Skip to main content

ٱلَّذِينَ
எவர்கள்
ءَاتَيْنَٰهُمُ
கொடுத்தோம்/அவர்களுக்கு
ٱلْكِتَٰبَ
வேதத்தை
يَتْلُونَهُۥ
ஓதுகிறார்கள்/அதை
حَقَّ
முறைப்படி
تِلَاوَتِهِۦٓ
ஓதுவதின்/அதை
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறார்கள்
بِهِۦۗ
அதை
وَمَن
எவர்(கள்)
يَكْفُرْ
நிராகரிப்பார்(கள்)
بِهِۦ
அதை
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْخَٰسِرُونَ
நஷ்டமடைந்தவர்கள்

Allazeena aatainaahumul Kitaaba yatloonahoo haqqa tilaawatiheee ulaaa'ika yu'minoona bi; wa mai yakfur bihee fa ulaaa'ika humul khaasiroon

(நபியே!) எவர்கள் நாம் கொடுத்த ("தவ்றாத்") வேதத்தை முறைப்படி (அறிந்து) ஓதுகிறார்களோ அவர்கள், (குர்ஆனாகிய) இதனையும் (அவசியம்) நம்பிக்கை கொள்வார்கள். (ஆகவே, அவர்களில்) எவரேனும் இதனை நிராகரித்தால் அவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்களே!

Tafseer

يَٰبَنِىٓ
சந்ததிகளே
إِسْرَٰٓءِيلَ
இஸ்ராயீலின்
ٱذْكُرُوا۟
நினைவு கூறுங்கள்
نِعْمَتِىَ
என் அருளை
ٱلَّتِىٓ
எது
أَنْعَمْتُ
அருள் புரிந்தேன்
عَلَيْكُمْ
உங்கள் மீது
وَأَنِّى
இன்னும் நிச்சயமாக நான்
فَضَّلْتُكُمْ
மேன்மையாக்கினேன்/உங்களை
عَلَى ٱلْعَٰلَمِينَ
உலகத்தாரைவிட

Yaa Baneee Israaa'eelaz-kuroo ni'matiyal lateee an'amtu 'alaikum wa annee faddaltukum 'alal 'aalameen

இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு வழங்கியிருந்த என்னுடைய அருட்கொடையையும், நிச்சயமாக உங்களை உலக மக்கள் அனைவரையும் விட மேன்மையாக்கி வைத்திருந்ததையும் நினைத்துப் பாருங்கள்.

Tafseer

وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
يَوْمًا
ஒரு நாளை
لَّا تَجْزِى
பலனளிக்காது
نَفْسٌ
ஓர் ஆன்மா
عَن نَّفْسٍ
ஓர் ஆன்மாவிற்கு
شَيْـًٔا وَلَا
எதையும்
يُقْبَلُ
இன்னும் ஏற்கப்படாது
مِنْهَا
அதனிடமிருந்து
عَدْلٌ
பரிகாரம்
وَلَا تَنفَعُهَا
இன்னும் அதற்குப் பலனளிக்காது
شَفَٰعَةٌ
பரிந்துரை
وَلَا هُمْ
இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்

Wattaqoo yawmal laa tajzee nafsun 'an nafsin shai 'anw wa laa yuqbalu minhaa 'adlunw wa laa tanfa'uhaa shafaa 'atunw wa laa hum yunsaroon

அன்றி, ஒரு நாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள். அந்நாளில் ஓர் ஆத்மா மற்றொரு ஆத்மாவுக்கு எவ்வித பயனுமளிக்காது. அதனிடமிருந்து யாதொரு பரிகாரமும் ஏற்கப்பட மாட்டாது; எவ்வித பரிந்துரையும் அதற்குப் பயன் தராது. அன்றி, அவர்கள் (யாராலும் எவ்வித) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.

