Skip to main content

وَٱلَّتِىٓ
இன்னும் எவள்
أَحْصَنَتْ
பாதுகாத்துக் கொண்டாள்
فَرْجَهَا
தனது மறைவிடத்தை
فَنَفَخْنَا
நாம் ஊதினோம்
فِيهَا
அவளில்
مِن رُّوحِنَا
நமது உயிரிலிருந்து
وَجَعَلْنَٰهَا
இன்னும் அவளைஆக்கினோம்
وَٱبْنَهَآ
அவளுடைய மகனையும்
ءَايَةً
ஓர் அத்தாட்சியாக
لِّلْعَٰلَمِينَ
அகிலத்தார்களுக்கு

Wallateee ahsanat farjahaa fanafakhnaa feehaa mir roohinaa wa ja'alnaahaa wabnahaaa Aayatal lil'aalameen

தன் கற்பைக் காத்துக்கொண்ட (மர்யம் என்ப)வரை(யும் நீங்கள் ஞாபகமூட்டுங்கள். நம்முடைய தூதர்) ஜிப்ரீல் மூலம் அவருடைய கர்ப்பத்தில் நாம் ஊதினோம். அவரையும் அவருடைய மகனையும் உலகத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
هَٰذِهِۦٓ
இதுதான்
أُمَّتُكُمْ
உங்களது
أُمَّةً وَٰحِدَةً
ஒரே மார்க்கம்
وَأَنَا۠
நான்தான்
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
فَٱعْبُدُونِ
ஆகவே, என்னை வணங்குங்கள்

Inna haaziheee ummatukum ummatanw waahidatanw wa Ana Rabbukum fa'budoon

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அனைவரும் (ஒரே மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டிய) ஒரே வகுப்பார்தான். (இதில் ஜாதி வேற்றுமை கிடையாது.) உங்கள் அனைவருக்கும் இறைவன் நான் ஒருவனே! ஆகவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்.

Tafseer

وَتَقَطَّعُوٓا۟
பிரிந்து விட்டனர்
أَمْرَهُم
காரியத்தில் தங்கள்
بَيْنَهُمْۖ
தங்களுக்கு மத்தியில்
كُلٌّ
எல்லோரும்
إِلَيْنَا
நம்மிடமே
رَٰجِعُونَ
திரும்புவார்கள்

Wa taqatta'ooo amrahum bainahum kullun ilainaaa raaji'oon

எனினும் இவர்கள் தங்களுக்குள் (வேறுபட்டு) பல பிரிவுகளாக பிரிந்துவிட்டனர். இவர்கள் அனைவரும் நம்மிடம் திரும்ப வரக்கூடியவர்கள்தான்.

Tafseer

فَمَن
யார்
يَعْمَلْ
செய்வாரோ
مِنَ ٱلصَّٰلِحَٰتِ
நற்காரியங்களை
وَهُوَ مُؤْمِنٌ
தான் நம்பிக்கையாளராக இருந்து
فَلَا كُفْرَانَ
மறுக்கப்படாது/முயற்சியை/அவருடைய
وَإِنَّا
நிச்சயமாக நாம்
لَهُۥ
அதை
كَٰتِبُونَ
பதிவு செய்கிறோம்

Famai ya'mal minas saalihaati wa huwa mu'minun falaa kufraana lisa'yihee wa innaa lahoo kaatiboon

ஆகவே, (இவர்களில்) எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுடைய முயற்சி வீணாகிவிடாது. நிச்சயமாக நாம் அவைகளைப் பதிவு செய்து வருகிறோம்.

Tafseer

وَحَرَٰمٌ
விதிக்கப்பட்டுவிட்டது
عَلَىٰ
மீது
قَرْيَةٍ
ஊர் (மக்கள்)
أَهْلَكْنَٰهَآ
நாம் அழித்து விட்டோம்/அதை
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
لَا يَرْجِعُونَ
திரும்பவே மாட்டார்கள்

Wa haraamun 'alaa qaryatin ahlaknaahaaa annahum laa yarji'oon

நாம் எவ்வூரார்களை அழித்துவிட்டோமோ அவர்கள் நிச்சயமாக (உலகிற்கு) திரும்பவே மாட்டார்கள் என விதிக்கப் பட்டுள்ளது.

