Skip to main content

وَيَقُولُونَ
கூறுகின்றனர்
طَاعَةٌ
கீழ்ப்படிதல்
فَإِذَا بَرَزُوا۟
அவர்கள் வெளியேறினால்
مِنْ
இருந்து
عِندِكَ
உம்மிடம்
بَيَّتَ
சதி செய்கின்றனர்
طَآئِفَةٌ
ஒரு கூட்டம்
مِّنْهُمْ
அவர்களில்
غَيْرَ ٱلَّذِى
மாறாக/எது
تَقُولُۖ
கூறுகிறீர்
وَٱللَّهُ
அல்லாஹ்
يَكْتُبُ
பதிவு செய்கிறான்
مَا يُبَيِّتُونَۖ
எதை/சதிசெய்கிறார்கள்
فَأَعْرِضْ
ஆகவே புறக்கணிப்பீராக
عَنْهُمْ
அவர்களை விட்டு
وَتَوَكَّلْ
இன்னும் நம்பிக்கை வைப்பீராக
عَلَى ٱللَّهِۚ
அல்லாஹ்வின் மீது
وَكَفَىٰ
போதுமானவன்
بِٱللَّهِ
அல்லாஹ்வே
وَكِيلًا
பொறுப்பாளனாக

Wa yaqooloona taa'antun fa izaa barazoo min 'indika baiyata taaa'ifatum minhum ghairal lazee taqoolu wallaahu yaktubu maa yubaiyitoona faa'rid 'anhum wa tawakkal 'alal laah; wa kafaa billaahi Wakeelaa

(நபியே! "உங்களுக்கு நாம் முற்றிலும்) கட்டுப்பட்டோம்" என அவர்கள் (தங்கள் வாயால்) கூறுகின்றனர். (எனினும்,) அவர்கள் உங்களது சமூகத்திலிருந்து சென்றுவிட்டாலோ அவர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்கள் வாயால்) கூறியதற்கு மாறாக இரவெல்லாம் சதி ஆலோசனை செய்துகொண்டே இருக்கின்றனர். அவர்கள் இரவெல்லாம் சதி ஆலோசனை செய்பவற்றை அல்லாஹ் பதிவு செய்து கொள்கின்றான். ஆதலால், நீங்கள் அவர்களைப் புறக்கணித்து அல்லாஹ்வையே நம்புங்கள். (உங்களுக்கு) பொறுப்பேற்க அல்லாஹ்வே போதுமானவன்.

Tafseer

أَفَلَا يَتَدَبَّرُونَ
அவர்கள் ஆழ்ந்தாராய வேண்டாமா?
ٱلْقُرْءَانَۚ
குர்ஆனை
وَلَوْ كَانَ
இருந்திருந்தால்
مِنْ
இருந்து
عِندِ
இடம்
غَيْرِ
அல்லாதவர்
ٱللَّهِ
அல்லாஹ்
لَوَجَدُوا۟
கண்டிருப்பார்கள்
فِيهِ
இதில்
ٱخْتِلَٰفًا
முரண்பாட்டை
كَثِيرًا
பல

Afalaa yatadabbaroonal Qur'aan; wa law kaana min 'indi ghairil laahi la wajadoo fee hikh tilaafan kaseeraa

இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் பல (தவறுகளையும்) முரண்பாடுகளை(யும்) அவர்கள் காண்பார்கள்.