Tafseer

وَإِذِ ٱبْتَلَىٰٓ
இன்னும் சமயம்/சோதித்தான்
إِبْرَٰهِۦمَ
இப்ராஹீமை
رَبُّهُۥ
அவருடைய இறைவன்
بِكَلِمَٰتٍ
கட்டளைகளைக் கொண்டு
فَأَتَمَّهُنَّۖ
ஆகவே நிறைவு செய்தார்/அவற்றை
قَالَ
கூறினான்
إِنِّى
நிச்சயமாக நான்
جَاعِلُكَ
ஆக்குகிறேன்/ உன்னை
لِلنَّاسِ
மனிதர்களுக்கு
إِمَامًاۖ
தலைவராக
قَالَ
கூறினார்
وَمِن
இன்னும் இருந்து
ذُرِّيَّتِىۖ
என் சந்ததிகள்
قَالَ
கூறினான்
لَا يَنَالُ
அடையாது
عَهْدِى
என் வாக்குறுதி
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை

Wa izib talaaa Ibraaheema Rabbuho bi Kalimaatin fa atammahunna qaala Innee jaa'iluka linnaasi Imaaman qaala wa min zurriyyatee qaala laa yanaalu 'ahdiz zaalimeen

தவிர, இப்ராஹீமை அவருடைய இறைவன் (பெரும் சோதனையான) பல கட்டளைகளையிட்டு சோதித்த சமயத்தில் அவர் அவை யாவையும் நிறைவு செய்தார். (ஆதலால் இறைவன்) "நிச்சயமாக நான் உங்களை மனிதர்களுக்கு (நேர்வழி காட்டக் கூடிய) தலைவராக ஆக்கினேன்" எனக் கூறினான். அதற்கு (இப்ராஹீம்) "என்னுடைய சந்ததிகளையுமா (தலைவர்களாக ஆக்குவாய்?)" எனக் கேட்டார். (அதற்கு "உங்கள் சந்ததியிலுள்ள) அநியாயக்காரரை என்னுடைய (இந்த) உறுதிமொழி சாராது" எனக் கூறினான்.

Tafseer

وَإِذْ جَعَلْنَا
இன்னும் சமயம்/ஆக்கினோம்
ٱلْبَيْتَ
(வீடு) கஅபாவை
مَثَابَةً
ஒரு திரும்புமிடமாக
لِّلنَّاسِ
மனிதர்களுக்கு
وَأَمْنًا
இன்னும் பாதுகாப்பாக
وَٱتَّخِذُوا۟
இன்னும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்
مِن مَّقَامِ
நின்ற இடத்தில்
إِبْرَٰهِۦمَ
இப்ராஹீம்
مُصَلًّىۖ
தொழுமிடத்தை
وَعَهِدْنَآ
இன்னும் கட்டளையிட்டோம்
إِلَىٰٓ إِبْرَٰهِۦمَ
இப்ராஹீமுக்கு
وَإِسْمَٰعِيلَ
இன்னும் இஸ்மாயீல்
أَن طَهِّرَا
நீங்கள் இருவரும் சுத்தப்படுத்துங்கள்
بَيْتِىَ
என் வீட்டை
لِلطَّآئِفِينَ
தவாஃப் சுற்றுபவர்களுக்கு
وَٱلْعَٰكِفِينَ
இன்னும் தங்குபவர்கள்
وَٱلرُّكَّعِ
இன்னும் குனிபவர்கள்
ٱلسُّجُودِ
சிரம் பணிபவர்கள்

Wa iz ja'alnal Baita masaabatal linnassi wa amnanw wattakhizoo mim Maqaami Ibraaheema musallaaa; wa 'ahidnaaa ilaaa Ibraaheema wa Ismaa'eela an tahhiraa Baitiya littaaa'ifeena wal'aakifeena warrukka'is sujood

(மக்காவில் இப்ராஹீம் கட்டிய "கஅபா" என்னும்) வீட்டை மனிதர்கள் ஒதுங்கும் இடமாகவும், (அவர்களுக்கு) பாதுகாப்பு அளிக்கக் கூடியதாகவும் நாம் ஆக்கியிருக்கின்றோம். (அதில்) இப்ராஹீம் நின்ற இடத்தை (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தொழும் இடமாக வைத்துக்கொள்ளுங்கள். "(ஹஜ்ஜு செய்ய அங்கு வந்து) அதை வலம் சுற்றுபவர்களுக்கும், தியானம் புரிய (அதில்) தங்குபவர்களுக்கும், குனிந்து சிரம் பணி(ந்து அதில் தொழு) பவர்களுக்கும் என்னுடைய அந்த வீட்டை சுத்தமானதாக ஆக்கி வையுங்கள்" என்று இப்ராஹீமிடத்திலும் இஸ்மாயீலிடத்திலும் நாம் வாக்குறுதி வாங்கியிருக்கின்றோம்.

