Skip to main content

قُلْ
கூறுவீராக
تَعَالَوْا۟
வாருங்கள்
أَتْلُ
ஓதுகிறேன்
مَا حَرَّمَ
எதை/தடை செய்தான்
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
عَلَيْكُمْۖ
உங்கள் மீது
أَلَّا تُشْرِكُوا۟
இணையாக்காதீர்கள்
بِهِۦ
அவனுக்கு
شَيْـًٔاۖ
எதையும்
وَبِٱلْوَٰلِدَيْنِ
இன்னும் தாய் தந்தையுடன்
إِحْسَٰنًاۖ
அழகிய முறையில் நடந்துகொள்ளுங்கள்
وَلَا تَقْتُلُوٓا۟
இன்னும் கொல்லாதீர்கள்
أَوْلَٰدَكُم
உங்கள் பிள்ளைகளை
مِّنْ إِمْلَٰقٍۖ
வறுமையினால்
نَّحْنُ
நாம்
نَرْزُقُكُمْ
உணவளிக்கிறோம்/உங்களுக்கு
وَإِيَّاهُمْۖ
இன்னும் அவர்களுக்கு
وَلَا تَقْرَبُوا۟
இன்னும் நெருங்காதீர்கள்
ٱلْفَوَٰحِشَ
மானக்கேடானவற்றை
مَا
எது
ظَهَرَ
வெளிப்படையானது
مِنْهَا
அவற்றில்
وَمَا بَطَنَۖ
இன்னும் மறைந்தது
وَلَا تَقْتُلُوا۟
இன்னும் கொல்லாதீர்கள்
ٱلنَّفْسَ
உயிரை
ٱلَّتِى
எது
حَرَّمَ
தடை செய்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
إِلَّا بِٱلْحَقِّۚ
நியாயமின்றி
ذَٰلِكُمْ
அது
وَصَّىٰكُم
உபதேசிக்கிறான்/உங்களுக்கு
بِهِۦ
இவற்றை
لَعَلَّكُمْ تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிவதற்காக

Qul ta'aalaw atlu maa harrama Rabbukum 'alaikum allaa tushrikoo bihee shai'anw wa bilwaalidaini ihsaananw wa laa taqtulooo aw alaadakum min imlaaq; nahnu narzuqukum wa iyyaahum wa laa taqrabul fawaahisha maa zahara minhaa wa maa batana wa laa taqtulun nafsal latee harramal laahu illaa bilhaqq; zaalikum wassaakum bihee la'allakum ta'qiloon

(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடுப்பவற்றை(யும் ஏவியிருப்பவற்றையும்) நான் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறேன். (அவையாவன:) அவனுக்கு யாதொன்றையும் நீங்கள் இணையாக்காதீர்கள். (உங்கள்) தாய் தந்தையுடன் மிக அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள் (அவர்களுக்கு உதவி செய்யுங்கள்). வறுமைக்குப் பயந்து உங்கள் பிள்ளைகளை நீங்கள் கொலை செய்யாதீர்கள். (ஏனென்றால்,) உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம். இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ உள்ள மானக்கேடான விஷயங்களில் எதற்கும் நெருங்காதீர்கள். (கொலை செய்யக்கூடாதென்று) அல்லாஹ் தடுத்துள்ள எந்த மனிதனையும் நியாயமின்றி கொலை செய்யாதீர்கள். நீங்கள் (தவறு செய்யாது) உணர்ந்து கொள்வதற்காக இவற்றை (இறைவன்) உங்களுக்கு (விவரித்து) உபதேசிக்கின்றான்.

