Skip to main content

وَكَذَٰلِكَ
இவ்வாறுதான்
جَعَلْنَا
நாம் ஆக்கினோம்
لِكُلِّ
ஒவ்வொரு
نَبِىٍّ
நபிக்கும்
عَدُوًّا
எதிரிகளை
مِّنَ ٱلْمُجْرِمِينَۗ
குற்றவாளிகளில்
وَكَفَىٰ
போதுமானவன்
بِرَبِّكَ
உமது இறைவன்
هَادِيًا
நேர்வழி காட்டுபவனாக
وَنَصِيرًا
இன்னும் உதவுபவனாக

Wa kazaalika ja'alnaa likulli Nabiyyin 'aduwwam minal mujrimeen; wa kafaa bi Rabbika haadiyanw wa naseeraa

இவ்வாறே ஒவ்வொரு நபிமாருக்கும் குற்றவாளிகளை நாம் எதிரிகளாக ஏற்படுத்தி இருந்தோம். (நபியே!) உங்களுக்கு நேரான வழியை அறிவித்து, உதவி செய்ய உங்கள் இறைவனே போதுமானவன்.

Tafseer

وَقَالَ
கூறினர்
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்கள்
لَوْلَا نُزِّلَ
இறக்கப்பட வேண்டாமா!
عَلَيْهِ
இவர் மீது
ٱلْقُرْءَانُ
இந்த குர்ஆன்
جُمْلَةً
ஒட்டு மொத்தமாக
وَٰحِدَةًۚ
ஒரே தடவையில்
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
لِنُثَبِّتَ
உறுதிப்படுத்துவதற்காக
بِهِۦ
அதன் மூலம்
فُؤَادَكَۖ
உமது உள்ளத்தை
وَرَتَّلْنَٰهُ
இன்னும் இதை கற்பித்தோம்.
تَرْتِيلًا
சிறிது சிறிதாக

Wa qaalal lazeena kafaroo law laa nuzzila 'alaihil Quraanu jumlatanw waahidah; kazaalika linusabbita bihee fu'aadaka wa rattalnaahu tarteelaa

(நபியே!) எவர்கள் (உங்களை) நிராகரிக்கிறார்களோ அவர்கள் "இந்த வேதம் முழுவதும் ஒரே தடவையில் இறக்கப்பட வேண்டாமா?" என்று கூறுகின்றனர். (இதனை) இவ்வாறு நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி (வரிசை முறைப்படி) ஒழுங்கு படுத்துவதெல்லாம் உங்கள் உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே!

Tafseer

وَلَا يَأْتُونَكَ
அவர்கள் உம்மிடம் கூறமாட்டார்கள்
بِمَثَلٍ
எந்த ஒரு தன்மையையும்
إِلَّا
தவிர
جِئْنَٰكَ
உமக்கு நாம் கூறியே
بِٱلْحَقِّ
சத்தியத்தையும்
وَأَحْسَنَ
இன்னும் மிக அழகான
تَفْسِيرًا
விளக்கத்தை(யும்)

Wa laa yaatoonaka bimasainn illaa ji'naaka bilhaqqi wa ahsana tafseeraa

இந்நிராகரிப்பவர்கள் (எத்தகைய கேள்விகளைக் கேட்டு அதற்காக ஆச்சரியமான) எந்த உதாரணத்தை உங்களிடம் அவர்கள் கொண்டு வந்த போதிலும் (அதைவிட) உண்மையான விஷயத்தையும், அழகான வியாக்கியானத்தையும் (விவரத்தையும்) நாம் உங்களுக்கு கூறாமல் இருக்கவில்லை.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
يُحْشَرُونَ
எழுப்பப்படுகிறார்களோ
عَلَىٰ
மீது
وُجُوهِهِمْ
தங்கள் முகங்களின்
إِلَىٰ
பக்கம்
جَهَنَّمَ
நரகத்தின்
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
شَرٌّ
மிக கெட்டவர்கள்
مَّكَانًا
தங்குமிடத்தால்
وَأَضَلُّ
இன்னும் மிக வழிதவறியவர்கள்
سَبِيلًا
பாதையால்

Allazeena yuhsharoona 'alaa wujoohim ilaa jahannama ulaaa'ika sharrum makaananw wa adallu sabeelaa )section 3)

இவர்கள்தாம் நரகத்திற்கு முகங்குப்புற இழுத்துச் செல்லப்படுபவர்கள். இவர்கள் தாம் மகாகெட்ட இடத்தில் தங்குபவர்களும் வழி தவறியவர்களும் ஆவார்கள்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
ءَاتَيْنَا
கொடுத்தோம்
مُوسَى ٱلْكِتَٰبَ
மூஸாவுக்கு/வேதத்தை
وَجَعَلْنَا
இன்னும் ஆக்கினோம்
مَعَهُۥٓ
அவருடன்
أَخَاهُ
அவரது சகோதரர்
هَٰرُونَ
ஹாரூனை
وَزِيرًا
உதவியாளராக

Wa laqad aatainaa Moosal Kitaaba wa ja'alnaa ma'ahooo akhaahu Haaroona wazeeraa

(இதற்கு முன்னர்) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு(த் "தவ்றாத்" என்னும்) ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். அவருடைய சகோதரர் ஹாரூனை அவருக்கு மந்திரியாகவும் ஆக்கினோம்.

