Wa qul jaaa'al haqqu wa zahaqal baatil; innal baatila kaana zahooqaa
அன்றி, "சத்தியம் வந்தது; அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்" என்றும் கூறுங்கள்.
Wa nunazzilu minal quraani maa huwa shifaaa'unw wa rahmatul lilmu;mineena wa laa yazeeduz zaalimeena illaa khasaaraa
நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளாகவும் பரிகார மாகவும் உள்ளவைகளையே இந்தத் திருக்குர்ஆனில் நாம் இறக்கியிருக்கிறோம். எனினும், அநியாயக்காரர்களுக்கோ (இது) நஷ்டத்தையே தவிர (வேறு எதனையும்) அதிகரிப்பதில்லை.
Wa izaaa an'amnaa 'alal insaani a'rada wa na-aa bijaani bihee wa izaa massahush sharru kaana ya'oosaa
நாம் மனிதனுக்கு அருள் புரிந்தால் (அதற்கு அவன் நன்றி செலுத்துவதற்குப் பதிலாக நம்மை) புறக்கணித்து முகம் திரும்பிக் கொள்கிறான். அவனை யாதொரு தீங்கு அணுகினாலோ நம்பிக்கை இழந்துவிடுகிறான்.
Qul kulluny ya'malu 'alaa shaakilatihee fa rabbukum a'lamu biman huwa ahdaa sabeelaa
(ஆகவே, நபியே!) நீங்கள் கூறுங்கள்: ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தோன்றியவைகளையே செய்கிறான். ஆகவே, நேரான வழியில் செல்பவன் யார் என்பதை உங்கள் இறைவன்தான் நன்கறிவான்.
Wa yas'aloonaka 'anirrooh; qulir roohu min amri rabbee wa maaa ooteetum minal 'ilmi illaa qaleelaa
(நபியே!) ரூஹைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள். அதற்கு நீங்கள் "அது எனது இறைவனின் கட்டளையால் ஏற்பட்டது. (அதைப் பற்றி) வெகு சொற்ப ஞானமேயன்றி உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. (ஆதலால், அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியாது)" என்று கூறுங்கள்.
Wa la'in shi'naa lanaz habanna billazeee awhainaaa ilaika summa laa tajidu laka bihee 'alainaa wakeelaa
(நபியே!) நாம் விரும்பினால் வஹீ மூலம் உங்களுக்கு அறிவித்த இந்தக் குர்ஆனையே (உங்களிடமிருந்து) போக்கி விடுவோம். பின்னர், (இதனை உங்களிடம் கொண்டு வர) நமக்கு விரோதமாக உங்களுக்கு உதவி செய்ய எவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.
Illaa rahmatam mir Rabbik; inna fadlahoo kaana 'alaika kabeeraa
ஆனால், உங்கள் இறைவனுடைய அருளின் காரணமாகவே (அவ்வாறு அவன் செய்யவில்லை.) நிச்சயமாக உங்கள்மீது அவனுடைய அருள் மிகப்பெரிதாகவே இருக்கிறது.
Qul la'inij tama'atil insu waljinnu 'alaaa any yaatoo bimisli haazal quraani laa yaatoona bimislihee wa law kaana ba'duhum liba 'din zaheeraa
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து, சிலர் சிலருக்கு உதவியாக இருந்து இதைப்போன்ற ஒரு குர்ஆனைக் கொண்டுவர முயற்சித்தபோதிலும் இதைப்போல் கொண்டுவர அவர்களால் (முடியவே) முடியாது.
Qa laqad sarrafnaa linnaasi fee haazal quraani min kulli masalin fa abaaa aksarun naasi illaa kufooraa
இந்தக் குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் மனிதர்களுக்கு(த் திரும்பத் திரும்ப) விவரித்துக் கூறியிருக்கிறோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இதனை நிராகரிக்காமல் இருக்கவில்லை.
Wa qaaloo lan nu'mina laka hattaa tafjura lanaa minal ardi yamboo'aa
(நபியே!) "இப்பூமி வெடித்து, ஒரு ஊற்றுக்கண் தோன்றினாலன்றி நாம் உங்களை நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்று அவர்கள் கூறுகின்றனர்.