Tafseer

وَإِذَا
வந்தால்
جَآءَهُمْ
அவர்களிடம்
أَمْرٌ
ஒரு செய்தி
مِّنَ
பற்றி
ٱلْأَمْنِ
பாதுகாப்பு
أَوِ
அல்லது
ٱلْخَوْفِ
பயம்
أَذَاعُوا۟
பரப்புகின்றனர்
بِهِۦۖ
அதை
وَلَوْ رَدُّوهُ
அவர்கள் கொண்டு சென்றால்/அதை
إِلَى ٱلرَّسُولِ
தூதரிடம்
وَإِلَىٰٓ أُو۟لِى
இன்னும் அதிகாரிகளிடம்
مِنْهُمْ
அவர்களில்
لَعَلِمَهُ
அதை நன்கறிந்து கொள்வார்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
يَسْتَنۢبِطُونَهُۥ
யூகிப்பார்கள்/அதை
مِنْهُمْۗ
அவர்களில்
وَلَوْلَا
இல்லையென்றால்
فَضْلُ
அருள்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
عَلَيْكُمْ
உங்கள் மீது
وَرَحْمَتُهُۥ
இன்னும் அவனுடைய கருணை
لَٱتَّبَعْتُمُ
பின்பற்றி இருப்பீர்கள்
ٱلشَّيْطَٰنَ
ஷைத்தானை
إِلَّا
தவிர
قَلِيلًا
சிலரை

Wa izaa jaaa'ahum amrum minal amni awil kkhawfi azaa'oo bihee wa law raddoohu ilar Rasooli wa ilaaa ulil amri minhum la'alimahul lazeena yastambitoonahoo minhum; wa law laa fadlul laahi 'alaikum wa rahmatuhoo lattaba'tumush Shaitaana illaa qaleelaa

பயத்தையோ (பொது மக்கள்) பாதுகாப்பையோ பற்றிய யாதொரு செய்தி அவர்களுக்கு எட்டினால் (உடனே) அதனை (வெளியில்) கூற ஆரம்பித்து விடுகின்றனர். (அவ்வாறு செய்யாது) அதனை (அல்லாஹ்வுடைய) தூதரிடமும், அவர்களுடைய அதிகாரிகளிடமும் (மட்டும்) தெரிவித்தால் அதிலிருந்து ஊகிக்கக்கூடிய அவர்கள் உண்மையை நன்கறிந்து (தக்க நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்வார்கள். (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய கிருபையும் உங்கள்மீது இல்லையென்றால் (உங்களில்) சிலரைத் தவிர நீங்கள் அனைவரும் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள்.

Tafseer

فَقَٰتِلْ
ஆகவே போரிடுவீராக
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
لَا تُكَلَّفُ
பணிக்கப்பட மாட்டீர்
إِلَّا نَفْسَكَۚ
உம்மைத் தவிர
وَحَرِّضِ
இன்னும் தூண்டுவீராக
ٱلْمُؤْمِنِينَۖ
நம்பிக்கையாளர்களை
عَسَى
கூடும்/அல்லாஹ்
ٱللَّهُ أَن
அவன் தடுக்க
يَكُفَّ
ஆற்றலை
بَأْسَ ٱلَّذِينَ
நிராகரிப்பாளர்களின்
كَفَرُوا۟ۚ
அல்லாஹ்
وَٱللَّهُ
மிக கடுமையானவன்
أَشَدُّ
ஆற்றலால்
بَأْسًا
இன்னும் கடுமையானவன்
وَأَشَدُّ
தண்டிப்பதால்
تَنكِيلًا
Err

Faqaatil fee sabeelil laahi laa tukallafu illa nafsaka wa harridil mu'mineena 'asallaahu ai yakuffa baasallazeena kafaroo; wallaahu ashaddu baasanw wa ashaaddu tanakeelaa

(நபியே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள். நீங்கள் உங்களைத் தவிர (மற்றெவரையும் போருக்குச் செல்லும்படி) நிர்ப்பந்திப்பதற்கில்லை. (ஆயினும்,) நம்பிக்கையாளர்களை (போருக்குச் செல்ல) தூண்டுங்கள். நிராகரிப்பவர்களின் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்துவிடுவான். (ஏனென்றால்) அல்லாஹ் போர்செய்வதில் மிக வல்லவனாகவும், தண்டிப்பதில் மிகக் கடுமையானவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

