Skip to main content

أَوْ
அல்லது
تَكُونَ
இருக்கிறது
لَكَ
உமக்கு
جَنَّةٌ
ஒரு தோட்டம்
مِّن
இருந்து
نَّخِيلٍ
பேரிட்சை மரம்
وَعِنَبٍ
இன்னும் திராட்சை செடி
فَتُفَجِّرَ
பிளந்தோடச் செய்கின்றீர்
ٱلْأَنْهَٰرَ
நதிகளை
خِلَٰلَهَا
அதற்கு மத்தியில்
تَفْجِيرًا
பிளப்பதாக

Aw takoona laka jannatum min nakheelinw wa 'inabin fatufajjiral anhaara khilaalahaa tafjeeraa

"அல்லது மத்தியில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கக் கூடிய திராட்சை, பேரீச்சை மரங்களையுடைய ஒரு சோலை உங்களுக்கு இருந்தால் அன்றி (உங்களை நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்றும் கூறுகின்றனர்.)

Tafseer

أَوْ
அல்லது
تُسْقِطَ
நீர் விழவைக்கின்றீர்
ٱلسَّمَآءَ
வானத்தை
كَمَا
போன்று
زَعَمْتَ
நீர் கூறியது
عَلَيْنَا
எங்கள் மீது
كِسَفًا
துண்டுகளாக
أَوْ
அல்லது
تَأْتِىَ بِٱللَّهِ
அல்லாஹ்வை வரவைக்கின்றீர்
وَٱلْمَلَٰٓئِكَةِ
இன்னும் வானவர்களை
قَبِيلًا
கண்முன்

Aw tusqitas samaaa'a kamaa za'amta 'alainaa kisafan aw taatiya billaahi walma laaa'ikati qabeelaa

"அல்லது நீங்கள் எண்ணுகிற பிரகாரம் வானத்தின் முகடு இடிந்து, அதில் ஒரு துண்டு எங்கள் (தலை) மீது விழுந்தாலன்றி அல்லது அல்லாஹ்வையும் மலக்குகளையும் நம் முன் கொண்டு வந்தாலன்றி (உங்களை நாம் நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்றும் கூறுகின்றனர்.)

Tafseer

أَوْ
அல்லது
يَكُونَ
இருக்கும்
لَكَ
உமக்கு
بَيْتٌ
ஒரு வீடு
مِّن زُخْرُفٍ
தங்கத்தில்
أَوْ
அல்லது
تَرْقَىٰ
நீர் ஏறுவாய்
فِى ٱلسَّمَآءِ
வானத்தில்
وَلَن نُّؤْمِنَ
அறவே நம்பிக்கை கொள்ள மாட்டோம்
لِرُقِيِّكَ
உமது ஏறுதலுக்காக
حَتَّىٰ
வரை
تُنَزِّلَ
இறக்கி வைப்பீர்
عَلَيْنَا
எங்கள் மீது
كِتَٰبًا
ஒரு வேதத்தை
نَّقْرَؤُهُۥۗ
அதைப் படிக்கின்றோம்
قُلْ
கூறுவீராக
سُبْحَانَ
மிகப்பரிசுத்தமானவன்
رَبِّى
என் இறைவன்
هَلْ
?
كُنتُ
இருக்கின்றேன்
إِلَّا
தவிர
بَشَرًا
ஒரு மனிதராக
رَّسُولًا
தூதரான

Aw yakoona laka baitum min zukhrufin aw tarqaa fis samaaa'i wa lan nu'mina liruqiyyika hatta tunazzila 'alainaa kitaaban naqra'uh; qul Subhaana Rabbee hal kuntu illaa basharar Rasoolaa

"அல்லது (மிக்க அழகான) தங்கத்தினாலாகிய ஒரு மாளிகை உங்களுக்கு இருந்தாலன்றி (நாம் நம்பிக்கை கொள்ள மாட்டோம்.) அல்லது நீங்கள் வானத்தின் மீது ஏறியபோதிலும் நாம் ஓதக்கூடிய ஒரு வேதத்தை (நேராக) நம்மீது நீங்கள் இறக்கிவைக்காத வரையில் நீங்கள் வானத்தில் ஏறியதையும் நம்பமாட்டோம்" என்றும் கூறுகின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "என் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நான் (உங்களைப் போன்ற) ஒரு மனிதன்தான். எனினும், நான் (அவனால் அனுப்பப்பட்ட) ஒரு தூதர் என்பதைத் தவிர வேறெதுவும் உண்டா?"

