Allazeena taghaw fil bilaad
இவர்களெல்லாம் பூமியில் வரம்பு மீறியே நடந்தார்கள்.
Fa aksaroo feehal fasaad
(பூமியில்) அவர்கள் மிக்க அதிகமாகவே விஷமம் செய்து கொண்டிருந்தனர்.
Fasabba 'alaihim Rabbuka sawta 'azaab
ஆதலால், உங்களது இறைவன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையைக் கொண்டு (அடி மேல் அடி) அடித்தான்.
Inna Rabbaka labil mirsaad
நிச்சயமாக உங்களது இறைவன் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்த வண்ணமாக இருக்கின்றான்.
Fa ammal insaanu izaa mab talaahu Rabbuhoo fa akramahoo wa na' 'amahoo fa yaqoolu Rabbeee akraman
ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என்னுடைய இறைவன் என்னை மகிமைப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகின்றான்.
Wa ammaaa izaa mabtalaahu faqadara 'alaihi rizqahoo fa yaqoolu Rabbeee ahaanan
ஆயினும், (இறைவன்) அவனைச் சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகின்றான்.
Kalla bal laa tukrimooo nal yateem
(விஷயம்) அவ்வாறன்று. நீங்கள் அநாதைகளைக் கண்ணியப்படுத்துவதில்லை.
Wa laa tahaaaddoona 'alaata'aamil miskeen
ஏழைகளுக்கு உணவு (நீங்கள் அளிக்காததுடன் மற்ற எவரையும்) அளிக்கும்படி தூண்டுவதில்லை.
Wa taakuloonat turaasa aklal lammaa
(பிறருடைய) அனந்தரப் பொருளை(யும் சேர்த்துப்) புசித்து விடுகின்றீர்கள்.
Wa tuhibboonal maala hubban jammaa
மிக்க அளவு கடந்து பொருளை நேசிக்கின்றீர்கள்.