Skip to main content

قَالُوٓا۟
கூறினார்கள்
أَرْجِهْ
தவணை கொடு/அவருக்கு
وَأَخَاهُ
இன்னும் அவருடைய சகோதரருக்கு
وَأَرْسِلْ
இன்னும் அனுப்பு
فِى
நகரங்களில்
ٱلْمَدَآئِنِ
நகரங்களில் ஒன்றுதிரட்டுபவர்களை
حَٰشِرِينَ
Err

Qaalooo arjih wa akhaahu wa arsil filmadaaa'ini haashireen

அதற்கவர்கள் "அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் தவணை கொடுத்துவிட்டு பல பட்டினங்களுக்கும் துப்பறிபவர்களை அனுப்பி வையுங்கள்.

Tafseer

يَأْتُوكَ
உம்மிடம் வருவார்கள்
بِكُلِّ
எல்லோரையும் கொண்டு
سَٰحِرٍ
சூனியக்காரர்
عَلِيمٍ
கற்றறிந்தவர்

Yaatooka bikulli saahirin 'aleem

அவர்கள் சூனியத்தில் வல்லவர்களை உங்களிடம் அழைத்து வருவார்கள்" என்று கூறினார்கள்.

Tafseer

وَجَآءَ
வந்தார்(கள்)
ٱلسَّحَرَةُ
சூனியக்காரர்கள்
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னிடம்
قَالُوٓا۟
கூறினர்
إِنَّ
நிச்சயமாக
لَنَا
எங்களுக்கு
لَأَجْرًا
திட்டமாக கூலி
إِن كُنَّا
நாங்கள் ஆகிவிட்டால்
نَحْنُ
நாங்கள்
ٱلْغَٰلِبِينَ
மிகைத்தவர்களாக

Wa jaaa'as saharatu Fir'awna qaaloo inna lanaa la ajjran in kunnaa nahnul ghaalibeen

(அவ்வாறு அனுப்பியதில் பல திசைகளிலும் இருந்த) சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்து நாங்கள் "(மூஸாவை) ஜெயித்துவிட்டால் நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி உண்டு (அல்லவா?)" என்று கேட்டனர்.

Tafseer

قَالَ
கூறினான்
نَعَمْ
ஆம்!
وَإِنَّكُمْ
இன்னும் நிச்சயமாக நீங்கள்
لَمِنَ ٱلْمُقَرَّبِينَ
நெருக்கமானவர்களில்

Qaala na'am wa innakum laminal muqarrabeen

அதற்கவன் "ஆம்! (உங்களுக்கு வெகுமதி உண்டு.) அன்றி, நிச்சயமாக நீங்கள் (நம் அரசவையிலும் எனக்கு) மிக்க நெருங்கியவர் களாக இருப்பீர்கள்" என்றும் கூறினான்.

Tafseer

قَالُوا۟
கூறினார்கள்
يَٰمُوسَىٰٓ
மூஸாவே!
إِمَّآ أَن
நீர் எறிகிறீரா?
وَإِمَّآ أَن
அவர்கள் நாங்கள் இருக்கவா?
نَحْنُ
நாங்களே
ٱلْمُلْقِينَ
எறிபவர்களாக

Qaaloo yaa Moosaaa immaaa an tulqiya wa immaaa an nakoona nahnul mulqeen

(பின்னர், அச்சூனியக்காரர்கள் மூஸாவை நோக்கி) "மூஸாவே! (முதலில் உங்களுடைய தடியை) நீங்கள் எறிகிறீரா? அல்லது நாம் எறிவதா?" என்று கேட்டனர்.

Tafseer

قَالَ
கூறினார்
أَلْقُوا۟ۖ
எறியுங்கள்
فَلَمَّآ أَلْقَوْا۟
அவர்கள் எறிந்தபோது
سَحَرُوٓا۟
மயக்கினார்கள்
أَعْيُنَ
கண்களை
ٱلنَّاسِ
மக்களுடைய
وَٱسْتَرْهَبُوهُمْ
இன்னும் திடுக்கிடச் செய்தனர் அவர்களை
وَجَآءُو
இன்னும் வந்தனர்
بِسِحْرٍ
ஒரு சூனியத்தைக்கொண்டு
عَظِيمٍ
பெரியது

Qaala alqoo falam maaa alqaw saharooo a'yunannaasi wastarhaboohum wa jaaa'oo bisihrin 'azeem

அதற்கு மூஸா "நீங்களே (முதலில்) எறியுங்கள்" என்று கூறினார். அவ்வாறு அவர்கள் எறிந்து மக்களுடைய கண்களைக் கட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தைச் செய்தனர்.

Tafseer

وَأَوْحَيْنَآ
வஹீ அறிவித்தோம்
إِلَىٰ مُوسَىٰٓ
மூஸாவிற்கு
أَنْ أَلْقِ
எறிவீராக என்று
عَصَاكَۖ
உம் தடியை
فَإِذَا هِىَ
அப்போது அது விழுங்கிவிட்டது
مَا يَأْفِكُونَ
எவற்றை/போலியாக செய்வார்கள்

Wa awhainaaa ilaa Moosaaa an alqi 'asaaka fa izaa hiya talqafu maa yaafikoon

அதுசமயம் நாம் "மூஸாவே! நீங்கள் உங்களுடைய தடியை எறியுங்கள்" என்று அவருக்கு வஹீ அறிவித்தோம். அவ்வாறு அவர் எறியவே (அது பெரியதொரு பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவையும் விழுங்கிவிட்டது.

Tafseer

فَوَقَعَ ٱلْحَقُّ
நிகழ்ந்தது/உண்மை
وَبَطَلَ
பொய்ப்பித்தது
مَا كَانُوا۟
அவர்கள் செய்து கொண்டிருந்தது

Fawaqa'al haqqu wa batala maa kaanoo ya'maloon

இவ்வாறு அவர்கள் செய்த அனைத்தும் வீணாகி உண்மை உறுதியாயிற்று.

Tafseer

فَغُلِبُوا۟ هُنَالِكَ
ஆகவே தோற்கடிக்கப்பட்டனர்/அங்கே
وَٱنقَلَبُوا۟
இன்னும் திரும்பினர்
صَٰغِرِينَ
இழிவானவர்களாக

Faghuliboo hunaalika wanqalaboo saaghireen

ஆகவே (கர்வம் கொண்டிருந்த) அவர்கள் தோல்வியுற்று, சிறுமைப்பட்டவர்களாக மாறினார்கள்.

Tafseer

وَأُلْقِىَ
தள்ளப்பட்டனர்
ٱلسَّحَرَةُ
சூனியக்காரர்கள்
سَٰجِدِينَ
சிரம் பணிந்தவர்களாக

Wa ulqiyas saharatu saajideen

அன்றி, அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்து,

Tafseer