Skip to main content

رِّزْقًا
உணவாக இருப்பதற்காக
لِّلْعِبَادِۖ
அடியார்களுக்கு
وَأَحْيَيْنَا
நாம் உயிர்ப்பிப்போம்
بِهِۦ
அதன் மூலம்
بَلْدَةً
பூமியை
مَّيْتًاۚ
இறந்த(து)
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
ٱلْخُرُوجُ
வெளியேறுவதும்

Rizqal lil'ibaad, wa ahyainaa bihee baldatam maitaa; kazaalikal khurooj

அதனை (நம்) அடியார்களுக்கு உணவாக்கி, அவைகளைக் கொண்டு இறந்த பூமியை நாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே (மரணித்தவர்கள் சமாதிகளில் இருந்து) வெளியாகுவதும் ஏற்படும்.

Tafseer

كَذَّبَتْ
பொய்ப்பித்தனர்
قَبْلَهُمْ
இவர்களுக்கு முன்னர்
قَوْمُ
மக்களும்
نُوحٍ
நூஹூடைய
وَأَصْحَٰبُ ٱلرَّسِّ
கிணற்றுடையவர்களும்
وَثَمُودُ
ஸமூது மக்களும்

Kazzabat qablahum qawmu Noohinw wa Ashaabur Rassi wa Samood

(இவைகளையெல்லாம்) இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹ்வுடைய மக்களும், ரஸ்ஸு(அகழு)டைய மக்களும், ஸமூத் என்னும் மக்களும் (பொய்யாக்கினர்.)

Tafseer

وَعَادٌ
ஆது மக்களும்
وَفِرْعَوْنُ
ஃபிர்அவ்னும்
وَإِخْوَٰنُ
சகோதரர்களும்
لُوطٍ
லூத்துடைய

Wa 'Aadunw wa Fir'awnu wikhwaanu loot

ஆது என்னும் மக்களும், ஃபிர்அவ்னும், லூத்துடைய சகோதரர்களும் (பொய்யாக்கினர்).

Tafseer

وَأَصْحَٰبُ ٱلْأَيْكَةِ
தோட்டக்காரர்களும்
وَقَوْمُ
மக்களும்
تُبَّعٍۚ
துப்பஃ உடைய
كُلٌّ
எல்லோரும்
كَذَّبَ
பொய்ப்பித்தனர்
ٱلرُّسُلَ
தூதர்களை
فَحَقَّ
ஆகவே, உறுதியாகிவிட்டது
وَعِيدِ
என் எச்சரிக்கை

Wa Ashaabul Aykati wa qawmu Tubba'; kullun kazzabar Rusula fahaqqa wa'eed

அன்றி, தோப்பில் வசித்தவர்களும், "துப்பஉ" என்னும் மக்களும் ஆகிய இவர்கள் ஒவ்வொருவரும் நம்முடைய தூதர்களைப் பொய்யாக்கினர். ஆகவே, (அவர்களை அழித்து விடுவோமென்ற) நம்முடைய வாக்கு பூர்த்தியாயிற்று.

Tafseer

أَفَعَيِينَا
நாம் பலவீனமாக ஆகிவிட்டோமா?
بِٱلْخَلْقِ
படைத்ததினால்
ٱلْأَوَّلِۚ
முதல் முறை
بَلْ
மாறாக
هُمْ
அவர்கள் இருக்கின்றனர்
فِى لَبْسٍ
குழப்பத்தில்
مِّنْ خَلْقٍ
படைக்கப்படுவதில்
جَدِيدٍ
புதிதாக