Tafseer

وَمَا مَنَعَ
தடுக்கவில்லை
ٱلنَّاسَ
மனிதர்களை
أَن يُؤْمِنُوٓا۟
அவர்கள் நம்பிக்கைகொள்வது
إِذْ
போது
جَآءَهُمُ
அவர்களுக்கு வந்தது
ٱلْهُدَىٰٓ
நேர்வழி
إِلَّآ
தவிர
أَن قَالُوٓا۟
அவர்கள் கூறியது
أَبَعَثَ
அனுப்பினானா?
ٱللَّهُ
அல்லாஹ்
بَشَرًا
மனிதரை
رَّسُولًا
தூதராக

Wa maa mana'an naasa any yu'minooo iz jaaa'ahumul hudaaa illaaa an qaalooo aba'asal laahu basharar Rasoolaa

மனிதர்களிடம் ஒரு நேரான வழி வந்த சமயத்தில் அவர்கள் "அல்லாஹ் ஒரு மனிதரையா (தன்னுடைய) தூதராக அனுப்பி வைத்தான்" என்று கூறுவதைத் தவிர அவர்கள் நம்பிக்கை கொள்வதைத் தடை செய்வதற்கு ஒன்றுமேயில்லை.

Tafseer

قُل
கூறுவீராக
لَّوْ كَانَ
இருந்திருந்தால்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
مَلَٰٓئِكَةٌ
வானவர்கள்
يَمْشُونَ
நடக்கின்றனர்
مُطْمَئِنِّينَ
நிம்மதியானவர்களாக
لَنَزَّلْنَا
இறக்கியிருப்போம்
عَلَيْهِم
அவர்களிடம்
مِّنَ
இருந்து
ٱلسَّمَآءِ
வானம்
مَلَكًا
வானவரை
رَّسُولًا
ஒரு தூதராக

Qul law kaana fil ardi malaaa 'ikatuny yamshoona mutma'inneena lanazzalnaa 'alaihim minas samaaa'i malakar Rasoolaa

(அதற்கு) நீங்கள் கூறுங்கள்: பூமியில் (மனிதர்களுக்குப் பதிலாக) மலக்குகளே வசித்திருந்து, அதில் அவர்கள் நிம்மதியாக நடந்து திரிந்து கொண்டுமிருந்தால் நாமும் வானத்திலிருந்து (அவர்கள் இனத்தைச் சார்ந்த) ஒரு மலக்கையே (நம்முடைய) தூதராக அவர்களிடம் அனுப்பியிருப்போம். (ஆகவே, மனிதர்களாகிய அவர்களிடம் மனிதராகிய உங்களை நம்முடைய தூதராக அனுப்பியதில் தவறொன்றுமில்லை.)

Tafseer

قُلْ
கூறுவீராக
كَفَىٰ
போதுமாகி விட்டான்
بِٱللَّهِ
அல்லாஹ்வே
شَهِيدًۢا
சாட்சியாளனாக
بَيْنِى
எனக்கிடையில்
وَبَيْنَكُمْۚ
இன்னும் உங்களுக்கிடையில்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
كَانَ
இருக்கின்றான்
بِعِبَادِهِۦ
தன் அடியார்களை
خَبِيرًۢا
ஆழ்ந்தறிந்தவனாக
بَصِيرًا
உற்று நோக்கினவனாக

Qul kafaa billaahi shaheedam bainee wa bainakum; innahoo kaana bi'ibaadihee Khabeeram Baseeraa

(பின்னும்) நீங்கள் கூறுங்கள்: "எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ் ஒருவனே போதுமான சாட்சியாக இருக்கின்றான். ஏனென்றால், நிச்சயமாக அவன்தான் தன் அடியார்களை நன்கறிந்தவனும், உற்றுநோக்குபவனுமாக இருக்கின்றான்.

Tafseer

وَمَن
எவரை
يَهْدِ
நேர்வழி செலுத்துவான்
ٱللَّهُ
அல்லாஹ்
فَهُوَ
அவர்தான்
ٱلْمُهْتَدِۖ
நேர்வழி பெற்றவர்
وَمَن
இன்னும் எவரை
يُضْلِلْ
வழிகெடுப்பான்
فَلَن تَجِدَ
அறவே காணமாட்டீர்
لَهُمْ
அவர்களுக்கு
أَوْلِيَآءَ
உதவியாளர்களை
مِن دُونِهِۦۖ
அவனையன்றி
وَنَحْشُرُهُمْ
இன்னும் ஒன்றுசேர்ப்போம் அவர்களை
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
عَلَىٰ وُجُوهِهِمْ
தங்கள் முகங்கள் மீது
عُمْيًا
குருடர்களாக
وَبُكْمًا
இன்னும் ஊமையர்களாக
وَصُمًّاۖ
இன்னும் செவிடர்களாக
مَّأْوَىٰهُمْ
அவர்களுடைய தங்குமிடம்
جَهَنَّمُۖ
நரகம்தான்
كُلَّمَا خَبَتْ
அது அனல் தணியும் போதெல்லாம்
زِدْنَٰهُمْ
அதிகப்படுத்துவோம்/அவர்களுக்கு
سَعِيرًا
கொழுந்து விட்டெரியும் நெருப்பை

Wa mai yahdil laahu fahuwal muhtad; wa mai yudlil falan tajida lahum awliyaaa'a min doonih; wa nahshuruhum Yawmal Qiyaamati 'alaa wujoohihim umyanw wa bukmanw wa summaa; maa waahum Jahannamu kullamaa khabat zidnaahum sa'eeraa

எவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவர்கள்தான் நேரான வழியை அடைவார்கள். எவர்களை (அல்லாஹ்) தவறான வழியில் விட்டு விடுகிறானோ அத்தகையவர் களுக்கு அவனையன்றி உதவி செய்பவர்களை நீங்கள் காண மாட்டீர்கள். அன்றி, மறுமைநாளில் அவர்களைக் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் (ஆக்கி) அவர்கள் தங்கள் முகத்தால் நடந்து வரும்படி (செய்து) அவர்களை ஒன்று சேர்ப்போம். அவர்கள் தங்குமிடம் நரகம்தான். (அதன்) அனல் தணியும் போதெல்லாம் மென்மேலும் கொழுந்து விட்டெரியும்படி செய்து கொண்டே இருப்போம்.

