Skip to main content

وَلَا تَقْتُلُوٓا۟
கொல்லாதீர்கள்
أَوْلَٰدَكُمْ
குழந்தைகளை/உங்கள்
خَشْيَةَ إِمْلَٰقٍۖ
பயந்து/வறுமையை
نَّحْنُ نَرْزُقُهُمْ
நாம்/உணவளிக்கின்றோம்/அவர்களுக்கு
وَإِيَّاكُمْۚ
இன்னும் உங்களுக்கு
إِنَّ
நிச்சயமாக
قَتْلَهُمْ
கொல்வது/அவர்களை
كَانَ
இருக்கிறது
خِطْـًٔا
குற்றமாக
كَبِيرًا
பெரியது

Wa laa taqtulooo awlaadakum khashyata imlaaq; nahnu narzuquhum wa iyyaakum; inna qatlahum kaana khitan kabeeraa

(மனிதர்களே!) நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொலை செய்து விடாதீர்கள். நாம் அவர்களுக்கும் உணவளிப்போம்; உங்களுக்கும் (அளிப்போம்.) அவர்களைக் கொலை செய்வது நிச்சயமாக (அடாத) பெரும் பாவமாகும்.

Tafseer

وَلَا تَقْرَبُوا۟
நெருங்காதீர்கள்
ٱلزِّنَىٰٓۖ
விபச்சாரத்தை
إِنَّهُۥ
நிச்சயமாக அது
كَانَ
இருக்கின்றது
فَٰحِشَةً
மானக்கேடானதாக
وَسَآءَ
இன்னும் கெட்ட(து)
سَبِيلًا
வழி

Wa laa taqrabuz zinaaa innahoo kaana faahishatanw wa saaa'a sabeelaa

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் விபசாரத்திற்கு நெருங்கவும் வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அது மானக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.

Tafseer

وَلَا تَقْتُلُوا۟
கொல்லாதீர்கள்
ٱلنَّفْسَ
உயிரை
ٱلَّتِى
எது
حَرَّمَ
தடுத்தான், புனிதமாக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
إِلَّا بِٱلْحَقِّۗ
உரிமையின்றி
وَمَن
எவர்
قُتِلَ
கொல்லப்பட்டார்
مَظْلُومًا
அநீதி செய்யப்பட்டவராக
فَقَدْ جَعَلْنَا
ஏற்படுத்தினோம்
لِوَلِيِّهِۦ
உறவினருக்கு/ அவருடைய
سُلْطَٰنًا
அதிகாரத்தை
فَلَا يُسْرِف
ஆகவே, அவர் அளவு கடக்க வேண்டாம்
فِّى ٱلْقَتْلِۖ
கொல்வதில்
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
كَانَ
இருக்கிறார்
مَنصُورًا
உதவி செய்யப்பட்டவராக

Wa laa taqtulun nafsal latee harramal laahu illaa bilhaqq; wa man qutila mazlooman faqad ja'alnaa liwaliyyihee sultaanan falaa yusrif fil qatli innahoo kaana mansooraa

(எவரையும் கொலை செய்வது ஆகாதென்று) அல்லாஹ் தடுத்திருக்க, நீங்கள் எம்மனிதனையும் நியாயமின்றி கொலை செய்து விடாதீர்கள். எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவனுடைய வாரிசுகளுக்கு(ப் பழி வாங்க) நாம் அதிகாரம் அளித்திருக்கிறோம். ஆனால், (கொலையாளியான) அவனைப் பழிவாங்குவதில் அளவு கடந்து (சித்திரவதை செய்து) விட வேண்டாம். நிச்சயமாக அவன் (பழிவாங்க) உதவி செய்யப் பெறுவான். (அதாவது: பழிவாங்க வாரிசுகளுக்கு உதவி செய்ய வேண்டும்.)

Tafseer

وَلَا تَقْرَبُوا۟
நெருங்காதீர்கள்
مَالَ
செல்வத்தை
ٱلْيَتِيمِ
அநாதையின்
إِلَّا
தவிர
بِٱلَّتِى
எதில்
هِىَ
அது
أَحْسَنُ
மிக அழகியது
حَتَّىٰ
வரை
يَبْلُغَ
அவர் அடையும்
أَشُدَّهُۥۚ
தன் வாலிபத்தை
وَأَوْفُوا۟
இன்னும் நிறைவேற்றுங்கள்
بِٱلْعَهْدِۖ
ஒப்பந்தத்தை
إِنَّ
நிச்சயமாக
ٱلْعَهْدَ
ஒப்பந்தம்
كَانَ
இருக்கிறது
مَسْـُٔولًا
விசாரிக்கப்படுவதாக

Wa laa taqraboo maalal yateemi illaa billatee hiya ahsanu hattaa yablugha ashuddah; wa awfoo bil'ahd, innal 'ahda kaana mas'oolaa

(நம்பிக்கையாளர்களே!) அநாதைக் குழந்தைகள் வாலிபத்தை அடையும் வரையில் (அவர்களுடைய பொருளுக்குப் பாதுகாப்பாளராக இருந்தால்) நீங்கள் நியாயமான முறையிலன்றி அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள். உங்கள் வாக்குறுதியை நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள். ஏனென்றால், மறுமையில் வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும்.

