Skip to main content

وَإِذْ أَخَذَ
வாங்கிய சமயம்
ٱللَّهُ
அல்லாஹ்
مِيثَٰقَ
வாக்குறுதியை
ٱلنَّبِيِّۦنَ
நபிமார்களின்
لَمَآ ءَاتَيْتُكُم
உங்களுக்குக் கொடுத்தபோதெல்லாம்
مِّن كِتَٰبٍ
வேதத்தை
وَحِكْمَةٍ ثُمَّ
இன்னும் ஞானம்/பிறகு
جَآءَكُمْ
உங்களிடம் வந்தார்
رَسُولٌ
ஒரு தூதர்
مُّصَدِّقٌ
உண்மைப்படுத்துபவர்
لِّمَا مَعَكُمْ
உங்களுடனுள்ளதை
لَتُؤْمِنُنَّ بِهِۦ
நிச்சயமாகஅவரை நீங்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும்
وَلَتَنصُرُنَّهُۥۚ
இன்னும் நிச்சயமாக நீங்கள் அவருக்கு உதவவேண்டும்
قَالَ
கூறினான்
ءَأَقْرَرْتُمْ
ஏற்றீர்களா?
وَأَخَذْتُمْ
இன்னும் ஏற்றீர்களா?
عَلَىٰ ذَٰلِكُمْ
மீது/இது
إِصْرِىۖ
என்உடன்படிக்கையை
قَالُوٓا۟
கூறினார்கள்
أَقْرَرْنَاۚ
ஒப்புக்கொண்டோம்
قَالَ
கூறினான்
فَٱشْهَدُوا۟
சாட்சி பகருங்கள்
وَأَنَا۠
இன்னும் நான்
مَعَكُم
உங்களுடன்
مِّنَ ٱلشَّٰهِدِينَ
சாட்சியாளர்களில்

Wa iz akhazal laahu meesaaqan Nabiyyeena lamaaa aataitukum min Kitaabinw wa Hikmatin summa jaaa'akum Rasoolum musaddiqul limaa ma'akum latu'minunna bihee wa latansurunnah; qaala 'aaqrartum wa akhaztum alaa zaalikum isree qaalooo aqrarnaa; qaala fashhadoo wa ana ma'akum minash shaahideen

நபிமார்களிடம் அல்லாஹ் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் (அவர்களை நோக்கி) "வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன். இதற்குப் பின்னர் உங்களிடம் உள்ளதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை நீங்கள் உண்மையாக நம்பிக்கை கொண்டு நிச்சயமாக அவருக்கு உதவி செய்ய வேண்டும்" (என்று கூறி) "இதனை நீங்கள் உறுதிப்படுத்தினீர்களா? என்னுடைய இக்கட்டளையை எடுத்துக் கொண்டீர்களா?" என்று கேட்டதற்கு, அவர்கள் "நாங்கள் (அதனை) அங்கீகரித்துக் கொண்டோம்" என்றே கூறினார்கள். அப்போது (இறைவன் "இதற்கு) நீங்கள் சாட்சியாயிருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாக இருக்கின்றேன்" என்று கூறினான்.

Tafseer

فَمَن
எவர்
تَوَلَّىٰ
விலகினார்
بَعْدَ
பின்னர்
ذَٰلِكَ
இது
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْفَٰسِقُونَ
பாவிகள்

Faman tawallaa ba'da zaalika fa ulaaa'ika humul faasiqoon

இதற்குப் பின்னரும் எவரேனும் புறக்கணித்தால் நிச்சயமாக அவர்கள்தான் பெரும் பாவிகள் ஆவர்.

Tafseer

أَفَغَيْرَ
அல்லாததையா?
دِينِ
மார்க்கம்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
يَبْغُونَ
விரும்புகிறார்கள்
وَلَهُۥٓ
அவனுக்கே
أَسْلَمَ
பணிந்தார்(கள்)
مَن
எவர்கள்
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியில்
طَوْعًا وَكَرْهًا
விரும்பி/இன்னும் நிர்பந்தம்
وَإِلَيْهِ
இன்னும் அவன் பக்கமே
يُرْجَعُونَ
திருப்பப்படுவார்கள்

Afaghaira deenil laahi yabghoona wa lahooo aslama man fis samaawaati wal ardi taw'anw wa karhanw wa ilaihi yurja'oon

அல்லாஹ்வுடைய மார்க்கத்தையன்றி (வேறு மார்க்கத்தை)யா இவர்கள் விரும்புகின்றார்கள்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்துமே (அவை) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவனுக்குக் கீழ்ப்படிந்தே நடக்கின்றன. அன்றி (அவையனைத்தும்) அவன் பக்கமே திரும்பக் கொண்டு வரப்படும்.