Tafseer

وَلَا تَقْرَبُوا۟
நெருங்காதீர்கள்
مَالَ
செல்வத்தை
ٱلْيَتِيمِ
அநாதையின்
إِلَّا
தவிர
بِٱلَّتِى هِىَ
எதைக்கொண்டு/அது
أَحْسَنُ
மிக அழகிய வழி
حَتَّىٰ
வரை
يَبْلُغَ
அவர் அடைவார்
أَشُدَّهُۥۖ
அவருடைய பருவத்தை
وَأَوْفُوا۟
இன்னும் முழுமைப்படுத்துங்கள்
ٱلْكَيْلَ
அளவையை
وَٱلْمِيزَانَ
இன்னும் நிறுவையை
بِٱلْقِسْطِۖ
நீதமாக
لَا نُكَلِّفُ
நாம் சிரமம் (சட்டம்) கொடுப்பதேயில்லை
نَفْسًا
ஓர் ஆன்மாவிற்கு
إِلَّا وُسْعَهَاۖ
தவிர/அதன் சக்திக்கு உட்பட்டே தவிர
وَإِذَا قُلْتُمْ
இன்னும் நீங்கள் கூறினால்
فَٱعْدِلُوا۟
நீதமாக கூறுங்கள்
وَلَوْ كَانَ
அவர் இருந்தாலும்
ذَا قُرْبَىٰۖ
உறவினராக
وَبِعَهْدِ
இன்னும் வாக்குறுதியை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
أَوْفُوا۟ۚ
நிறைவேற்றுங்கள்
ذَٰلِكُمْ وَصَّىٰكُم
இவை/உபதேசித்தான்/உங்களுக்கு
بِهِۦ
இவற்றைக் கொண்டு
لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக

Wa laa taqraboo maalal yateemi illaa billatee hiyaa ahsanu hattaa yablugha ashuddahoo wa awful kaila walmeezaana bilqisti laa nukallifu nafsan illaa wus'ahaa wa izaa qultum fa'diloo wa law kaana zaa qurbaa wa bi 'ahdil laahi awfoo; zaalikum wassaakum bihee la'allakum tazakkarron

"அநாதைகளின் பொருளை அவர்கள் பருவமடையும் வரையில் நியாயமான முறையிலன்றி தொடாதீர்கள். அளவை (சரியான அளவுகொண்டு) முழுமையாக அளங்கள். எடையை நீதமாக நிறுத்துங்கள். யாதொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நாம் நிர்ப்பந்திப்பதேயில்லை. நீங்கள் எதைக் கூறியபோதிலும் (அதனால் பாதிக்கப்படுபவர்கள்) உங்கள் உறவினர்கள் ஆயினும் (சரியே!) நீதத்தையே கூறுங்கள். நீங்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுங்கள். நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவே இவற்றை அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்.

Tafseer

وَأَنَّ
நிச்சயமாக
هَٰذَا
இது
صِرَٰطِى
என் பாதை
مُسْتَقِيمًا
நேரானது
فَٱتَّبِعُوهُۖ
அதைப்பின்பற்றுங்கள்
وَلَا تَتَّبِعُوا۟
பின்பற்றாதீர்கள்
ٱلسُّبُلَ
வழிகளை
فَتَفَرَّقَ
அவை பிரித்துவிடும்
بِكُمْ
உங்களை
عَن سَبِيلِهِۦۚ
அவனுடைய வழியிலிருந்து
ذَٰلِكُمْ
இவை
وَصَّىٰكُم بِهِۦ
உபதேசிக்கிறான் /உங்களுக்கு/இவற்றைக் கொண்டு
لَعَلَّكُمْ تَتَّقُونَ
நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக

Wa annna haazaa Siraatee mustaqeeman fattabi'oohu wa laa tattabi'us subula fatafarraqa bikum 'an sabeelih; zaalikum wassaakum bihee la'allakum tattaqoon

"நிச்சயமாக இதுதான் என்னுடைய நேரான வழியாகும். அதனையே நீங்கள் பின்பற்றுங்கள்; மற்ற வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அல்லாஹ்வுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆவதற்காக இறைவன் இவற்றை உங்களுக்கு உபதேசிக்கின்றான்" (என்று கூறுங்கள்).

