Fakharaja 'alaa qawmihee minal mihraabi fa-awhaaa ilaihim an sabbihoo bukratanw wa 'ashiyyaa
பின்னர், அவர் (வழக்கப்படி மக்களுக்கு நல்லுபதேசம் செய்ய ஆலயத்தின் மிஹ்ராப்) மாடத்திலிருந்து வெளிப்பட்டுத் தன் மக்கள் முன் வந்தார். (எனினும், அவரால் வாய் திறந்து பேச முடியாமலாகி விட்டது.) ஆகவே, காலையிலும் மாலையிலும் (இறைவனைப்) புகழ்ந்து துதி செய்யுங்கள் என்று (தன் கையால்) அவர்களுக்கு ஜாடையாகக் காண்பித்தார்.
Yaa Yahyaa khuzil Kitaaba biquwwatinw wa aatainaahul hukma saiyyaa
(நாம் கூறியவாறே ஜகரிய்யாவுக்கு யஹ்யா பிறந்த பின்னர் நாம் அவரை நோக்கி) "யஹ்யாவே! நீங்கள் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்று கூறி, நாம் அவருக்கு (அவருடைய) சிறு வயதிலேயே ஞானத்தையும் அளித்தோம்.
Wa hanaanam mil ladunnaa wa zakaatanw wa kaana taqiyyaa
அன்றி, இரக்கமுள்ள மனதையும், பரிசுத்தத் தன்மையையும் நாம் அவருக்குக் கொடுத்தோம். ஆகவே, அவர் மிக இறை அச்சமுடையவராகவே இருந்தார்.
Wa barram biwaalidayhi wa lam yakum jabbaaran 'asiyyaa
அன்றி, தன் தாய் தந்தைக்கு நன்றி செய்பவராகவே இருந்தார். அவர்களுக்கு மாறு செய்பவராகவோ முரடராகவோ இருக்கவில்லை.
Wa salaamun 'alaihi yawma wulida wa yawma yamootu wa yawma yub'asu haiyaa
அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும் (மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும்பும் நாளிலும் அவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்!
Wazkur fil Kitaabi Marya; izin tabazat min ahlihaa makaanan shariqyyaa
(நபியே!) இவ்வேதத்தில் (ஈஸாவின் தாயாகிய) மர்யமைப் பற்றியும் (சிறிது) கூறுங்கள்: அவர் தன் குடும்பத்தினரை விட்டு விலகி கிழக்குத் திசையிலுள்ள (தன்னுடைய) அறைக்குச் சென்று,
Fattakhazat min doonihim hijaaban fa arsalnaaa ilaihaa roohanaa fatamassala lahaa basharan sawiyyaa
(குளிப்பதற்காகத்) தன் மக்களின் முன் திரையிட்டுக் கொண்ட சமயத்தில் (ஜிப்ரீல் என்னும்) நம்முடைய தூதரை அவரிடம் அனுப்பி வைத்தோம். அவர் முழுமையான ஒரு மனிதனுடைய கோலத்தில் அவர் முன் தோன்றினார்.
Qaalat inneee a'oozu bir Rahmaani minka in kunta taqiyyaa
(அவரைக் கண்டதும்) "நிச்சயமாக நான் உங்களிடமிருந்து என்னை பாதுகாக்க ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறேன். நீங்கள் பரிசுத்தமானவராக இருந்தால் (இங்கிருந்து அப்புறப்பட்டு விடுங்கள்)" என்றார்.
Qaala innamaa ana rasoolu Rabbiki li ahaba laki ghulaaman zakiyyaa
அதற்கவர், பரிசுத்தமான ஒரு மகனை "உங்களுக்களி(க் கப்படும் என்பதை உங்களுக்கு அறிவி)ப்பதற்காக நான் உங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட (மலக்காகிய) ஒரு தூதர்தான்" என்றார்.
Qaalat anna yakoonu lee ghulaamunw wa lam yamsasnee bashrunw wa lam aku baghiyyaa
அதற்கவர் "எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்படும்? எம்மனிதனும் என்னைத் தீண்டியதில்லையே; நான் கெட்ட நடத்தையுள்ளவளும் அல்லவே" என்று கூறினார்.