Skip to main content

فَلَمَّآ أَلْقَوْا۟
ஆகவே அவர்கள் எறிந்தபோது
قَالَ
கூறினார்
مُوسَىٰ
மூஸா
مَا جِئْتُم
நீங்கள் செய்தவை
ٱلسِّحْرُۖ
சூனியம்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
سَيُبْطِلُهُۥٓۖ
அழிப்பான்/அவற்றை
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَا يُصْلِحُ
சீர்படுத்த மாட்டான்
عَمَلَ
செயலை
ٱلْمُفْسِدِينَ
விஷமிகளின்

Falammaaa alqaw qaala Moosaa maa ji'tum bihis sihru innal laaha sa yubtiluhoo innal laaha laa yuslihu 'amalal mufsideen

(அவ்வாறு) அவர்கள் எறி(ந்து சூனியம் செய்)யவே, மூஸா (அவர்களை நோக்கி) "நீங்கள் செய்தவை அனைத்தும் (வெறும்) சூனியம்தான். அதிசீக்கிரத்தில் நிச்சயமாக அல்லாஹ் இவைகளை அழித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (சூனியம் செய்து) விஷமம் செய்பவர்களின் செயலை சீர்படச் செய்வதில்லை.

Tafseer

وَيُحِقُّ
இன்னும் நிரூபிப்பான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْحَقَّ
உண்மையை
بِكَلِمَٰتِهِۦ
தன் கட்டளைகளைக் கொண்டு
وَلَوْ كَرِهَ
வெறுத்தாலும் சரியே
ٱلْمُجْرِمُونَ
குற்றவாளிகள்

Wa yuhiqqul laahul haqqa bi Kalimaatihee wa law karihal mujrimoon

"நிச்சயமாக, அல்லாஹ் தன் அத்தாட்சிகளைக் கொண்டு சத்தியத்தை நிலைநாட்டியே தீருவான். (அதனைக்) குற்றவாளிகள் வெறுத்தபோதிலும் சரியே" என்று கூறினார். (அவர் கூறியவாறே அவர்கள் செய்த சூனியங்கள் அனைத்தும் அழிந்து விட்டன.)

Tafseer

فَمَآ ءَامَنَ
நம்பிக்கை கொள்ளவில்லை
لِمُوسَىٰٓ
மூஸாவை
إِلَّا
தவிர
ذُرِّيَّةٌ
ஒரு சந்ததியினர்
مِّن قَوْمِهِۦ
அவரின்சமுதாயத்தில்
عَلَىٰ خَوْفٍ
பயந்து
مِّن فِرْعَوْنَ
ஃபிர்அவ்ன்
وَمَلَإِي۟هِمْ
இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்கள்
أَن يَفْتِنَهُمْۚ
அவன் துன்புறுத்துவதை/தங்களை
وَإِنَّ
நிச்சயமாக
فِرْعَوْنَ
ஃபிர்அவ்ன்
لَعَالٍ
சர்வாதிகாரி
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَإِنَّهُۥ
இன்னும் நிச்சயமாக அவன்
لَمِنَ ٱلْمُسْرِفِينَ
வரம்பு மீறக்கூடியவர்களில்

Famaaa aamana li-Moosaaa illaa zurriyyatum min qawmihee 'alaa khawfim min Fir'awna wa mala'ihim ai yaftinahum; wa inna Fir'awna la'aalin fil ardi wa innahoo laminal musrifeen

(இதனைக் கண்ணுற்ற பின்னரும்) மூஸாவை அவர் இனத்தவரில் சிலர்தாம் நம்பிக்கை கொண்டனர். அவர்களும் தங்களை ஃபிர்அவ்னும், அவனுடைய இனத்தவர்களும் துன்புறுத்து வார்களோ என்று பயந்துகொண்டே இருந்தனர். ஏனென்றால், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அத்தேசத்தில் மிகச் சக்தி வாய்ந்தவனாக இருந்ததால் வரம்பு மீறிக் (கொடுமை செய்து) கொண்டிருந்தான்.

Tafseer

وَقَالَ
கூறினார்
مُوسَىٰ
மூஸா
يَٰقَوْمِ
என் சமுதாயமே
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ءَامَنتُم
நம்பிக்கை கொண்டீர்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
فَعَلَيْهِ
அவன் மீதே
تَوَكَّلُوٓا۟
நம்பிக்கை வையுங்கள்
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
مُّسْلِمِينَ
முஸ்லிம்களாக

Wa qaala Moosaa yaa qawmi in kuntum aamantum billaahi fa'alaihi tawakkalooo in kuntum muslimeen

மூஸா (தன் மக்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்டு, உண்மையாகவே நீங்கள் அவனுக்கு முற்றிலும் வழிப்படுகிறவர் களாகவும் இருந்தால், முற்றிலும் அவனையே நம்பி (அவனிடமே உங்கள் காரியங்கள் அனைத்தையும் ஒப்படைத்து) விடுங்கள்" என்று கூறினார்.