مَّن
எவர்
يَشْفَعْ
சிபாரிசு செய்வார்
شَفَٰعَةً
சிபாரிசு
حَسَنَةً
நல்ல
يَكُن
இருக்கும்
لَّهُۥ
அவருக்கு
نَصِيبٌ
ஒரு பங்கு
مِّنْهَاۖ
அதிலிருந்து
وَمَن
இன்னும் எவர்
يَشْفَعْ
சிபாரிசு செய்வார்
شَفَٰعَةً
சிபாரிசு
سَيِّئَةً
தீயது
يَكُن
இருக்கும்
لَّهُۥ
அவருக்கு
كِفْلٌ
குற்றம்
مِّنْهَاۗ
அதிலிருந்து
وَكَانَ
இருக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ كُلِّ
எல்லாவற்றின் மீது
مُّقِيتًا
கண்காணிப்பவனாக

Mai yashfa' shafaa'atan hasanatay yakul lahoo naseebum minhaa wa mai yashfa' shafaa'tan saiyi'atanny-yakul lahoo kiflum minhaa; wa kaanal laahu 'alaa kulli shai'im Muqeetaa

எவரேனும் யாதொரு நன்மையானவற்றுக்கு சிபாரிசு செய்தால் அந்த நன்மையில் ஒரு பங்கு அவருக்குண்டு. (அவ்வாறே) யாதொரு தீய விஷயத்திற்கு யாரும் சிபாரிசு செய்தால் அத்தீமையில் இருந்தும் அவருக்கொரு பாகம் உண்டு. அல்லாஹ் அனைத்தையும் முறைப்படி கவனிப்பவனாக இருக்கின்றான்.

Tafseer

وَإِذَا حُيِّيتُم
உங்களுக்கு முகமன் கூறப்பட்டால்
بِتَحِيَّةٍ
ஒரு முகமனைக் கொண்டு
فَحَيُّوا۟
முகமன் கூறுங்கள்
بِأَحْسَنَ
மிக அழகியதைக்கொண்டு
مِنْهَآ
அதைவிட
أَوْ
அல்லது
رُدُّوهَآۗ
திரும்பக் கூறுங்கள்/அதையே
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
كَانَ
இருக்கிறான்
عَلَىٰ كُلِّ
எல்லாவற்றின் மீது
حَسِيبًا
பாதுகாவலனாக

Wa izaa huyyeetum bitahiy yatin fahaiyoo bi ahsana minhaaa aw ruddoohaa; innal laaha kaana 'alaa kulli shai'in Haseeba

(எவரேனும்) உங்களுக்கு "ஸலாம்" கூறினால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கூறுங்கள். அல்லது அதனையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கணக்கெடுப்பவனாக இருக்கின்றான்.

Tafseer

ٱللَّهُ
அல்லாஹ்
لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
إِلَّا
தவிர
هُوَۚ لَيَجْمَعَنَّكُمْ
அவன்/நிச்சயமாக ஒன்று சேர்ப்பான்/உங்களை
إِلَىٰ يَوْمِ
மறுமை நாளில்
لَا رَيْبَ
அறவே சந்தேகம் இல்லை
فِيهِۗ
அதில்
وَمَنْ
யார்
أَصْدَقُ
மிக உண்மையானவன்
مِنَ
விட
ٱللَّهِ
அல்லாஹ்
حَدِيثًا
பேச்சால்

Allaahu laaa ilaaha illaa huwa la yajma'annakum ilaa Yawmil Qiyaamati laa raiba feeh; wa man asdaqu mminallaahi hadeesaa

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. அவன் நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமைநாளில் ஒன்று சேர்ப்பான். இதில் சந்தேகமேயில்லை. அல்லாஹ்வைவிட உண்மை சொல்பவர் யார்?

