Wa kam qasamnaa min qaryatin kannat zaalimatanw wa anshadnaa ba'dahaa qawman aakhareen
அநியாயக்காரர்கள் வசித்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்து நாசமாக்கி விட்டோம். அவர்களுக்குப் பின்னர் (அவ்விடத்தில்) வேறு மக்களை உற்பத்தி செய்தோம்.
Falammaaa ahassoo baasanaaa izaaa hum minhaa yarkudoon
அவர்களும் நம்முடைய வேதனையின் அறிகுறியை உணர்ந்துகொண்ட மாத்திரத்தில் தங்கள் ஊரைவிட்டு ஓட ஆரம்பித்தார்கள்.
Laa tarkudoo warji'ooo ilaa maaa utriftum feehe wa masaakinikum la'allakum tus'aloon
(அச்சமயம் நாம் அவர்களை நோக்கி) "நீங்கள் ஓடாதீர்கள்! நீங்கள் மிக்க ஆடம்பரமாக அனுபவித்து வந்த செல்வத்தின் பக்கமும், வசித்திருந்த உங்கள் வீடுகளுக்கும் நீங்கள் திரும்புங்கள். அங்கு நீங்கள் அதுபற்றி கேட்கப்படுவீர்கள்" (என்று கூறினோம்.)
Qaaloo yaa wailanaaa innaa kunnaa zaalimeen
அதற்கவர்கள் "எங்களுடைய கேடே! நிச்சயமாக நாங்கள் வரம்பு மீறி (பாவிகளாகி) விட்டோம்" என்று கூக்குரலிட்டார்கள்.
Famaa zaalat tilka da'waahum hattaa ja'alnaahum haseedan khaamideen
அவர்களுடைய அக்கூக்குரல் அவர்களை நாம் அழித்துச் சாம்பலாக்கும் வரையில் நீங்காதிருந்தது.
Wa maa khalaqnas samaaa'a wal arda wa maa bainahumaa laa'ibeen
வானங்களையும், பூமியையும், அதற்கு மத்தியில் உள்ளவைகளையும் வீண் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.
Law aradnaaa an nattakhiza lahwal lat takhaznaahu mil ladunnaaa in kunnaa faa'ileen
நாம் வீண் விளையாட்டுக்காரனாக இருந்து விளையாட வேண்டும் என்று நாம் கருதியும் இருந்தால் நம்மிடமுள்ள (நமக்குத் தகுதியான)தை நாம் எடுத்து (விளையாடி)க் கொண்டிருப்போம்.
Bal naqzifu bilhaqqi 'alal baatili fa yadmaghuhoo fa izaa huwa zaahiq; wa lakumul wailu mimmaa tasifoon
அவ்வாறன்று; மெய்யைப் பொய்யின் மீது எறிகின்றோம். அது (அதன் தலையை) உடைத்து விடுகின்றது. பின்னர் அது அழிந்தும் விடுகின்றது. (ஆகவே, இறைவனைப் பற்றி அவனுக்கு மனைவி உண்டென்றும், சந்ததி உண்டென்றும்) நீங்கள் கூறுபவற்றின் காரணமாக உங்களுக்குக் கேடுதான்.
Wa lahoo man fis samaawaati wal ard; wa man 'indahoo laa yastakbiroona 'an 'ibaada tihee wa laa yastahsiroon
வானங்களிலும் பூமியிலுமுள்ள யாவும் அவனுக்குரியனவே! அவனுடைய சந்நிதியில் இருக்கக்கூடிய (முகர்ரபான மலக்குகளாயினும் சரி; அவர்களும் அவனுடைய அடியார்களே! அ)வர்கள் அவனை வணங்காது பெருமையடிக்கவும் சோர்வுறவும் மாட்டார்கள்.
Yusabbihoona laila wannahaara laa yafturoon
அவர்கள் இரவு பகல் எந்நேரமும் இடைவிடாது அவனைப் போற்றி புகழ்ந்துகொண்டே இருக்கின்றனர்.