Tafseer

ذَٰلِكَ
இது
جَزَآؤُهُم
கூலி, தண்டனை/அவர்களின்
بِأَنَّهُمْ
காரணம்/நிச்சயமாக/அவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
وَقَالُوٓا۟
இன்னும் கூறினர்
أَءِذَا كُنَّا
நாங்கள் ஆகிவிட்டால்?
عِظَٰمًا
எலும்புகளாக
وَرُفَٰتًا
இன்னும் மக்கியவர்களாக
أَءِنَّا
?/நிச்சயமாக நாம்
لَمَبْعُوثُونَ
எழுப்பப்படுவோம்
خَلْقًا
படைப்பாக
جَدِيدًا
புதியது

Zaalika jazaa'uhum biannahum kafaroo bi aayaatinaa wa qaalooo 'a izaa kunnaa 'izaamanw wa rufaatan'a innaa lamaboosoona khalqan jadeedaa

அவர்கள், நம்முடைய வசனங்களை நிராகரித்து விட்டதுடன் "நாம் (மரணித்து) எலும்பாகவும், உக்கி மண்ணாகவும் போனதன் பின்னர் மெய்யாகவே நாம் புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா?" என்று கூறிக் கொண்டிருந்ததும்தான் இத்தகைய (கொடிய) தண்டனையை அவர்கள் அடைவதற்குரிய காரணமாகும்.

Tafseer

أَوَلَمْ يَرَوْا۟
அவர்கள் பார்க்கவில்லையா?
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ٱلَّذِى
எத்தகையவன்
خَلَقَ
படைத்தான்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியை
قَادِرٌ
ஆற்றலுடையவன்
عَلَىٰٓ
மீது
أَن يَخْلُقَ
அவன் படைக்க
مِثْلَهُمْ
அவர்கள் போன்றவர்களை
وَجَعَلَ
இன்னும் ஆக்கினான்
لَهُمْ
அவர்களுக்கு
أَجَلًا
ஒரு தவணையை
لَّا رَيْبَ
அறவே சந்தேகம் இல்லை
فِيهِ
அதில்
فَأَبَى
ஏற்க மறுத்தார்(கள்)
ٱلظَّٰلِمُونَ
அக்கிரமக்காரர்கள்
إِلَّا كُفُورًا
தவிர/நிராகரிப்பை

Awalam yaraw annal laahal lazee khalaqas samaawaati wal arda qaadirun 'alaaa any yakhluqa mislahum wa ja'ala lahum ajalal laa raiba fee; fa abaz zaalimoona illaa kufooraa

மெய்யாகவே வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் (மறுமுறையும்) அவர்களைப் போன்றே படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா? (இதற்காக) அவர்களுக்கு ஒரு தவணையை ஏற்படுத்தியிருக்கிறான். அதில் யாதொரு சந்தேகமுமில்லை. (இவ்வாறிருந்தும்) இவ்வக்கிரமக்காரர்கள் இதனை நிராகரிக்காமலில்லை!

Tafseer

قُل
கூறுவீராக
لَّوْ أَنتُمْ
நீங்கள் சொந்தமாக்கி வைத்திருந்தால்
خَزَآئِنَ
பொக்கிஷங்களை
رَحْمَةِ
அருளின்
رَبِّىٓ
என் இறைவனுடைய
إِذًا
அப்போது
لَّأَمْسَكْتُمْ
தடுத்துக் கொண்டிருப்பீர்கள்
خَشْيَةَ
பயந்து
ٱلْإِنفَاقِۚ
தர்மம் செய்வது
وَكَانَ ٱلْإِنسَٰنُ
இருக்கின்றான்/ மனிதன்
قَتُورًا
மகா கஞ்சனாக

Qul law antum tamlikoona khazaaa'ina rahmati Rabbeee izal la amsaktum khash yatal infaaq; wa kaanal insaanu qatooraa

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: என் இறைவனின் அருள் பொக்கிஷங்கள் அனைத்திற்கும் நீங்களே சொந்தக்காரர்களாக இருந்தால் அது செலவாகிவிடுமோ! எனப் பயந்து (எவருக்கும் எதுவுமே கொடுக்காது) நீங்கள் தடுத்துக் கொள்வீர்கள். மனிதன் பெரும் கஞ்சனாக இருக்கிறான்.

Tafseer