Tafseer

وَإِذْ قَالَ
இன்னும் சமயம்/கூறினார்
إِبْرَٰهِۦمُ
இப்ராஹீம்
رَبِّ
என் இறைவா
ٱجْعَلْ
ஆக்கு
هَٰذَا
இதை
بَلَدًا
ஒரு பட்டணமாக
ءَامِنًا
பாதுகாப்பளிக்கக் கூடியது
وَٱرْزُقْ
இன்னும் உணவளி
أَهْلَهُۥ
அதனுடையவர்களில்
مِنَ
இருந்து
ٱلثَّمَرَٰتِ
கனிகளில்
مَنْ
எவர்
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
مِنْهُم
அவர்களில்
بِٱللَّهِ
அல்லாஹ்வைக் கொண்டு
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِۖ
இன்னும் இறுதி நாளை
قَالَ
கூறினான்
وَمَن
இன்னும் எவர்
كَفَرَ
நிராகரிப்பார்
فَأُمَتِّعُهُۥ
சுகம்அனுபவிக்கவைப்பேன்/அவரை
قَلِيلًا
கொஞ்சம்/பிறகு
ثُمَّ أَضْطَرُّهُۥٓ
நிர்ப்பந்திப்பேன்/ அவரை
إِلَىٰ عَذَابِ
வேதனையின் பக்கம்
ٱلنَّارِۖ
நரகம்
وَبِئْسَ
அது கெட்டது
ٱلْمَصِيرُ
செல்லுமிடத்தால்

Wa iz qaala Ibraaheemu Rabbij 'al haazaa baladan aaminanw warzuq ahlahoo minas samaraati man aamana minhum billaahi wal yawmil aakhiri qaala wa man kafara faumatti'uhoo qaleelan summa adtarruhooo ilaa 'azaabin Naari wa bi'salmaseer

தவிர, இப்ராஹீம் (இறைவனிடம்) "என் இறைவனே! (மக்காவாகிய) இதை பாதுகாப்பளிக்கும் ஒரு பட்டணமாக ஆக்கி, இதில் வசிப்பவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கைக் கொள்கிறாரோ அவருக்கு உணவாகப் பலவகைக் கனிவர்க்கங்களையும் அளித்துவா!" எனக் கூறியதற்கு (இறைவன் "என்னை நம்பிக்கை கொள்பவருக்கு நான் உணவளிப்பது போல என்னை) நிராகரிப்ப(வனுக்கும் உணவளித்து அவ)னையும் சிறிது காலம் (அங்குச்) சுகமனுபவிக்க விட்டு வைப்பேன். பின்னர் நரக வேதனையின் பக்கம் (செல்லும்படி) அவனை நிர்ப்பந்திப்பேன். அவன் செல்லும் (அந்த) இடம் (மிகக்) கெட்டது" என்று கூறினான்.

Tafseer

وَإِذْ يَرْفَعُ
இன்னும் சமயம்/உயர்த்தினார்
إِبْرَٰهِۦمُ
இப்ராஹீம்
ٱلْقَوَاعِدَ
அஸ்திவாரங்கள்
مِنَ ٱلْبَيْتِ
வீட்டின்
وَإِسْمَٰعِيلُ
இன்னும் இஸ்மாயீல்
رَبَّنَا
எங்கள் இறைவா
تَقَبَّلْ
ஏற்றுக் கொள்
مِنَّآۖ
எங்களிடமிருந்து
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
ٱلْعَلِيمُ
மிக அறிந்தவன்

Wa iz yarfa'u Ibraaheemul qawaa'ida minal Baitiwa Ismaa'eelu Rabbanaa taqabbal minnaa innaka Antas Samee'ul Aleem

இப்ராஹீமும், இஸ்மாயீலும் அவ்வீட்டின் அஸ்திவாரத்தை உயர்த்தியபொழுது "எங்களுடைய இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த இப்பணியை) எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (எங்களுடைய இந்த பிரார்த்தனையைச்) செவியுறுபவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கின்றாய்.