Tafseer

ثُمَّ
பிறகு
ءَاتَيْنَا
கொடுத்தோம்
مُوسَى
மூஸாவிற்கு
ٱلْكِتَٰبَ
வேதத்தை
تَمَامًا
நிறைவாக
عَلَى ٱلَّذِىٓ
மீது/எவர்
أَحْسَنَ
நல்லறம் புரிந்தார்
وَتَفْصِيلًا
இன்னும் விவரிப்பதற்காக
لِّكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
وَهُدًى
இன்னும் நேர்வழியாக
وَرَحْمَةً
இன்னும் கருணையாக
لَّعَلَّهُم
ஆவதற்காக/அவர்கள்
بِلِقَآءِ
சந்திப்பை
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்வார்கள்

Summa aatainaa Moosal Kitaaba tammaaman 'alal lazeee ahsana wa tafseelal likulli shai'inw wa hudanw wa rahmatal la'allahum biliqaaa'i Rabbihim yu'minoon

(தங்களின் செயல்களையும் பண்புகளையும்) அழகுபடுத்திக் கொண்டவர் மீது (நம்முடைய அருட்கொடையை) முழுமைபடுத்தி வைப்பதற்காக இதற்கு பிறகும் நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்தோம். அதில் ஒவ்வொரு விஷயமும் தெளிவாக விவரிக்கப் பட்டுள்ளது. அன்றி, (அது) நேரான வழியாகவும் (இறைவனின்) அருளாகவும் இருக்கிறது. அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்போமென்று உறுதி கொள்ளும் பொருட்டே (அதனைக் கொடுத்தோம்.)

Tafseer

وَهَٰذَا
இது
كِتَٰبٌ
வேதம்
أَنزَلْنَٰهُ
நாமே இறக்கினோம்/இதை
مُبَارَكٌ
அருள்வளமிக்கது
فَٱتَّبِعُوهُ
ஆகவே, பின்பற்றுங்கள்/இதை
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
لَعَلَّكُمْ تُرْحَمُونَ
நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக

Wa haazaa Kitaabun anzalnaahu Mubaarakun fattabi'oohu wattaqoo la'al lakum urhamoon

(மனிதர்களே!) இதுவும் வேத நூலாகும். இதனை நாமே இறக்கி வைத்தோம். (இது) மிக்க பாக்கியமுடையது. ஆகவே, இதனையே நீங்கள் பின்பற்றுங்கள். அன்றி (அவனுக்குப்) பயந்து (பாவத்திலிருந்து விலகிக்) கொள்ளுங்கள். அதனால் அவனது அருளுக்குள்ளாவீர்கள்.

Tafseer

أَن تَقُولُوٓا۟
நீங்கள் கூறாதிருப்பதற்காக
إِنَّمَآ أُنزِلَ
இறக்கப்பட்டதெல்லாம்
ٱلْكِتَٰبُ
வேதம்
عَلَىٰ
மீது
طَآئِفَتَيْنِ
இரு கூட்டங்கள்
مِن قَبْلِنَا
நமக்கு முன்னர்
وَإِن كُنَّا
நிச்சயம் இருந்தோம்
عَن دِرَاسَتِهِمْ
அவர்களின் படிப்பை விட்டு
لَغَٰفِلِينَ
கவனமற்றவர்களாகவே

An taqooloo innammaaa unzilal Kitaabu 'alaa taaa'ifataini min qablinaa wa in kunnaa 'an diraasatihim laghaafileen

(இணைவைத்து வணங்கும் அரபிகளே!) "நமக்கு முன்னர் (யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய) இரு கூட்டத்தினர் மீது (மட்டுமே) வேதம் அருளப்பட்டது. ஆகவே (அவர்களுடைய மொழி எங்களுக்குத் தெரியாததால்) நாங்கள் அதனைப் படிக்கவும், படித்துக் கேட்கவும் முடியாமல் பராமுகமாகி விட்டோம்" என்று நீங்கள் கூறாதிருக்கவும்.