Afa'a yeenaa bilkhalqil awwal; bal hum fee labsim min khalqin jadeed

(படைப்புகள் அனைத்தையும்) முதல்முறை படைத்ததில் நாம் களைத்து விட்டோமா; (இவர்களை மறுமுறை படைப்பது நமக்குக் கஷ்டமெனக் கூறுவதற்கு) எனினும் இவர்கள். (மீண்டும் இவர்களைப்) புதிதாக படைக்கும் விஷயத்தில் சந்தேகத்தில் இருக்கின்றனர்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
خَلَقْنَا
நாம் படைத்தோம்
ٱلْإِنسَٰنَ
மனிதனை
وَنَعْلَمُ
இன்னும் நாம் அறிவோம்
مَا تُوَسْوِسُ
எதை/கிசுகிசுக்கிறதோ
بِهِۦ
அதை
نَفْسُهُۥۖ
அவனது உள்ளம்
وَنَحْنُ
நாம்
أَقْرَبُ
மிக நெருக்கமானவர்கள்
إِلَيْهِ
அவனுக்கு
مِنْ حَبْلِ
நரம்பைவிட
ٱلْوَرِيدِ
கழுத்தின்

Wa laqad khalaqnal insaana wa na'lamu maa tuwaswisu bihee nafsuhoo wa Nahnu aqrabu ilaihi min hablil wareed

நிச்சயமாக நாம்தான் மனிதனை (முதன் முதலாகவும்) படைத்தோம். அவன் மனதில் உதிக்கும் எண்ணத்தையும் நாம் அறிவோம். பிடரியிலுள்ள இரத்த நரம்பைவிட நாம் அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கின்றோம்.

Tafseer

إِذْ يَتَلَقَّى
சந்திக்கின்ற போது
ٱلْمُتَلَقِّيَانِ
சந்திக்கின்ற இரு வானவர்கள்
عَنِ ٱلْيَمِينِ
வலது பக்கத்திலும்
وَعَنِ ٱلشِّمَالِ
இடது பக்கத்திலும்
قَعِيدٌ
கண்காணிப்பவர்

'Iz yatalaqqal mutalaqqi yaani 'anil yameeni wa 'anish shimaali qa'eed

வலது புறத்தில் ஒருவரும், இடது புறத்தில் ஒருவருமாக இருவர் (அவன் செய்யும் செயலைக்) குறிப்பெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

Tafseer

مَّا يَلْفِظُ
பேச மாட்டான்
مِن قَوْلٍ
பேச்சில் எதையும்
إِلَّا
தவிர
لَدَيْهِ
அவனிடம் இருந்தே
رَقِيبٌ
கண்காணிப்பாளர்
عَتِيدٌ
ஆஜராகி இருப்பவர்

Maa yalfizu min qawlin illaa ladaihi raqeebun 'ateed

(மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதனை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகின்றது.)

Tafseer

وَجَآءَتْ
வந்துவிட்டது
سَكْرَةُ
மயக்கம்
ٱلْمَوْتِ
மரணத்தின்
بِٱلْحَقِّۖ
உண்மையாக
ذَٰلِكَ
அதுதான்
مَا كُنتَ
எது/நீ இருந்தாய்
مِنْهُ
அதை விட்டு
تَحِيدُ
விலகி ஓடுபவனாக

Wa jaaa'at kullu nafsim ma'ahaa saaa'iqunw wa shaheed

மரணத்தின் கஷ்டம் மெய்யாகவே வந்துவிடும் பட்சத்தில் (அவனை நோக்கி) "நீ தப்பிவிடக் கருதியது இதுதான்" (என்று கூறப்படும்.)

Tafseer

وَنُفِخَ
ஊதப்படும்
فِى ٱلصُّورِۚ
சூரில்
ذَٰلِكَ يَوْمُ
அதுதான்/நாள்
ٱلْوَعِيدِ
எச்சரிக்கப்பட்ட

Wa nufikha fis Soor; zaalika yawmul wa'eed

எக்காளம் ஊதப்பட்டால் (அவனை நோக்கி "உனக்குப்) பயமுறுத்தப்பட்டு வந்த (விசாரணை) நாள் இதோ (வந்துவிட்டது)" என்று கூறப்படும்.

Tafseer