Skip to main content

قَالُوا۟
அவர்கள் கூறினர்
نَعْبُدُ
நாங்கள் வணங்குகின்றோம்
أَصْنَامًا
சிலைகளை
فَنَظَلُّ
நாங்கள் இருப்போம்
لَهَا
அதற்கு
عَٰكِفِينَ
பூஜை செய்பவர்களாகவே

Qaaloo na'budu asnaaman fanazallu lahaa 'aakifeen

அவர்கள் "நாங்கள் இச்சிலைகளையே வணங்குகிறோம்; அவற்றை தொடர்ந்து ஆராதனை செய்து கொண்டிருக்கிறோம்" என்றார்கள்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
هَلْ يَسْمَعُونَكُمْ
அவை உங்களுக்கு செவிமடுக்கின்றனவா?
إِذْ تَدْعُونَ
நீங்கள் அழைக்கும்போது

Qaala hal yasma'oona kum iz tad'oon

அதற்கு (இப்ராஹீம் அவர்களை நோக்கி) "அவைகளை நீங்கள் அழைத்தால் உங்களுக்கு செவி கொடுக்கின்றனவா?

Tafseer

أَوْ
அல்லது
يَنفَعُونَكُمْ
நன்மை தருகின்றனவா?
أَوْ
அல்லது
يَضُرُّونَ
தீங்கு தருகின்றவர்

Aw yanfa'oonakum aw yadurroon

அல்லது (அவைகளை நீங்கள் ஆராதனை செய்வதால்) உங்களுக்கு ஏதும் நன்மையோ (ஆராதனை செய்யாவிட்டால்) தீமையோ செய்கின்றனவா?" என்று கேட்டார்.

Tafseer

قَالُوا۟
அவர்கள் கூறினர்
بَلْ
அவ்வாறல்ல
وَجَدْنَآ
நாங்கள் கண்டோம்
ءَابَآءَنَا
எங்கள் மூதாதைகளை
كَذَٰلِكَ
அப்படியே
يَفْعَلُونَ
செய்பவர்களாக

Qaaloo bal wajadnaaa aabaaa 'anaa kazaalika yaf'aloon

அதற்கவர்கள் "இல்லை. எனினும் எங்கள் மூதாதைகள் இவ்வாறே (ஆராதனை) செய்துகொண்டிருக்க நாங்கள் கண்டோம் (ஆகவே, நாங்களும் அவைகளை ஆராதனை செய்கிறோம்)" என்றார்கள்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
أَفَرَءَيْتُم
நீங்கள் சொல்லுங்கள்
مَّا كُنتُمْ
நீங்கள் வணங்கிக் கொண்டு இருப்பவற்றை

Qaala afara 'aitum maa kuntum ta'budoon

நீங்கள் எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதை பார்த்தீர்களா? என்று (இப்ராஹீம்) கேட்டார்.

Tafseer

أَنتُمْ
நீங்களும்
وَءَابَآؤُكُمُ
உங்கள் மூதாதைகளும்
ٱلْأَقْدَمُونَ
முந்தி(யவர்கள்)

Antum wa aabaaa'ukumul aqdamoon

நீங்களும் உங்களுடைய முன்னோர்களான மூதாதையர் களும் (எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதைப் பாருங்கள்.)

Tafseer

فَإِنَّهُمْ
ஏனெனில், நிச்சயமாக
عَدُوٌّ
எதிரிகள்
لِّىٓ
எனக்கு
إِلَّا
ஆனால், தவிர
رَبَّ
இறைவனை
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்

Fa innahum 'aduwwwul leee illaa Rabbal 'aalameen

நிச்சயமாக இவை எனக்கு எதிரிகளே! உலகத்தாரைப் படைத்து வளர்ப்பவனே எனது இறைவன்.

Tafseer

ٱلَّذِى
எவன்
خَلَقَنِى
என்னைப்படைத்தான்
فَهُوَ
ஆகவே, அவன்
يَهْدِينِ
எனக்கு நேர்வழி காட்டுவான்

Allazee khalaqanee fa Huwa yahdeen

அவன்தான் என்னைப் படைத்தான். அவனே என்னை நேரான வழியில் நடத்துகிறான்.

Tafseer

وَٱلَّذِى هُوَ
எவன்/அவன்
يُطْعِمُنِى
எனக்கு உணவளிக்கிறான்
وَيَسْقِينِ
இன்னும் , எனக்கு நீர் புகட்டுகிறான்

Wallazee Huwa yut'imunee wa yasqeen

அவனே எனக்குப் புசிக்கவும் குடிக்கவும் தருகிறான்.

Tafseer

وَإِذَا مَرِضْتُ
நான் நோயுற்றால்
فَهُوَ
அவன்தான்
يَشْفِينِ
எனக்கு சுகமளிக்கிறான்

Wa izaa mardtu fahuwa yashfeen

நான் நோயுற்ற தருணத்தில் அவனே என்னை குணப்படுத்துகிறான்.

Tafseer