Wa im min shai'in illaa 'indanaa khazaaa 'inuhoo wa maa nunazziluhooo illaa biqadarim ma'loom
ஒவ்வொரு பொருளின் பொக்கிஷங்களும் நம்மிடமே இருக்கின்றன. எனினும், அவற்றை (அந்தந்தக் காலத்தில் அவற்றிற்குக்) குறிப்பிட்ட அளவில் தான் நாம் இறக்கி வைக்கிறோம்.
Wa arsalnar riyaaha la waaqiha fa anzalnaa minas samaaa'i maaa'an fa asqai naakumoohu wa maaa antum lahoo bikhaazineen
மேகம் கருக்கொள்ளும்படியான காற்றையும் நாமே அனுப்பி வைக்கிறோம். அம்மேகத்திலிருந்து மழையையும் நாமே பொழியச் செய்கிறோம். அதனை நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். (மழையின் நீரை மேகத்தில்) நீங்கள் சேகரித்து வைக்கவில்லை; (நாம்தான் சேகரிக்கிறோம்.)
Wa innnaa la nahnu nuhyee wa numeetu wa nahnul waarisoon
(உங்களுக்கு) நிச்சயமாக நாம்தான் உயிர் கொடுக்கின்றோம்; நாமே (உங்களை) மரணிக்கச் செய்வோம். அனைத்திற்கும் நாமே வாரிசுகள்! (சொந்தக்காரர்கள்).
Wa la qad 'alimnal mustaqdimeena minkum wa laqad 'alimnal mustaakhireen
உங்களுக்கு முன் சென்றவர்களையும் நிச்சயமாக நாம் அறிவோம்; (உங்களுக்குப்) பின் வரக்கூடியவர்களையும் நிச்சயமாக நாம் அறிவோம்.
Wa inna Rabbaka Huwa yahshuruhum; innahoo Hakeem 'Aleem
(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன்தான் இவர்கள் அனைவரையும் (விசாரணைக்காக மறுமையில் தன் முன்) கூட்டுவான். நிச்சயமாக அவன் ஞானமுடையவனாகவும் (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
Wa laqad khalaqnal insaana min salsaalim min hama im masnoon
(காய்ந்தால் "கன் கன்" என்று) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் நிச்சயமாக நாமே (உங்கள் மூலப் பிதாவாகிய முதல்) மனிதனை படைத்தோம்.
Waljaaanna khalaqnaahu min qablu min naaris samoom
அதற்கு முன்னதாக ஜின்களைக் கொடிய உஷ்ணமுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம்.
Wa iz qaala Rabbuka lilmalaaa' ikati innee khaaliqum basharam min salsaalim min hama im masnoon
(நபியே!) உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி "நிச்சயமாக நான், மனிதனை (காய்ந்தால்) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் படைக்கப் போகிறேன்" என்று கூறிய சமயத்தில்,
Fa izaa sawwaituhoo wa nafakhtu feehi mir roohee faqa'oo lahoo saajideen
"நான் மனிதனை உருவாக்கி அதில் என் (படைப்புக்கு வேண்டிய) உயிரைப் புகுத்தினால் அவருக்கு (மரியாதை செலுத்த) நீங்கள் சிரம் பணியுங்கள்" (என்று கட்டளையிட்டான்.)
Fasajadal malaaa'ikatu kulluhum ajma'oon
அவ்வாறே மலக்குகள் அனைவரும் (அவருக்கு மரியாதை செலுத்த) சிரம் பணிந்தார்கள்;