Tafseer

وَأَوْفُوا۟
இன்னும் முழுமையாக்குங்கள்
ٱلْكَيْلَ
அளவையை
إِذَا كِلْتُمْ
நீங்கள் அளந்தால்
وَزِنُوا۟
இன்னும் நிறுங்கள்
بِٱلْقِسْطَاسِ
தராசைக் கொண்டு
ٱلْمُسْتَقِيمِۚ
சரியானது
ذَٰلِكَ
அது
خَيْرٌ
மிகச் சிறந்தது
وَأَحْسَنُ
மிக அழகியது
تَأْوِيلًا
முடிவால்

Wa awful kaila izaa kiltum wa zinoo bilqistaasil mustaqeem; zaalika khairunw wa ahsanu taaweelaa

நீங்கள் அளந்தால் முழுமையாக அளங்கள்; (நிறுத்தால்) சரியான எடையைக் கொண்டு நிறுங்கள். இது (உங்களுக்கு) மிக்க நன்று; மிக்க அழகான பலனையும் தரும்.

Tafseer

وَلَا تَقْفُ
பின் தொடராதே
مَا لَيْسَ
எதை/இல்லை
لَكَ
உனக்கு
بِهِۦ
அதில்
عِلْمٌۚ
கல்வி அறிவு
إِنَّ ٱلسَّمْعَ
நிச்சயமாக/செவி
وَٱلْبَصَرَ
இன்னும் பார்வை
وَٱلْفُؤَادَ
இன்னும் உள்ளம்
كُلُّ أُو۟لَٰٓئِكَ
எல்லாம்/இவை
كَانَ
இருக்கின்றன
عَنْهُ
அவற்றைப் பற்றி
مَسْـُٔولًا
விசாரிக்கப் படுபவையாக

Wa laa taqfu maa laisa laka bihee 'ilm; innas sam'a walbasara walfu'aada kullu ulaaa'ika kaana 'anhu mas'oolaa

(நபியே!) நீங்கள் அறியாத யாதொரு விஷயத்தையும் நீங்கள் பின்தொடராதீர்கள்! ஏனென்றால், நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும்.

Tafseer

وَلَا تَمْشِ
இன்னும் நடக்காதே
فِى ٱلْأَرْضِ
பூமியில்
مَرَحًاۖ
கர்வம் கொண்டவனாக
إِنَّكَ
நிச்சயமாக நீ
لَن تَخْرِقَ
அறவே நீ கிழிக்க(வும்) முடியாது
ٱلْأَرْضَ
பூமியை
وَلَن تَبْلُغَ
இன்னும் அறவே நீ அடைய(வும்) முடியாது
ٱلْجِبَالَ
மலைகளின்
طُولًا
உயரத்தை

Wa laa tamshi fil ardi marahan innaka lan takhriqal arda wa lan tablughal jibaala toola

பூமியில் (பெருமையுடன்) கர்வம் கொண்டு நடக்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாகப் பூமியைப் பிளந்து விடவோ அல்லது மலையின் உச்சியை அடைந்து விடவோ உங்களால் முடியாது.

Tafseer

كُلُّ
எல்லாம்
ذَٰلِكَ
இவை
كَانَ
இருக்கின்றது
سَيِّئُهُۥ
இவற்றின் தீமை
عِندَ
இடம்
رَبِّكَ
உமது இறைவன்
مَكْرُوهًا
வெறுக்கப்பட்டதாக

Kullu zaalika kaana sayyi'uhoo inda Rabbika makroohaa

இவை அனைத்தும் உங்களது இறைவனிடத்தில் வெறுக்கப்பட்ட தீய காரியங்களாகும்.

Tafseer

ذَٰلِكَ
இவை
مِمَّآ
எதிலிருந்து
أَوْحَىٰٓ
வஹீ அறிவித்தான்
إِلَيْكَ
உமக்கு
رَبُّكَ
உம் இறைவன்
مِنَ
இருந்து
ٱلْحِكْمَةِۗ
ஞானம்
وَلَا تَجْعَلْ
இன்னும் ஆக்காதீர்
مَعَ ٱللَّهِ
அல்லாஹ்வுடன்
إِلَٰهًا
ஒரு கடவுளை
ءَاخَرَ
வேறு
فَتُلْقَىٰ
எறியப்படுவீர்
فِى جَهَنَّمَ
நரகில்
مَلُومًا
இகழப்பட்டவராக
مَّدْحُورًا
தூரமாக்கப்பட்டவராக

Zaalika mimmaaa awhaaa ilaika Rabbuka minal hikmah; wa laa taj'al ma'allaahi ilaahan aakhara fatulqaa fee Jahannama maloomam mad hooraa

(நபியே!) இவை உங்கள் இறைவனால் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்ட ஞான(உபதேச)ங்களாகும். ஆகவே, அல்லாஹ்வுடன் மற்றொருவனை வணக்கத்திற்குரியவனாக ஆக்காதீர்கள். (அவ்வாறு செய்தால்) நீங்கள் நிந்திக்கப்பட்ட வராகவும், சபிக்கப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர்கள்.

Tafseer

أَفَأَصْفَىٰكُمْ
சொந்தமாக்கினானா?/உங்களுக்கு
رَبُّكُم
உங்கள் இறைவன்
بِٱلْبَنِينَ
ஆண் பிள்ளைகளை
وَٱتَّخَذَ
இன்னும் ஆக்கிக் கொண்டான்
مِنَ ٱلْمَلَٰٓئِكَةِ
வானவர்களிலிருந்து
إِنَٰثًاۚ
பெண்களை
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
لَتَقُولُونَ
உறுதியாக கூறுகின்றீர்கள்
قَوْلًا
கூற்றை
عَظِيمًا
பெரிய(து)

Afa asfaakum rabbukum bilbaneena wattakhaza minal malaaa'ikati inaasaa; innakum lataqooloona qawlan 'azeema

(மனிதர்களே!) உங்கள் இறைவன், ஆண் மக்களை உங்களுக்குச் சொந்தமாக்கி விட்டு, மலக்குகளைத் தனக்குப் பெண் மக்களாக ஆக்கிக் கொண்டானா? இவ்வாறு கூறும் நீங்கள் நிச்சயமாக மகத்தான (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள்.

Tafseer