Tafseer

قُلْ
கூறுவீராக
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَمَآ أُنزِلَ
இன்னும் இறக்கப்பட்டதை
عَلَيْنَا
எங்கள் மீது
وَمَآ أُنزِلَ
இன்னும் இறக்கப்பட்டதை
عَلَىٰٓ
மீது
إِبْرَٰهِيمَ
இப்றாஹீம்
وَإِسْمَٰعِيلَ
இன்னும் இஸ்மாயீல்
وَإِسْحَٰقَ
இன்னும் இஸ்ஹாக்
وَيَعْقُوبَ
இன்னும் யஃகூப்
وَٱلْأَسْبَاطِ
இன்னும் சந்ததிகள்
وَمَآ
இன்னும் எது/
أُوتِىَ
கொடுக்கப்பட்டார்
مُوسَىٰ وَعِيسَىٰ
மூஸா/இன்னும் ஈஸா
وَٱلنَّبِيُّونَ
இன்னும் நபிமார்கள்
مِن رَّبِّهِمْ
தங்கள் இறைவனிடமிருந்து
لَا نُفَرِّقُ
பிரிக்க மாட்டோம்
بَيْنَ أَحَدٍ
ஒருவருக்கு மத்தியில்
مِّنْهُمْ
இவர்களில்
وَنَحْنُ
இன்னும் நாங்கள்
لَهُۥ
அவனுக்கே
مُسْلِمُونَ
முற்றிலும் பணிந்தவர்கள்

Qul aamannaa billaahi wa maaa unzila 'alainaa wa maaa unzila 'alaaa Ibraaheema wa Ismaa'eela wa Ishaaqa wa Ya'qooba wal Asbaati wa maaa ootiya Moosaa wa 'Eesaa wan Nabiyyoona mir Rabbihim laa nufarriqu baina ahadim minhum wa nahnu lahoo muslimoon

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வையும், நம்மீது அருளப்பட்டதையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்கள் மீதும், அவர்கள் சந்ததிகள் மீது அருளப்பட்டவை களையும்; மூஸா, ஈஸா மற்றும் அனைத்து நபிமார்களுக்கு அவர்கள் இறைவனால் அளிக்கப்பட்டவைகளையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். இவர்களில் ஒருவரையும் (நபியல்ல என்று) நாம் பிரித்துவிட மாட்டோம். அல்லாஹ் ஒருவனுக்கே நாங்கள் (முற்றிலும்) கீழ்ப்படிந்து நடப்போம் (என்றும் கூறுங்கள்.)

Tafseer

وَمَن يَبْتَغِ
எவர்/விரும்புவார்
غَيْرَ ٱلْإِسْلَٰمِ
இஸ்லாமல்லாததை
دِينًا
மார்க்கமாக
فَلَن يُقْبَلَ
அறவே அங்கீகரிக்கப்படாது
مِنْهُ
அவரிடமிருந்து
وَهُوَ
இன்னும் அவர்
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
مِنَ ٱلْخَٰسِرِينَ
நஷ்டவாளிகளில்

Wa mai yabtaghi ghairal Islaami deenan falany yuqbala minhu wa huwa fil Aakhirati minal khaasireen

இஸ்லாமையன்றி (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்தவராகவே இருப்பார்.