Tafseer

رَبَّنَا
இறைவா/எங்கள்
وَٱجْعَلْنَا
ஆக்கு/இன்னும் எங்களை
مُسْلِمَيْنِ
பணிபவர்களாக
لَكَ
உனக்கு
وَمِن
இன்னும் இருந்து
ذُرِّيَّتِنَآ
சந்ததி/எங்கள்
أُمَّةً
சமுதாயம்
مُّسْلِمَةً لَّكَ
பணியக்கூடிய/உனக்கு
وَأَرِنَا
இன்னும் காண்பித்துக் கொடு / எங்களுக்கு
مَنَاسِكَنَا
எங்கள் ஹஜ்ஜு கிரியைகளை
وَتُبْ عَلَيْنَآۖ
இன்னும் மன்னித்திடு/ எங்களை
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
ٱلتَّوَّابُ
தவ்பாவை அங்கீகரிப்பவன்
ٱلرَّحِيمُ
பேரன்பாளன்

Rabbanaa waj'alnaa muslimaini laka wa min zurriyyatinaaa ummatam muslimatal laka wa arinaa manaasikanaa wa tub 'alainaa innaka antat Tawwaabur Raheem

எங்கள் இறைவனே! எங்களிருவரையும் உனக்கு (முற்றிலும்) வழிப்படும் முஸ்லிம்களாகவும், எங்களுடைய சந்ததியிலிருந்தும் ஒரு கூட்டத்தினரை உனக்கு (முற்றிலும்) வழிப்படும் முஸ்லிம்களாகவும் ஆக்கிவைப்பாயாக! ("ஹஜ்ஜு" காலத்தில்) நாங்கள் புரிய வேண்டிய வணக்கங்களையும் அறிவிப்பாயாக! (நாங்கள் தவறிழைத்து விட்டாலும்) எங்களை நீ மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றாய்.

Tafseer

رَبَّنَا
எங்கள் இறைவா
وَٱبْعَثْ
இன்னும் அனுப்பு
فِيهِمْ
அவர்களில்
رَسُولًا
ஒரு தூதரை
مِّنْهُمْ
அவர்களிலிருந்து
يَتْلُوا۟
ஓதுவார்
عَلَيْهِمْ
அவர்களுக்கு
ءَايَٰتِكَ
உன் வசனங்களை
وَيُعَلِّمُهُمُ
கற்பிப்பார்/இன்னும் அவர்களுக்கு
ٱلْكِتَٰبَ
வேதத்தை
وَٱلْحِكْمَةَ
இன்னும் ஞானத்தை
وَيُزَكِّيهِمْۚ
பரிசுத்தப்படுத்துவார்/இன்னும் அவர்களை
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்

Rabbanaa wab'as feehim Rasoolam minhum yatloo 'alaihim aayaatika wa yu'allimuhumul Kitaaba wal Hikmata wa yuzakkeehim; innaka Antal 'Azeezul Hakeem

எங்கள் இறைவனே! (என் சந்ததிகளாகிய) அவர்களில் இருந்து உன்னுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காண்பித்து, வேதத்தையும் ஆழ்ந்த கருத்துக்களையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும் ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்புவாயாக! நிச்சயமாக நீதான் மிக்க வல்லவன் நுண்ணறிவுடையவன்" (என்றும் பிரார்த்தித்தனர்.)

Tafseer

وَمَن
இன்னும் யார்
يَرْغَبُ
வெறுப்பார்
عَن مِّلَّةِ
விட்டு/மார்க்கத்தை
إِبْرَٰهِۦمَ
இப்ராஹீமுடைய
إِلَّا
தவிர
مَن
எவன்
سَفِهَ
மடையனாக ஆனான்
نَفْسَهُۥۚ
அவனே
وَلَقَدِ
திட்டவட்டமாக
ٱصْطَفَيْنَٰهُ
தேர்ந்தெடுத்தோம்/அவரை
فِى ٱلدُّنْيَاۖ
இவ்வுலகில்
وَإِنَّهُۥ
நிச்சயமாக அவர்
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
لَمِنَ ٱلصَّٰلِحِينَ
நல்லோரில்தான்

Wa manny yarghabu 'am-Millarti Ibraaheema illaa man safiha nafsah; wa laqadis tafainaahu fid-dunyaa wa innaho fil aakhirati laminas saaliheen

தன்னைத்தானே மூடனாக்கிக் கொண்டவனைத் தவிர இப்ராஹீமுடைய (இஸ்லாம்) மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நிச்சயமாக நாம் அவரை இந்த உலகில் தேர்ந்தெடுத்தோம், மறுமையிலும் நிச்சயமாக அவர் நல்லடியார்களில் இருப்பார்.

Tafseer