Wa lilmutallaqaati mataa'um bilma'roofi haqqan 'alal muttaqeen
தவிர, தலாக்குக் கூறப்பட்ட பெண்களுக்கு, (அவர்களுடைய இத்தாவின் தவணை வரையிலும்) முறைப்படி (கணவனுடைய சொத்திலிருந்தே) பராமரிப்பு பெறத் தகுதியுண்டு. (அவ்வாறு அவர்களை பராமரிப்பது) இறை அச்சமுடையவர்கள் மீது கடமையாகும்.
Kazaalika yubaiyinul laahu lakum aayaatihee la'allakum ta'qiloon
நீங்கள் அறிந்துகொள்வதற்காக தன்னுடைய வசனங்களை அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு தெளிவாக விவரிக்கின்றான்.
Alam tara ilal lazeena kharajoo min diyaarihim wa hum uloofun hazaral mawti faqaaala lahumul laahu mootoo summa ahyaahum; innal laaha lazoo fadlin 'alannaasi wa laakinna aksarannaasi laa yashkuroon
(நபியே!) மரணத்திற்குப் பயந்து தங்கள் வீடுகளை விட்டு ஆயிரக் கணக்கில் வெளியேறியவர்களை நீங்கள் கவனித்தீர்களா? அல்லாஹ் அவர்களை இறக்கும்படிக் கூறி (இறக்கச் செய்து) பின்னர் அவர்களை உயிர்ப்பித்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது கருணையுள்ளவனாக இருக்கின்றான். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் நன்றி செலுத்துவது இல்லை.
Wa qaatiloo fee sabeelil laahi wa'lamooo annal laaha Samee'un 'Aleem
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் பிரார்த்தனையை) செவியுறுபவனாகவும், (உங்கள் கஷ்டத்தை) அறிபவனாகவும் இருக்கின்றான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
Man zal lazee yuqridul laaha qardan hasanan fayudaa 'ifahoo lahoo ad'aafan kaseerah; wallaahu yaqbidu wa yabsut-u wa ilaihi turja'oon
(கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு) அழகான முறையில் அல்லாஹ்விற்காகக் கடன் கொடுப்பவர் யார்? அதை அவன் அவர்களுக்கு பன்மடங்கு அதிகரிக்கும்படிச் செய்வான். அல்லாஹ் (பொருளை சிலருக்குச்) சுருக்கியும் கொடுப்பான். (சிலருக்குப்) பெருக்கியும் கொடுப்பான். அன்றி அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்.
Alam tara ilal malai mim Baneee Israaa'eela mim ba'di Moosaaa iz qaaloo li Nabiyyil lahumub 'as lanaa malikan nuqaatil fee sabeelillaahi qaala hal 'asaitum in kutiba 'alaikumul qitaalu allaa tuqaatiloo qaaloo wa maa lanaaa allaa nuqaatila fee sabeelil laahi wa qad ukhrijnaa min diyaarinaa wa abnaaa'inaa falammaa kutiba 'alaihimul qitaalu tawallaw illaa qaleelam minhum; wallaahu 'aleemum bizzaalimeen
(நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளில் மூஸாவுக்குப் பின் இருந்த தலைவர்களை நீங்கள் கவனிக்கவில்லையா? (அவர்கள்) "அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் புரிய எங்களுக்கு(த் தலைமை வகிக்க) ஒரு அரசனை அனுப்பி வையுங்கள்" என்று தங்கள் நபியிடம் கூறியபோது, (அவர்) "போர் செய்வது உங்கள் மீது விதிக்கப்பட்டால் நீங்கள் போர் செய்யாமல் (விலகி) இருந்து விடுவீர்களா?" என்று கேட்டார். (அதற்கு) அவர்கள் "எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப் பட்டிருக்க, (எங்களை வெளியேற்றிய) அவர்களுடன் அல்லாஹ் வுடைய பாதையில் நாங்கள் போர் செய்யாதிருக்க எங்களுக்கென்ன (தடை)?" என்று கூறினார்கள். ஆனால், போர் செய்யும்படி கட்டளையிடப்பட்டபொழுதோ அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள் போர் செய்யாது) பின் சென்றுவிட்டார்கள். (இத்தகைய) அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிவான்.