Tafseer

فَمَا لَكُمْ
உங்களுக்கு என்ன?
فِى ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்களில்
فِئَتَيْنِ
இரு பிரிவினராக
وَٱللَّهُ
அல்லாஹ்
أَرْكَسَهُم
தாழ்த்தினான்/அவர்களை
بِمَا
எதன் காரணமாக
كَسَبُوٓا۟ۚ
செய்தார்கள்
أَتُرِيدُونَ
நாடுகிறீர்களா?
أَن تَهْدُوا۟
நீங்கள் நேர்வழிப்படுத்த
مَنْ
எவரை
أَضَلَّ
வழிகெடுத்தான்
ٱللَّهُۖ
அல்லாஹ்
وَمَن
இன்னும் எவரை
يُضْلِلِ
வழிகெடுப்பான்
ٱللَّهُ
அல்லாஹ்
فَلَن تَجِدَ
அறவே காணமாட்டீர்
لَهُۥ
அவருக்கு
سَبِيلًا
ஒரு வழியை

Famaa lakum filmuna afiqeena fi'ataini wallaahu arkasahum bimaa kasaboo; atureedoona an tahdoo man adallal laahu wa mmai yudlilil laahu falan tajida lahoo sabeelaa

(நம்பிக்கையாளர்களே!) நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் ஏன் இருவகை கருத்துக் கொள்கின்றீர்கள்? அவர்கள் செய்த தீங்கின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தலை குனியும்படி செய்தான். எவர்களை அல்லாஹ் தவறான வழியில் செல்ல விட்டு விட்டானோ அவர்களை நீங்கள் நேரான வழியில் செலுத்த விரும்புகின்றீர்களோ? (அது முடியாத காரியம்! ஏனென்றால் நபியே!) எவர்களை அல்லாஹ் தவறவிட்டு விட்டானோ அவர்களுக்கு (மீட்சி பெற்றுத் தர) யாதொரு வழியையும் நீங்கள் காணமாட்டீர்கள்!

Tafseer

وَدُّوا۟
விரும்புகிறார்கள்
لَوْ تَكْفُرُونَ
நீங்கள் நிராகரிப்பதை
كَمَا
போன்று
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
فَتَكُونُونَ
ஆகிவிடுவீர்கள்
سَوَآءًۖ فَلَا
சமமாக/ ஆகவே எடுத்துக் கொள்ளாதீர்கள்
مِنْهُمْ
அவர்களில்
أَوْلِيَآءَ
பொறுப்பாளர்களை
حَتَّىٰ
வரை
يُهَاجِرُوا۟
ஹிஜ்ரா செல்வார்கள்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
فَإِن تَوَلَّوْا۟
அவர்கள் விலகினால்
فَخُذُوهُمْ
பிடியுங்கள் அவர்களை
وَٱقْتُلُوهُمْ حَيْثُ
இன்னும் கொல்லுங்கள் அவர்களை/இடம்
وَجَدتُّمُوهُمْۖ
கண்டீர்கள் அவர்களை
وَلَا تَتَّخِذُوا۟
இன்னும் எடுத்துக் கொள்ளாதீர்கள்/அவர்களில்
وَلِيًّا
பொறுப்பாளரை
وَلَا نَصِيرًا
இன்னும் உதவியாளரை

Wadoo law takfuroona kamaa kafaroo fatakoonoona sawaaa'an falaa tattakhizoo minhum awliyaaa'a hattaa yuhaajiroo fee sabeelil laah; fa in tawallaw fa khuzoohum waqtuloohum haisu wajat tumoohum wa laa tattakhizoo minhum waliyyanw wa laa naseeraa

(நம்பிக்கையாளர்களே!) அவர்கள் நிராகரிப்பவர்களாகிவிட்ட படியே நீங்களும் நிராகரிப்பவராகி அவர்களுக்கு சமமாகி விடுவதை அவர்கள் விரும்புகிறார்கள். ஆகவே, (தங்கள் இல்லங்களை விட்டு) அல்லாஹ்வுடைய பாதையில் அவர்கள் புறப்படும் வரையில் நீங்கள் அவர்களை நண்பர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். (இல்லங்களைவிட்டு வெளியேற வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் கண்டவிடமெல்லாம் அவர்களை(க் கைதியாக)ப் பிடித்துக் கொள்ளுங்கள்; (கைதியாகாது தப்ப முயற்சிப்பவரை) கொல்லுங்கள். தவிர, அவர்களில் எவரையுமே (உங்களுக்கு) நண்பர்களாகவும், உதவியாளர்களாகவும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