Tafseer

حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا فُتِحَتْ
திறக்கப்பட்டால்
يَأْجُوجُ
யஃஜூஜ்
وَمَأْجُوجُ
இன்னும் மஃஜூஜ்
وَهُم
அவர்கள்
مِّن كُلِّ
எல்லா இடத்திலிருந்து
حَدَبٍ
உயரமான
يَنسِلُونَ
விரைந்து வருவார்கள்

Hattaaa izaa futihat Yaajooju wa Maajooju wa hum min kulli hadabiny yansiloon

யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்திற்கு வழி திறக்கப்பட்டால் அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் (தண்ணீர் பாய்ந்து ஓடுவதைப் போல்) வழிந்து (உலகின் பல பாகங்களிலும் அதி சீக்கிரத்தில் பரவி) விடுவார்கள்.

Tafseer

وَٱقْتَرَبَ
சமீபமாகிவிடும்
ٱلْوَعْدُ
வாக்கு
ٱلْحَقُّ
உண்மையான
فَإِذَا هِىَ
அப்போது
شَٰخِصَةٌ
கூர்மையாகிவிடும்
أَبْصَٰرُ
பார்வைகள்
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களின்
يَٰوَيْلَنَا
எங்கள் நாசமே
قَدْ
திட்டமாக
كُنَّا
இருந்து விட்டோம்
فِى غَفْلَةٍ
அலட்சியத்தில்
مِّنْ هَٰذَا
இதை விட்டு
بَلْ
மாறாக
كُنَّا
இருந்தோம்
ظَٰلِمِينَ
அநியாயக்காரர்களாக

Waqtarabal wa'dul haqqu fa-izaa hiya shaakhisatun absaarul lazeena kafaroo yaawailanaa qad kunna fee ghaflatim min haaza bal kunnaa zaalimeen

(உலக முடிவு பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கிவிட்டது. (அது வரும் பட்சத்தில் அதைக் காணும்) நிராகரிப்பவர்களின் கண்கள் திறந்தது திறந்தவாறே இருக்கும். (அன்றி அவர்கள்) "எங்களுக்குக் கேடுதான். நிச்சயமாக நாங்கள் இதனைப்பற்றி கவலையற்றவர்களாக இருந்தோமே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோமே!" (என்று புலம்புவார்கள்).

Tafseer

إِنَّكُمْ
நிச்சயமாக நீங்களும்
وَمَا تَعْبُدُونَ
நீங்கள் வணங்குகின்றவையும்
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
حَصَبُ
எறியப்படுபவை
جَهَنَّمَ
நரகத்தில்
أَنتُمْ لَهَا
நீங்கள் அதில்
وَٰرِدُونَ
நுழைவீர்கள்

Innakum wa maa ta'budoona min doonil laahi hasabu Jahannama antum lahaa waaridoon

(அச்சமயம் அவர்களை நோக்கி) "நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவைகளும் நரகத்தின் எரிகட்டையாகி விட்டீர்கள். நீங்கள் அனைவரும் அங்கு செல்ல வேண்டியவர்கள்தாம்" (என்று கூறப்படும்).

Tafseer

لَوْ كَانَ
இருந்திருந்தால் இவை
ءَالِهَةً
கடவுள்களாக
مَّا وَرَدُوهَاۖ
அதில் நுழைந்திருக்க மாட்டார்கள்
وَكُلٌّ
எல்லோரும்
فِيهَا
அதில்
خَٰلِدُونَ
நிரந்தரமாக தங்கக்கூடியவர்கள்

Law kaana haaa'ulaaa'i aalihatam maa waradoohaa wa kullun feehaa khaalidoon

(அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த) இவை (உண்மையான) தெய்வங்களாக இருந்தால் நரகத்திற்கு வந்தே இருக்காது. எனினும், அவர்கள் அனைவரும் (நரகத்தில் தள்ளப்பட்டு) என்றென்றும் அதில் தங்கிவிடுவார்கள்.

Tafseer

لَهُمْ
அவர்களுக்கு
فِيهَا
அதில் உண்டு
زَفِيرٌ
மூச்சு வெளியேறுதல்
وَهُمْ
இன்னும் அவர்கள்
فِيهَا
அதில்
لَا يَسْمَعُونَ
செவியுறமாட்டார்கள்

Lahum feehaa zafeerunw wa hum feehaa laa yasma'oon

அதில் அவர்கள் திணறித் திணறிக் (கழுதையைப் போல்) கதறுவார்கள். (மற்றெவரின் சப்தமும்) அவர்கள் காதில் விழாது.

Tafseer