Tafseer

فَقَالُوا۟
கூறினார்கள்
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீதே
تَوَكَّلْنَا
நம்பிக்கைவைத்தோம்
رَبَّنَا
எங்கள் இறைவா
لَا تَجْعَلْنَا
எங்களை ஆக்கிவிடாதே
فِتْنَةً
சோதனையாக
لِّلْقَوْمِ
சமுதாயத்திற்கு
ٱلظَّٰلِمِينَ
அநியாயம் புரிகின்றனர்

Faqaaloo 'alal laahi tawakkalnaa Rabbanaa laa taj'alnaa fitnatal lilqawmiz zaalimeen

அதற்கவர்கள், "(அவ்வாறே) அல்லாஹ்விடம் எங்கள் காரியங்கள் அனைத்தையும் ஒப்படைத்து விட்டோம். எங்கள் இறைவனே! நீ எங்களை அநியாயம் செய்யும் மக்களின் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிவிடாதே!" என்று பிரார்த்தித்தார்கள்.

Tafseer

وَنَجِّنَا
பாதுகாத்துக் கொள்/எங்களை
بِرَحْمَتِكَ
உன் அருளால்
مِنَ
இருந்து
ٱلْقَوْمِ
சமுதாயம்
ٱلْكَٰفِرِينَ
நிராகரிக்கின்றவர்கள்

Wa najjinaa birahmatika minal qawmil kaafireen

(எங்கள் இறைவனே!) "நிராகரிக்கும் மக்களிடமிருந்து உன் அருளைக் கொண்டு நீ எங்களை பாதுகாத்துக் கொள்வாயாக!" (என்றும் பிரார்த்தித்தார்கள்.)

Tafseer

وَأَوْحَيْنَآ
வஹீ அறிவித்தோம்
إِلَىٰ مُوسَىٰ
மூஸாவுக்கு
وَأَخِيهِ
இன்னும் அவரது சகோதரரை
أَن تَبَوَّءَا
நீங்கள் இருவரும் @ஷஹிளூமீலிs
لِقَوْمِكُمَا
உங்கள் சமுதாயத்திற்காக
بِمِصْرَ
மிஸ்ரில்
بُيُوتًا
வீடுகளை
وَٱجْعَلُوا۟
இன்னும் ஆக்குங்கள்
بُيُوتَكُمْ
உங்கள் வீடுகளை
قِبْلَةً
தொழுமிடங்களாக
وَأَقِيمُوا۟
இன்னும் நிலைநிறுத்துங்கள்
ٱلصَّلَوٰةَۗ
தொழுகையை
وَبَشِّرِ
நற்செய்தி கூறுவீராக
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு

Wa awhainaaa ilaa Moosaa wa akheehi an tabaw wa aa liqawmikuma bi Misra bu yootanw waj'aloo bu yootakum qiblatanw wa aqeemus Salaah; wa bashshiril mu'mineen

(ஆகவே,) மூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் நாம் வஹீ அறிவித்தோம். "நீங்கள் இருவரும் உங்களுடைய மக்களுக்காக "மிஸ்ரில்" பல வீடுகளை அமைத்துக் கொண்டு, உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக்கி (அவற்றில்) தவறாது தொழுது வாருங்கள். அன்றி, (நீங்கள் விடுதலையடைந்து விடுவீர்கள் என்றும்) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்."

Tafseer

وَقَالَ مُوسَىٰ
மூஸா கூறினார்
رَبَّنَآ
எங்கள் இறைவா
إِنَّكَ
நிச்சயமாக நீ
ءَاتَيْتَ
கொடுத்தாய்
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுக்கு
وَمَلَأَهُۥ
இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்களுக்கு
زِينَةً
அலங்காரத்தை
وَأَمْوَٰلًا
இன்னும் செல்வங்கள்
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையில்
ٱلدُّنْيَا
இவ்வுலகம்
رَبَّنَا
எங்கள் இறைவா
لِيُضِلُّوا۟
அவர்கள் வழிகெடுப்பதற்கு
عَن سَبِيلِكَۖ
உன் பாதையிலிருந்து
رَبَّنَا
எங்கள் இறைவா
ٱطْمِسْ
நாசமாக்கு
عَلَىٰٓ أَمْوَٰلِهِمْ
அவர்களின் பொருள்களை
وَٱشْدُدْ
இன்னும் இறுக்கிவிடு
عَلَىٰ قُلُوبِهِمْ
உள்ளங்களை/அவர்களுடைய
فَلَا يُؤْمِنُوا۟
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
حَتَّىٰ
வரை
يَرَوُا۟
அவர்கள் காண்பர்
ٱلْعَذَابَ
வேதனையை
ٱلْأَلِيمَ
துன்புறுத்தக்கூடியது