Tafseer

إِلَّا
தவிர
ٱلَّذِينَ
எவர்கள்
يَصِلُونَ
சேருகிறார்கள்
إِلَىٰ قَوْمٍۭ
சமுதாயத்திடம்
بَيْنَكُمْ
உங்களுக்கிடையில்
وَبَيْنَهُم
இன்னும் அவர்களுக்கு இடையில்
مِّيثَٰقٌ
உடன்படிக்கை
أَوْ
அல்லது
جَآءُوكُمْ
உங்களிடம் வந்தனர்
حَصِرَتْ
நெருக்கடிக்குள்ளாகின
صُدُورُهُمْ
நெஞ்சங்கள் அவர்களுடைய
أَن
அவர்கள் போரிடுவது
يُقَٰتِلُوكُمْ أَوْ
அவர்கள் போரிடுவது உங்களிடம்/அல்லது
يُقَٰتِلُوا۟
அவர்கள் போரிடுவது
قَوْمَهُمْۚ
தங்கள் சமுதாயத்திடம்
وَلَوْ شَآءَ
நாடியிருந்தால்
ٱللَّهُ
அல்லாஹ்
لَسَلَّطَهُمْ عَلَيْكُمْ
சாட்டியிருப்பான்/அவர்களை/உங்கள் மீது
فَلَقَٰتَلُوكُمْۚ
போரிட்டிருப்பார்கள் உங்களிடம்
فَإِنِ
அவர்கள் விலகினால்
ٱعْتَزَلُوكُمْ
அவர்கள் விலகினால் உங்களை
فَلَمْ
அவர்கள் போரிடவில்லை
يُقَٰتِلُوكُمْ
அவர்கள் போரிடவில்லை உங்களிடம்
وَأَلْقَوْا۟
இன்னும் சமர்ப்பித்தார்கள்
إِلَيْكُمُ
உங்கள் முன்
ٱلسَّلَمَ
சமாதானத்தை
فَمَا جَعَلَ
ஆக்கவில்லை
ٱللَّهُ
அல்லாஹ்
لَكُمْ
உங்களுக்கு
عَلَيْهِمْ
அவர்கள் மீது
سَبِيلًا
ஒரு வழியை

Illal lazeena yasiloona ilaa qawmim binakum wa bainahum meesaaqun aw jaaa'ookum hasirat sudooruhum ai yuqaatilookum aw yuqaatiloo qawmahum, wa law shaaa'al laahu lasallatahum 'alaikum falaqaatalookum; fa ini' tazalookum falam yuqaatilookum wa alqaw ilaikumus salama famaa ja'alal laahu lakum 'alaihim sabeelaa

(ஆயினும்) உங்களுடன் (சமாதான) உடன்படிக்கை செய்து கொண்டவர்களிடம் சென்று விட்டவர்களையும், உங்களை எதிர்த்து போர்புரிய மனம் ஒப்பாது (உங்கள் எதிரிகளை விட்டுப் பிரிந்து) உங்களிடம் வந்தவர்களையும், தங்கள் இனத்தாரை எதிர்த்துச் சண்டை செய்(ய மனம் ஒப்பாது உங்களிடமிருந்து பிரிந்) தவர்களையும் (வெட்டாதீர்கள்; சிறை பிடிக்காதீர்கள். ஏனென்றால்,) அல்லாஹ் நாடினால் உங்களை அவர்கள் வெற்றி கொண்டு (அவர்கள்) உங்களை வெட்டும்படிச் செய்திருப்பான். ஆகவே, (இத்தகையவர்கள்) உங்களுடன் போர்புரியாது விலகியிருந்து சமாதானத்தைக் கோரினால் (அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில்,) இத்தகையவர்கள் மீது (போர்புரிய) அல்லாஹ் உங்களுக்கு யாதொரு வழியும் வைக்கவில்லை.

Tafseer