Skip to main content

وَلَقَدْ صَرَّفْنَا
திட்டமாக விவரித்தோம்
فِى هَٰذَا
இந்த குர்ஆனில்
لِيَذَّكَّرُوا۟
அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
وَمَا يَزِيدُهُمْ
அதிகப்படுத்தவில்லை/அவர்களுக்கு
إِلَّا
தவிர
نُفُورًا
வெறுப்பை

Wa laqad sarrafnaa fee haazal Quraani liyazzakkaroo wa maa yazeeduhum illaa nufooraa

இவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இந்தக் குர்ஆனில் நிச்சயமாக நாம் பற்பல வகைகளில் (நல்லுபதேசங்களைக்) கூறியிருக்கிறோம். எனினும், (இவை அனைத்தும்) அவர்களுக்கு வெறுப்பையேயன்றி அதிகப்படுத்தவில்லை.

Tafseer

قُل
கூறுவீராக
لَّوْ كَانَ
இருந்திருந்தால்
مَعَهُۥٓ
அவனுடன்
ءَالِهَةٌ
பல கடவுள்கள்
كَمَا يَقُولُونَ
அவர்கள் கூறுவது போல்
إِذًا
அப்போது
لَّٱبْتَغَوْا۟
தேடியிருப்பார்கள்
إِلَىٰ
பக்கம்
ذِى ٱلْعَرْشِ
அர்ஷ் உடையவன்
سَبِيلًا
ஒரு வழியை

Qul law kaana ma'ahooo aalihatun kamaa yaqooloona izal labtaghaw ilaa zil 'Arshi Sabeela

(ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: நீங்கள் சொல்வது போல் அல்லாஹ்வுடன் வேறு தெய்வங்கள் இருந்தால், அவை அர்ஷையுடைய (அல்லாஹ்வாகிய அ)வன் பக்கம் செல்லக்கூடிய வழியைக் கண்டுபிடித்து (அவனிடம் சென்றே) இருக்கும்.

Tafseer

سُبْحَٰنَهُۥ
அவன் மிகப் பரிசுத்தமானவன்
وَتَعَٰلَىٰ
இன்னும் உயர்ந்துவிட்டான்
عَمَّا
எதை விட்டு
يَقُولُونَ
கூறுகிறார்கள்
عُلُوًّا
உயர்வாக
كَبِيرًا
மிகப் பெரியது

Subhaanahoo wa Ta'aalaa 'ammaa yaqooloona 'uluwwan kabeeraa

அவன் மிகப் பரிசுத்தமானவன். இவர்கள் கூறும் கூற்றில் இருந்து அவன் மிக்க உயர்ந்தவன்.

Tafseer

تُسَبِّحُ
துதிக்கின்றன(ர்)
لَهُ
அவனையே
ٱلسَّمَٰوَٰتُ
வானங்கள்
ٱلسَّبْعُ
ஏழு
وَٱلْأَرْضُ
இன்னும் பூமி
وَمَن
இன்னும் எவர்
فِيهِنَّۚ
இவற்றில்
وَإِن
இல்லை
مِّن شَىْءٍ
எந்த ஒரு பொருளும்
إِلَّا
தவிர
يُسَبِّحُ
துதிக்கிறது
بِحَمْدِهِۦ
அவனைப் புகழ்ந்து
وَلَٰكِن
எனினும்
لَّا تَفْقَهُونَ
அறிய மாட்டீர்கள்
تَسْبِيحَهُمْۗ
அவர்களின் துதியை
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
كَانَ
இருக்கிறான்
حَلِيمًا
மகா சகிப்பாளனாக
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக

Tusabbihu lahus samaawaatus sab'u wal ardu wa man feehinn; wa im min shai'in illaa yusabbihu bihamdihee wa laakil laa tafqahoona tasbeehahum; innahoo kaana Haleeman Ghafooraa

ஏழு வானங்களும் பூமியும் இவற்றிலுள்ள அனைத்தும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றன. (இவற்றில்) ஒன்றுமே அவனைத் துதி செய்து புகழாதிருக்கவில்லை. எனினும், அவை துதி செய்து புகழ்வதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனும், மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَإِذَا قَرَأْتَ
நீர் ஓதினால்
ٱلْقُرْءَانَ
குர்ஆனை
جَعَلْنَا
ஆக்கிவிடுவோம்
بَيْنَكَ
உமக்கு இடையில்
وَبَيْنَ
இன்னும் இடையில்
ٱلَّذِينَ
எவர்கள்
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
حِجَابًا
ஒரு திரையை
مَّسْتُورًا
மறைக்கப்பட்டது

Wa izaa qaraatal Quraana ja'alnaa bainaka wa bainal lazeena laa yu'minoona bil aakhirati hijaabam mastooraa

(நபியே!) நீங்கள் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் உங்களுக்கும் மறுமையை நம்பாதவர்களுக்கும் இடையில் தடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு திரையை ஆக்கி விடுகிறோம்.