Wa qaala lahum Nabiy yuhum innal laaha qad ba'asa lakum Taaloota malikaa; qaalooo annaa yakoonu lahul mulku 'alainaa wa nahnu ahaqqu bilmulki minhu wa lam yu'ta sa'atamminal maal; qaala innallaahas tafaahu 'alaikum wa zaadahoo bastatan fil'ilmi waljismi wallaahu yu'tee mulkahoo mai yashaaa'; wallaahu Waasi'un 'Aleem
மேலும், அவர்களுடைய நபி அவர்களை நோக்கி "நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கின்றான்" என்று கூறியதற்கு (அவர்கள்) "எங்கள் மீது அரசாலும் உரிமை அவருக்கு எவ்வாறு ஏற்படும். அவரை விட நாங்கள்தான் அரசாட்சி புரிய மிகத் தகுதியுடையவர்கள், (அரசாட்சி புரிவதற்கு அவசியமான) திரளான செல்வத்தையும் அவர் அடையவில்லை" என்று கூறினார்கள். (அதற்கு அவர் களுடைய நபி) "நிச்சயமாக அல்லாஹ், உங்கள் மீது (ஆட்சி புரிய) அவரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். அன்றி (போர்க்) கல்வியிலும், தேகத்(தின் பருமனிலும் பலத்)திலும் உங்களைவிட அவரை அதிகப்படுத்தியும் இருக்கின்றான். அல்லாஹ் தான் விரும்பியவர் களுக்கே தன் ஆட்சியை வழங்குவான். அல்லாஹ் (வழங்குவதில்) அதிக விசாலமானவன் (அரசாட்சி புரியத் தகுதியுடையவர்களை) நன்கறிந்தவன்" என்று கூறினார்.
Wa qaala lahum Nabiyyuhum inna Aayata mulkiheee ai yaatiyakumut Taabootu feei sakeenatummir Rabbikum wa baqiyyatummimmaa taraka Aalu Moosa wa Aalu Haaroona tahmiluhul malaaa'ikah; inna fee zaalika la Aayatal lakum in kuntum mu'mineen
பின்னும், அவர்களுடைய நபி அவர்களை நோக்கி "அவருடைய அரசுரிமைக்கு அறிகுறியாவது: உங்கள் இறைவனிடமிருந்து மலக்குகள் சுமந்த வண்ணமாக ஒரு பேழை திண்ணமாக உங்களிடம் வரும். அதில் உங்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடியதும், மூஸாவின் சந்ததிகள் மற்றும் ஹாரூனுடைய சந்ததிகள் விட்டுச் சென்றதில் மீதமுள்ளதும் இருக்கும். நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு அதில் ஓர் அத்தாட்சி உண்டு" என்று கூறினார்.
Falammaa fasala Taalootu biljunoodi qaala innal laaha mubtaleekum binaharin faman shariba minhu falaisa minnee wa mallam yat'amhu fa innahoo minneee illaa manigh tarafa ghurfatam biyadih; fashariboo minhu illaa qaleelamminhum; falammaa jaawazahoo huwa wallazeena aamanoo ma'ahoo qaaloo laa taaqata lanal yawma bi Jaaloota wa junoodih; qaalallazeena yazunnoona annahum mulaaqul laahi kam min fi'atin qaleelatin ghalabat fi'atan kaseeratam bi iznil laah; wallaahuma'as saabireen
பின்னர், தாலூத் படைகளைத் திரட்டிக் கொண்டு புறப்பட்டபொழுது அவர் (தன் இராணுவத்தை நோக்கி) "நிச்சயமாக (நீங்கள் செல்லும் வழியில்) அல்லாஹ் ஓர் ஆற்றைக் கொண்டு உங்களைச் சோதிப்பான். (உங்களில்) எவர் அதிலிருந்து தன் கைக்கொண்ட ஒரு உள்ளங்கை அளவு நீரைவிட அதிகமாகக் குடிக்கவில்லையோ அவர்தான் என்னைச் சார்ந்தவர். எவர் அதில் இருந்து (அதற்கதிகமாகக்) குடிக்கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல" எனக் கூறினார். ஆனால், (ஆற்றைக் கடக்கவே) அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாகக்) குடித்துவிட்டார்கள். பின்னர், அவர் (தம்முடன் இருந்த) நம்பிக்கையாளர்களுடன் அதனைக் கடந்து சென்ற பொழுது, (அதிகமாகக் குடித்த அவர்கள்) ஜாலூத்துடனும் அவனுடைய இராணுவத்துடனும் "இன்று (போர் புரிய) எங்களுக்குச் சக்தியில்லை" என்று கூறி (விலகி) விட்டார்கள். (ஆனால் அவர்களில்) எவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என உறுதி கொண்டிருந்தார்களோ அவர்கள் மற்றவர்களை நோக்கி "(எவ்வளவோ) பெரும் கூட்டத்தினரை எத்தனையோ சிறு கூட்டத்தினர் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு வெற்றி பெற்று இருக்கின்றார்கள், அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்" என்று கூறினார்கள்.
Wa lammaa barazoo liJaaloota wa junoodihee qaaloo Rabbanaaa afrigh 'alainaa sabranw wa sabbit aqdaamanaa wansurnaa 'alal qawmil kaafireen
மேலும், அவர்கள் ஜாலூத்தையும் அவனுடைய படைகளையும் (போர்க்களத்தில்) எதிர்த்தபொழுது "எங்கள் இறைவனே! நீ எங்கள்மீது பொறுமையைச் சொரிவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்தி வைப்பாயாக! அன்றி, நிராகரிக்கும் இந்த மக்கள் மீது (வெற்றி பெற) எங்களுக்கு நீ உதவி புரிவாயாக!" என்றும் பிரார்த்தனை செய்தார்கள்.