu abnaaa'ul laahi wa ahibbaaa'uh; qul falima yu'azzibukum bizunoobikum bal antum basharum mimmman khalaq; yaghfiru limai yashaaa'u wa yu'azzibu mai yashaaa'; wa lillaahi mulkus samaawaati wal ardi wa maa bainahumaa wa ilaihil maseer
யூதர்களும், கிறிஸ்தவர்களும் "நாங்கள் அல்லாஹ்வுடைய பிள்ளைகளாகவும் அவனுடைய அன்பிற்குரியவர்களாகவும் இருக்கின்றோம்" என்று கூறுகின்றனர். (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "அவ்வாறாயின் உங்கள் குற்றங்களுக்காக (இறைவன்) உங்களை ஏன் (அடிக்கடி துன்புறுத்தித்) தண்டிக்கிறான்? (உண்மை) அவ்வாறன்று. நீங்களும் அவனால் படைக்கப்பட்ட (மற்ற) மனிதர்கள் (போன்று)தான். (நீங்கள் அவனுக்குப் பிறந்த பிள்ளை களல்ல. ஆகவே உங்களிலும்) அவன் நாடியவர்களை மன்னிக்கின்றான்; அவன் நாடியவர்களை வேதனை செய்கின்றான். வானங்கள், பூமி இவைகளுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவனளவில்தான் (அனைவரும்) செல்ல வேண்டியதாக இருக்கின்றது.
Yaaa Ahlal Kitaabi qad jaaa'akum Rasoolunaa yubaiyinu lakum 'alaa fatratim minal Rusuli an taqooloo maa jaaa'anaa mim basheerinw wa laa nazeerin faqad jaaa'akum basheerunw wa nazeer; wallaahu 'alaa kulli shai'in Qadeer
வேதத்தையுடையவர்களே! (ஈஸாவுக்குப் பின்னர் இதுவரையில்) தூதர்கள் வராது தடைப்பட்டிருந்த காலத்தில் "நற்செய்தி கூறவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவும் கூடிய (ஒரு தூது)வர் எங்களிடம் வரவேயில்லை" என்று நீங்கள் (குறை) கூறாதிருக்க, (மார்க்கக் கட்டளைகளை) உங்களுக்குத் தெளிவாக அறிவிக்கக்கூடிய நம்முடைய (இத்)தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்துவிட்டார். அவர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவுமே இருக்கின்றார். அல்லாஹ், அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
Qa iz qaala Moosaa liqawmihee yaa qawmiz kuroo ni'matal laahi 'alaikum iz ja'ala feekum mulookanw wa aataakum maa lam yu'ti ahadam minal 'aalameen
அன்றி, மூஸா தன் சமூகத்தாரை நோக்கி "என் சமூகத்தாரே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையை நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவன் உங்களுக்குள் (மூஸா, ஹாரூன் போன்ற) நபிமார்களை ஏற்படுத்தி (எகிப்தியரிடம் அடிமைகளாய் இருந்த) உங்களை அரசர்களாகவும் ஆக்கி, உலகத்தில் மற்ற எவருக்குமே அளிக்காத (அற்புதங்களாகிய கடலைப் பிளந்து செல்லுதல், "மன்னுஸல்வா" என்ற உணவு போன்ற)வைகளையும் உங்களுக்கு அளித்திருக்கின்றான்" என்று கூறியதை (நபியே! நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள்.