Tafseer

وَجَعَلْنَا
ஆக்கிவிடுவோம்
عَلَىٰ قُلُوبِهِمْ
அவர்களின் உள்ளங்கள் மீது
أَكِنَّةً
மூடிகளை
أَن يَفْقَهُوهُ
அவர்கள் விளங்குவதற்கு/அதை
وَفِىٓ ءَاذَانِهِمْ
இன்னும் காதுகளில்/அவர்களுடைய/கனத்தை
وَإِذَا ذَكَرْتَ
நீர் நினைவுகூர்ந்தால்
رَبَّكَ
உம் இறைவனை
فِى ٱلْقُرْءَانِ
குர்ஆனில்
وَحْدَهُۥ
அவனை மட்டும்
وَلَّوْا۟
திரும்புகின்றனர்
عَلَىٰٓ
மீது
أَدْبَٰرِهِمْ
தங்கள் பின்புறங்கள்
نُفُورًا
வெறுத்து

Wa ja'alnaa 'alaa quloo bihim akinnatan any yafqahoohu wa feee aazaanihim waqraa; wa izaa zakarta Rabbaka fil Quraani wahdahoo wallaw 'alaaa adbaarihim nufooraa

அன்றி, அவர்களுடைய உள்ளங்களிலும், (அவர்கள்) அதனை விளங்கிக்கொள்ள முடியாதவாறு திரையை அமைத்து அவர்களுடைய காதுகளைச் செவிடாக்கி விடுகிறோம். திருக்குர்ஆனில் உங்கள் இறைவன் ஒருவனைப் பற்றியே நீங்கள் கூறிக்கொண்டிருந்தால், அவர்கள் வெறுத்துத் தங்கள் முதுகுப்புறமே (திரும்பிச்) சென்று விடுகின்றனர்.

Tafseer

نَّحْنُ
நாம்
أَعْلَمُ
மிக அறிந்தவர்கள்
بِمَا يَسْتَمِعُونَ
எதற்காக/செவிமடுக்கின்றனர்/அதை
إِذْ يَسْتَمِعُونَ
அவர்கள் செவிமடுக்கும் போது
إِلَيْكَ
உமக்கு
وَإِذْ
இன்னும் /போது
هُمْ
அவர்கள்
نَجْوَىٰٓ
தனித்து பேசுபவர்கள்
إِذْ يَقُولُ
கூறும் போது
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
إِن تَتَّبِعُونَ
நீங்கள் பின்பற்றவில்லை
إِلَّا رَجُلًا
ஓர் ஆடவரை/தவிர
مَّسْحُورًا
(மனித இனத்தை சேர்ந்தவர்,) உண்ணவும் குடிக்கவும் செய்பவர்

nahnu a'lamu bimaa yastami'oona biheee iz yastami'oona ilaika wa iz hum najwaaa iz yaqooluz zaalimoona in tattabi'oona illaa rajulam mas hooraa

அவர்கள் உங்களுக்கு செவி சாய்த்தால் என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்கள் (தங்களுக்குள் உங்களைப் பற்றி) இரகசியமாகப் பேசிக் கொண்டால், "சூனியத்திற்குள்ளான மனிதனையேயன்றி (வேறொருவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை" என்று (நம்பிக்கையாளர்களை நோக்கிக்) கூறுகின்றனர் (என்பதையும் நாம் நன்கறிவோம்).

Tafseer

ٱنظُرْ
கவனிப்பீராக
كَيْفَ
எவ்வாறு
ضَرَبُوا۟
விவரித்தார்கள்
لَكَ
உமக்கு
ٱلْأَمْثَالَ
தன்மைகளை
فَضَلُّوا۟
ஆகவே வழிகெட்டனர்
فَلَا يَسْتَطِيعُونَ
இயலமாட்டார்கள்
سَبِيلًا
வழி(பெற)

Unzur kaifa daraboo lakal amsaala fadalloo falaa yastatee'oona sabeelaa

(நபியே!) உங்களுக்கு எத்தகைய பட்டம் சூட்டுகிறார்கள் என்பதை நீங்கள் கவனியுங்கள். இவர்கள் வழிகெட்டே விட்டார்கள். (நேரான) வழியை அடைய இவர்களால் முடியாது.

Tafseer

وَقَالُوٓا۟
கூறுகிறார்கள்
أَءِذَا كُنَّا
நாங்கள் ஆகிவிட்டால்?
عِظَٰمًا
எலும்புகளாக
وَرُفَٰتًا
இன்னும் மக்கியவர்களாக
أَءِنَّا
?/நிச்சயமாக நாம்
لَمَبْعُوثُونَ
எழுப்பப்படுவோம்
خَلْقًا جَدِيدًا
படைப்பாக/புதிய

Wa qaalooo'a izaa kunnaa 'izaamanw wa rufaatan 'a innaa lamab'oosoona khalqan jadeedaa

"நாம் (இறந்து) எலும்பாகி, உக்கி, மக்கிப்போனதன் பின்னர் புதிய ஒரு படைப்பாக உயிர்ப்பிக்கப்படுவோமா?" என்று அவர்கள் கேட்கிறார்கள்.

Tafseer

قُلْ
கூறுவீராக
كُونُوا۟
ஆகிவிடுங்கள்
حِجَارَةً
கல்லாக
أَوْ حَدِيدًا
அல்லது இரும்பாக

Qul koonoo jijaaratan aw hadeedaa

(அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: நீங்கள் (உக்கி, மக்கி, மண்ணாவது என்ன?) கல்லாகவோ இரும்பாகவோ ஆகிவிடுங்கள்.

Tafseer