Tafseer

أَوْ
அல்லது
تَقُولُوا۟
நீங்கள் கூறாதிருப்பதற்காக
لَوْ أَنَّآ
இருந்தால்/நிச்சயமாக நாம்
أُنزِلَ
இறக்கப்பட்டது
عَلَيْنَا
நம்மீது
ٱلْكِتَٰبُ
வேதம்
لَكُنَّآ
இருந்திருப்போம்
أَهْدَىٰ
அதிகம் நேர்வழிபெற்றவர்(கள்)
مِنْهُمْۚ
அவர்களை விட
فَقَدْ جَآءَكُم
வந்துவிட்டது/உங்களிடம்
بَيِّنَةٌ
மிகத் தெளிவான சான்று
مِّن رَّبِّكُمْ
உங்கள் இறைவனிடமிருந்து
وَهُدًى
இன்னும் நேர்வழி
وَرَحْمَةٌۚ
இன்னும் கருணை
فَمَنْ أَظْلَمُ
ஆகவே யார்/மிகப்பெரிய அநியாயக்காரன்
مِمَّن
எவனைவிட
كَذَّبَ
பொய்ப்பித்தான்
بِـَٔايَٰتِ
வசனங்களை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَصَدَفَ
இன்னும் விலகினான்
عَنْهَاۗ
அவற்றை விட்டு
سَنَجْزِى
கூலி கொடுப்போம்
ٱلَّذِينَ
எவர்கள்
يَصْدِفُونَ
விலகுவார்கள்
عَنْ ءَايَٰتِنَا
நம் வசனங்களை விட்டு
سُوٓءَ
கெட்ட
ٱلْعَذَابِ
வேதனை
بِمَا كَانُوا۟
அவர்கள் விலகிக்கொண்டிருந்ததன் காரணமாக

Aw taqooloo law annaaa unzila 'alainal kitaabu lakunnaaa ahdaa minhum; faqad jaaa'akum baiyinatum mir Rabbikum wa hudanw wa rahmah; faman azlamu mimman kazzaba bi Aayaatil laahi wa sadaf 'anhaa; sanajzil lazeena yasdifoona 'an Aayaatinaa sooo'al 'azaabi bimaa kaanoo yasdifoon

அல்லது "நிச்சயமாக நமக்காக ஒரு வேதம் அருளப் பட்டிருந்தால் நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம்" என்று நீங்கள் கூறாதிருப்பதற்காக (இந்த வேதத்தை அருளினோம். ஆகவே) உங்கள் இறைவனிடம் இருந்து, மிகத் தெளிவான (வசனங்களையுடைய) வேதம் உங்களிடம் வந்துவிட்டது. (அது) நேரான வழியாகவும் (இறைவனுடைய) அருளாகவும் இருக்கின்றது. ஆகவே, எவன் அல்லாஹ்வுடைய (இத்தகைய) வசனங்களைப் பொய்யாக்கி அவற்றிலிருந்து விலகிக் கொள்கிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? நம்முடைய வசனங்களிலிருந்து (இவ்வாறு) விலகிக் கொண்டவர்களுக்கு அவர்கள் விலகிக் கொண்டதன் காரணமாக நாம் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்.

Tafseer

هَلْ يَنظُرُونَ
அவர்கள் எதிர்பார்க்கின்றனரா?
إِلَّآ أَن
தவிர/அவர்களிடம் வருவதை
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
أَوْ
அல்லது
يَأْتِىَ
வருவதை
رَبُّكَ
உம் இறைவன்
أَوْ
அல்லது
يَأْتِىَ
வருவதை
بَعْضُ
சில
ءَايَٰتِ
அத்தாட்சிகளில்
رَبِّكَۗ
உம் இறைவனின்
يَوْمَ
நாளில்
يَأْتِى
வரும்
بَعْضُ
சில
ءَايَٰتِ
அத்தாட்சிகளில்
رَبِّكَ
உம் இறைவனின்
لَا يَنفَعُ
பலனளிக்காது
نَفْسًا
ஓர் ஆன்மாவிற்கு
إِيمَٰنُهَا
அதன் நம்பிக்கை
لَمْ تَكُنْ
நம்பிக்கை கொண்டிருக்கவில்லை
مِن قَبْلُ
(அதற்கு) முன்னர்
أَوْ
அல்லது
كَسَبَتْ
செய்தது
فِىٓ إِيمَٰنِهَا
தன் நம்பிக்கையில்
خَيْرًاۗ
ஒரு நன்மையை
قُلِ
கூறுவீராக
ٱنتَظِرُوٓا۟
எதிர்பாருங்கள்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
مُنتَظِرُونَ
எதிர்பார்க்கிறோம்

hal yanzuroona illaaa an taatiyahumul malaaa'ikatu aw yaatiya Rabbuka aw yaatiya ba'du Aayaati Rabbik; yawma yaatee ba'du Aayaati Rabbika laa yanfa'u nafsan eemaanuhaa lam takun aamanat min qablu aw kasabat feee eemaanihaa khairaa; qulin tazirooo innaa muntaziroon