Tafseer

فَقُلْنَا
நாம் கூறினோம்
ٱذْهَبَآ
நீங்கள் இருவரும் செல்லுங்கள்
إِلَى ٱلْقَوْمِ
மக்களிடம்
ٱلَّذِينَ كَذَّبُوا۟
பொய்ப்பித்தவர்கள்
بِـَٔايَٰتِنَا
நமது அத்தாட்சிகளை
فَدَمَّرْنَٰهُمْ
ஆகவே நாம் அவர்களை அழித்து விட்டோம்
تَدْمِيرًا
முற்றிலும் தரை மட்டமாக

Faqulnaz habaaa ilal qawmil lazeena kazzaboo bi Aayaatinaa fadammarnaahum tadmeeraa

அவ்விருவரையும் நோக்கி, "எவர்கள் நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்யாக்கினார்களோ அவர்களிடம் நீங்கள் இருவரும் செல்லுங்கள்" எனக் கூறினோம். (அவ்வாறு அவர்கள் சென்று அவர்களுக்குக் கூறியதை அந்த மக்கள் நிராகரித்து விட்டதனால்) நாம் அவர்களை அடியோடு அழித்துவிட்டோம்.

Tafseer

وَقَوْمَ
இன்னும் மக்களையும்
نُوحٍ
நூஹூடைய
لَّمَّا
போது
كَذَّبُوا۟
அவர்கள் பொய்ப்பித்தனர்
ٱلرُّسُلَ
தூதர்களை
أَغْرَقْنَٰهُمْ
அவர்களை மூழ்கடித்தோம்
وَجَعَلْنَٰهُمْ
அவர்களை ஆக்கினோம்
لِلنَّاسِ
மக்களுக்கு
ءَايَةًۖ
ஓர் அத்தாட்சியாக
وَأَعْتَدْنَا
இன்னும் நாம் தயார் படுத்தியுள்ளோம்
لِلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு
عَذَابًا
தண்டனையை
أَلِيمًا
வலி தரும்

Wa qawma Noohil lammaa kazzabur Rusula aghraqnaahum wa ja'alnaahum linnaasi Aayatanw wa a'tadnaa lizzaalimeena 'azaaban aleemaa

நூஹ்வுடைய மக்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய சமயத்தில் அவர்களையும் மூழ்கடித்து, அவர்களை மனிதர்கள் அனைவருக்கும் ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம். இத்தகைய அநியாயக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்.

Tafseer

وَعَادًا
ஆது
وَثَمُودَا۟
ஸமூது
وَأَصْحَٰبَ ٱلرَّسِّ
கிணறு வாசிகள்
وَقُرُونًۢا
இன்னும் பல தலைமுறையினரை
بَيْنَ ذَٰلِكَ
இவர்களுக்கிடையில்
كَثِيرًا
பல

Wa 'Aadanw Samooda wa As haabar Rassi wa quroonam baina zaalika kaseeraa

ஆது, ஸமூது மக்களையும், றஸ் (அகழ்) வாசிகளையும், இவர்களுக்கிடையில் இன்னும் பல வகுப்பினரையும் (நாம் அழித்திருக்கிறோம்.)

Tafseer

وَكُلًّا
எல்லோருக்கும்
ضَرَبْنَا
நாம் விவரித்தோம்
لَهُ ٱلْأَمْثَٰلَۖ
அவர்களுக்கு/பல உதாரணங்களை
وَكُلًّا
எல்லோரையும்
تَبَّرْنَا
நாம் அழித்துவிட்டோம்
تَتْبِيرًا
அடியோடு

Wa kullandarabnaa lahul amsaala wa kullan tabbarnaa tatbeera

(அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு அழிந்துபோன முன்னிருந்தவர்களின் சரித்திரங்களை) அவர்கள் அனைவருக்கும் நாம் பல உதாரணங்களாகக் கூறினோம். (அவர்கள் அவைகளை நிராகரித்து விடவே,) அவர்கள் அனைவரையும் நாம் அடியோடு அழித்துவிட்டோம்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
أَتَوْا۟
அவர்கள் வந்திருக்கின்றனர்
عَلَى
அருகில்
ٱلْقَرْيَةِ
ஊரின்
ٱلَّتِىٓ أُمْطِرَتْ
பொழியப்பட்டது
مَطَرَ
மழை
ٱلسَّوْءِۚ
மிக மோசமான
أَفَلَمْ يَكُونُوا۟
அதை அவர்கள் பார்த்திருக்கவில்லையா?
بَلْ
மாறாக
كَانُوا۟
இருந்தனர்
لَا يَرْجُونَ
அவர்கள் ஆதரவு வைக்காதவர்களாக
نُشُورًا
எழுப்பப்படுவதை

Wa laqad ataw 'alal qaryatil lateee umtirat mataras saw'; afalam yakoonoo yarawnahaa; bal kaanoo laa yarjoona nushooraa

நிச்சயமாக (மக்காவிலுள்ள காஃபிர்கள்) கெட்ட (கல்) மாரி பொழிந்த ஊரின் சமீபமாக (அடிக்கடி)ச் சென்றே இருக்கின்றனர். அதனை இவர்கள் பார்க்கவில்லையா? உண்மையில் இவர்கள் (மறுமையில்) உயிர் கொடுத்து எழுப்பப்படுவதை நம்பவேயில்லை.

Tafseer