Innamaa tunziru manit taba 'az-Zikra wa khashiyar Rahmaana bilghaib, fabashshirhu bimaghfiratinw-wa ajrin kareem
நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம், எவர்கள் நல்உபதேசத்தைப் பின்பற்றி, மறைவான காரியங்களிலும் (அல்லாஹ் வாகிய) ரஹ்மானுக்குப் பயந்து நடக்கின்றார்களோ அவர் களுக்குத்தான். ஆகவே, இத்தகையவர்களுக்கு மன்னிப்பைக் கொண்டும், கண்ணியமான கூலியைக் கொண்டும் நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.
Innaa Nahnu nuhyil mawtaa wa naktubu maa qaddamoo wa aasaarahum; wa kulla shai'in ahsainaahu feee Imaamim Mubeen
நிச்சயமாக நாம் மரணித்தவர்களை (மறுமையில்) உயிர் கொடுத்து எழுப்புவோம். அவர்கள் செய்து அனுப்பிய செயல் களையும், அவர்கள் விட்டுச் சென்ற காரியங்களையும் நாம் எழுதி வருகின்றோம். இவை ஒவ்வொன்றையும் "லவ்ஹுல் மஹ்ஃபூளில்" (பதிவுப் புத்தகத்தில்) பதிந்தே வைத்திருக்கின்றோம்.
Wadrib lahum masalan Ashaabal Qaryatih; iz jaaa'ahal mursaloon
(நபியே!) நம்முடைய தூதர்கள் சென்ற, ஓர் ஊர்வாசிகளை அவர்களுக்கு உதாரணமாகக் கூறுங்கள்.
Iz arsalnaaa ilaihimusnaini fakazzaboohumaa fa'azzaznaa bisaalisin faqaalooo innaaa ilaikum mursaloon
நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பியபொழுது அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள். ஆகவே மூன்றாவது தூதரைக் கொண்டு (அவ்விருவருக்கும்) உதவி செய்தோம். ஆகவே, இவர்கள் (மூவரும் அவர்களை நோக்கி) "மெய்யாகவே நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்களாவோம்" என்று கூறினார்கள்.
Qaaloo maaa antum illaa basharum mislunaa wa maaa anzalar Rahmaanu min shai'in in antum illaa takziboon
அதற்கவர்கள் "நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே! (தவிர இறைவனின் தூதர்களல்ல.) ரஹ்மான் (உங்கள் மீது வேதத்தில்) யாதொன்றையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்பவர்களே தவிர வேறில்லை" என்று கூறினார்கள்.
Qaaloo Rabbunaa ya'lamu innaaa ilaikum lamursaloon
அதற்கவர்கள் "நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள்தாம் என்பதை எங்கள் இறைவனே நன்கறிவான்" என்றதுடன்,
Wa maa 'alainaaa illal balaaghul mubeen
"எங்களுடைய தூதைப் பகிரங்கமாக எடுத்துரைப்பதையன்றி (உங்களை நிர்ப்பந்திப்பது ) எங்கள் மீது கடமையல்ல" என்றும் (கூறினார்கள்.)
Qaaloo innaa tataiyarnaa bikum la'il-lam tantahoo lanar jumannakum wa la-yamassan nakum minnaa 'azaabun aleem
அதற்கவர்கள் "நாங்கள் உங்கள் வருகையை நிச்சயமாக கெட்ட சகுனமாக நினைக்கின்றோம். நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லெறிந்து கொன்று விடுவோம். அன்றி, எங்களுடைய துன்புறுத்தும் வேதனையும் உங்களைப் பிடித்துக்கொள்ளும்" என்று கூறினார்கள்.
Qaaloo taaa'irukum ma'akum; a'in zukkirtum; bal antum qawmum musrifoon
அதற்கு (நம் தூதர்கள்) "உங்களுடைய கெட்ட சகுனம் உங்களிடம்தான் இருக்கின்றது. உங்களுக்கு நல்லறிவைப் புகட்டிய தற்காகவா? (எங்களைக் கெட்ட சகுனம் என்று கூறுகிறீர்கள்). அது சரியன்று; நீங்கள்தாம் வரம்பு மீறிய மக்கள்" என்று கூறினார்கள்.
Wa jaaa'a min aqsal madeenati rajuluny yas'aa qaala yaa qawmit tabi'ul mursaleen
இதற்கிடையில் அப்பட்டிணத்தின் கடைக்கோடியிலிருந்து "(ஹபீபுந் நஜ்ஜார்" என்னும்) ஒரு மனிதர் விரைந்தோடி வந்து (அப்பட்டிணவாசிகளை நோக்கிக்) கூறியதாவது: "என்னுடைய மக்களே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்.