Tafseer

كَيْفَ
எவ்வாறு
يَهْدِى
நேர்வழி செலுத்துவான்
ٱللَّهُ
அல்லாஹ்
قَوْمًا
ஒரு கூட்டத்தை
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
بَعْدَ
பின்னர்
إِيمَٰنِهِمْ
தாங்கள் நம்பிக்கை கொண்டதற்கு
وَشَهِدُوٓا۟
இன்னும் சாட்சி கூறினர்
أَنَّ ٱلرَّسُولَ
நிச்சயமாக தூதர்
حَقٌّ
உண்மையானவர்
وَجَآءَهُمُ
இன்னும் அவர்களிடம் வந்தது
ٱلْبَيِّنَٰتُۚ
தெளிவான சான்றுகள்
وَٱللَّهُ
அல்லாஹ்
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
ٱلْقَوْمَ
மக்களை
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்

Kaifa yahdil laahu qawman kafaroo ba'da eemaanihim wa shahidooo annar Rasoola haqqunw wa jaaa'ahumul baiyinaat; wallaahu laa yahdil qawmaz zaalimeen

அல்லாஹ் எவ்வாறு ஒரு சமூகத்தினரை நேரான வழியில் செலுத்துவான். அவர்களோ, தங்களிடம் வந்த பல அத்தாட்சிகளின் மூலம் நிச்சயமாக (அல்லாஹ்வுடைய) தூதர் உண்மையானவர் என சாட்சியம் கூறி நம்பிக்கை கொண்டதன் பின்னரும் (அத்தூதரை) நிராகரிக்கின்றனர். அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார சமூகத்தினரை நேரான வழியில் செலுத்துவதில்லை.

Tafseer

أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
جَزَآؤُهُمْ
இவர்களுடைய கூலி
أَنَّ
நிச்சயமாக
عَلَيْهِمْ
இவர்கள் மீது
لَعْنَةَ ٱللَّهِ
அல்லாஹ்வின் சாபம்
وَٱلْمَلَٰٓئِكَةِ
இன்னும் வானவர்கள்
وَٱلنَّاسِ
இன்னும் மக்கள்
أَجْمَعِينَ
அனைவர்

Ulaaa'ika jazaaa'uhum anna 'alaihim la'natal laahi walmalaaa'ikati wannaasi ajma'een

இத்தகையவர்களுக்கு (அவர்கள் செயலுக்குத் தக்க) பிரதிபலனாவது: இவர்கள் மீது நிச்சயமாக அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவருடைய சாபம்தான் உள்ளது.

Tafseer

خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
فِيهَا
அதில்
لَا يُخَفَّفُ
இலேசாக்கப்படாது
عَنْهُمُ
அவர்களை விட்டு
ٱلْعَذَابُ
வேதனை
وَلَا هُمْ
இன்னும் அவர்கள் தவனை அளிக்கப்படமாட்டார்கள்

Khaalideena feehaa laa yukhaffafu 'anhumul 'azaabu wa laa hum yunzaroon

இ(ச்சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படவும் மாட்டாது. அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படவும் மாட்டாது.

Tafseer

إِلَّا ٱلَّذِينَ
தவிர/எவர்கள்
تَابُوا۟
திரும்பினார்கள்; மன்னிப்புக் கோரினார்கள்
مِنۢ بَعْدِ
அதற்கு பின்னர்
وَأَصْلَحُوا۟
இன்னும் சீர்திருத்தினார்கள்
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Illal lazeena taaboo mim ba'di zaalika wa aslahoo fa innal laaha Ghafoorur Raheem

எனினும், இதற்குப் பின்னரும் எவரேனும் வருத்தப்பட்டு (பாவங்களில் இருந்து) விலகி நற்செயல்களைச் செய்தால் (அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுவான்.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
بَعْدَ
பின்னர்
إِيمَٰنِهِمْ
தாங்கள் நம்பிக்கை கொண்டதற்கு
ثُمَّ
பிறகு
ٱزْدَادُوا۟
அதிகப்படுத்தினார்கள்
كُفْرًا
நிராகரிப்பை
لَّن تُقْبَلَ
அறவே அங்கீகரிக்கப்படாது
تَوْبَتُهُمْ
அவர்களுடைய மன்னிப்புக் கோருதல்
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
இன்னும் அவர்கள்தான்
ٱلضَّآلُّونَ
வழிகெட்டவர்கள்

Innal lazeena kafaroo ba'da eemaanihim summaz daadoo kufral lan tuqbala tawbatuhum wa ulaaa'ika humud daaalloon

ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்துவிட்டு மென்மேலும் அந்நிராகரிப்பையே அதிகப்படுத்து கின்றார்களோ, அவர்களுடைய மன்னிப்புக் கோருதல் நிச்சயமாக அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்கள்தான் (முற்றிலும்) வழி கெட்டவர்கள்.

Tafseer