Wa qaala Mosaa Rabbanaaa innaka aataita Fir'awna wa mala ahoo zeenatanw wa amwaalan fil hayaatid dunyaa Rabbanaa liyudillo 'ansabeelika Rabbanat mis 'alaaa amwaalihim washdud 'alaa quloobihim falaa yu'minoo hatta yarawul 'azaabal aleem

மூஸா (தன் இறைவனை நோக்கி,) "என் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய மக்களுக்கும் (ஆடம்பர) அலங்காரங்களையும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய பொருள்களையும் அளித்திருக்கிறாய். ஆகவே, எங்கள் இறைவனே! அவர்கள் (அவற்றைக் கொண்டு மற்ற மனிதர்களை) உன்னுடைய வழியிலிருந்து திருப்பி விடுகின்றனர். எங்கள் இறைவனே! அவர்களின் பொருள்களை நாசமாக்கி, அவர்களுடைய உள்ளங்களையும் கடினமாக்கி விடு. துன்புறுத்தும் வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் வரையில், அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்" என்று பிரார்த்தித்தார்.

Tafseer

قَالَ
கூறினான்
قَدْ أُجِيبَت
ஏற்கப்பட்டு விட்டது
دَّعْوَتُكُمَا
பிரார்த்தனை / உங்கள் இருவரின்
فَٱسْتَقِيمَا
நீங்கள் இருவரும் உறுதியாக இருங்கள்
وَلَا تَتَّبِعَآنِّ
இன்னும் நீங்கள் இருவரும் பின்பற்றாதீர்கள்
سَبِيلَ
பாதையை
ٱلَّذِينَ
எவர்கள்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Qaala qad ujeebad da'watukumaa fastaqeemaa wa laa tattabi'aaanni sabeelal lazeena laaya'lamoon

அதற்கு (இறைவன், "மூஸா ஹாரூனே!) உங்கள் இருவரின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு விட்டது. நீங்கள் உறுதியாக இருங்கள்; அறிவில்லாத மக்களின் வழியை நீங்கள் பின்பற்றி விடாதீர்கள்" என்று கூறினான்.

Tafseer

وَجَٰوَزْنَا
இன்னும் கடக்க வைத்தோம்
بِبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ராயீலின் சந்ததிகளை/கடலை
فَأَتْبَعَهُمْ
பின் தொடர்ந்தனர்/ அவர்களை
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
وَجُنُودُهُۥ
இன்னும் அவனுடைய ராணுவங்கள்
بَغْيًا
அழிச்சாட்டியம்
وَعَدْوًاۖ
இன்னும் வரம்பு மீறி
حَتَّىٰٓ إِذَآ
இறுதியாக/போது
أَدْرَكَهُ
பிடித்தது/அவனை
ٱلْغَرَقُ
மூழ்குதல்
قَالَ ءَامَنتُ
கூறினான்/நம்பிக்கை கொண்டேன்
أَنَّهُۥ
நிச்சயமாக செய்தி
لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
இறைவன்
إِلَّا ٱلَّذِىٓ
தவிர/எத்தகையவன்
ءَامَنَتْ
நம்பிக்கை கொண்டா(ர்க)ள்
بِهِۦ بَنُوٓا۟
அவனை / இஸ்ராயீலின் சந்ததிகள்
وَأَنَا۠
இன்னும் நான்
مِنَ ٱلْمُسْلِمِينَ
முஸ்லிம்களில்

Wa jaawaznaa bi Baneee Israaa'eelal bahra fa atba'ahum Fir'awnu wa junooduhoo baghyanw wa 'adwan hattaaa izaaa adrakahul gharaqu qaala aamantu annnahoo laaa ilaaha illal lazeee aamanat bihee Banooo Israaa'eela wa ana minal muslimeen

இஸ்ராயீலின் சந்ததிகள் கடலைக் கடக்கும்படி நாம் செய்தோம். ஃபிர்அவ்னும் அவனுடைய ராணுவங்களும் அளவு கடந்த கொடுமை செய்ய(க் கருதி) அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள். (ஆகவே, அவர்களை நாம் கடலில் மூழ்கடித்து விட்டோம்.) ஃபிர்அவ்ன் மூழ்க ஆரம்பிக்கவே, அவன் "இஸ்ராயீலின் சந்ததிகள் நம்பிக்கை கொண்டிருக்கும் இறைவனை நானும் நம்பிக்கை கொள்கிறேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; அன்றி, நான் அவனுக்கு முற்றிலும் வழிபடுகிறேன்" என்று (அபயமிட்டு) அலறினான்.

Tafseer