மலக்குகள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உங்களுடைய இறைவனே (அவர்களிடம்) வருவதையோ அல்லது உங்களுடைய இறைவனின் பெரியதோர் அத்தாட்சி வருவதையோ அன்றி (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உங்கள் இறைவனின் பெரியதோர் அத்தாட்சி(யாகிய இறுதி நாள்) வருவதற்கு முன்னர் நம்பிக்கை கொள்ளாதிருந்து அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் யாதொரு நற்செயலும் செய்யாதிருந்துவிட்டு அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை யாதொரு பலனையும் அளிக்காது. ஆகவே (அவர்களை நோக்கி "அப்பெரிய அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நாமும் எதிர்பார்த்திருக்கின்றோம்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
فَرَّقُوا۟
பிரித்து விட்டார்கள்
دِينَهُمْ
தங்கள் மார்க்கத்தை
وَكَانُوا۟
இன்னும் ஆகிவிட்டார்கள்
شِيَعًا
பிரிவினர்களாக
لَّسْتَ
நீர் இல்லை
مِنْهُمْ
அவர்களுடன்
فِى شَىْءٍۚ
ஒரு விஷயத்திலும்
إِنَّمَآ
எல்லாம்
أَمْرُهُمْ
காரியம் அவர்களுடைய
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்தான்
ثُمَّ
பிறகு
يُنَبِّئُهُم
அறிவிப்பான்/அவர்களுக்கு
بِمَا كَانُوا۟
அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை

Innal lazeena farraqoo deenahum wa kaanoo shiya'allasta minhum fee shai'; innamaaa amruhum ilallaahi summma yunabbi'uhum bimaa kaanoo yaf'aloon

எவர்கள் தங்கள் மார்க்கத்தை (தங்கள் இஷ்டப்படி பலவாறாக)ப் பிரித்து (அவர்களும்) பல பிரிவினராகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உங்களுக்கு யாதொரு சம்பந்தமும் இல்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே இருக்கின்றது. அவர்கள் செய்துகொண்டிருந்த (இத்தீய)வற்றைப் பற்றி பின்னர் அவன் அவர்களுக்கு அறிவித்துவிடுவான்.

Tafseer

مَن
எவர்
جَآءَ
செய்தார் (வந்தார்)
بِٱلْحَسَنَةِ
நன்மையை(க் கொண்டு)
فَلَهُۥ عَشْرُ
அவருக்கு/பத்து
أَمْثَالِهَاۖ
அது போன்ற(வை)
وَمَن
எவர்
جَآءَ
செய்தார் (வந்தார்)
بِٱلسَّيِّئَةِ
ஒரு தீமையை(க் கொண்டு)
فَلَا يُجْزَىٰٓ
கூலி கொடுக்கப்பட மாட்டார்
إِلَّا مِثْلَهَا
தவிர/அது போன்றே
وَهُمْ
அவர்கள்
لَا يُظْلَمُونَ
அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்

man jaaa'a bilhasanati falahoo 'ashru amsaalihaa wa man jaaa'a bissaiyi'ati falaa yujzaaa illaa mislahaa wa hum laa yuzlamoon

எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. எவரேனும் ஒரு தீமையைச் செய்தால் அதைப் போன்றதேயன்றி (அதிகமாக) அவருக்குக் கூலி கொடுக்கப்படமாட்டாது. (குற்றத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்தோ அல்லது நன்மைக்குரிய கூலியைக் குறைத்தோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

Tafseer