Wa jaaa'at kullu nafsim ma'ahaa saaa'iqunw wa shaheed
(அந்நாளில்) ஒவ்வொரு ஆத்மாவையும், அதன் சாட்சியுடன் ஒருவர் ஓட்டிக் கொண்டு வருவார்.
Laqad kunta fee ghaf latim min haazaa fakashafnaa 'anka ghitaaa'aka fabasarukal yawma hadeed
அவனை நோக்கி "நிச்சயமாக நீ இதனைப் பற்றிக் கவலையற்றிருந்தாய். உன் பார்வையை மறைத்துக் கொண்டிருந்த திரையை உன்னைவிட்டும் நாம் நீக்கிவிட்டோம். இன்றைய தினம் உன்னுடைய பார்வை கூர்மையாயிருக்கின்றது. (ஆகவே, நீ மறுத்துக் கொண்டிருந்த இதனை உன் கண்ணைத் திறந்து பார்" என்று கூறப்படும்.)
Wa qaala qareenuhoo haazaa maa ladaiya 'ateed
(சாட்சி கூற) அவனுடன் வந்தவர் "இதோ (அவனுடைய பதிவேடு, அவனுடைய நடவடிக்கையின் குறிப்பு) என்னிடம் (தயாராகி) இருக்கின்றது" என்று கூறுவார்.
Alqiyaa fee Jahannama kulla kaffaarin 'aneed
(உடனே இரு காவலர்களை நோக்கி) "நிராகரித்துக் கொண்டிருந்த (ஷைத்தான் முதலிய) ஒவ்வொரு வம்பனையும் நரகத்தில் தள்ளுங்கள்" (என்று கூறப்படும்).
Mannaa'il lilkhayri mu'tadim mureeb
("அவன்) நன்மையான காரியங்களைத் தடுத்துக் கொண்டு, (இந்நாளைச்) சந்தேகித்து வரம்பு மீறிக் கொண்டுமிருந்தான்" என்றும்,
Allazee ja'ala ma'al laahi ilaahan aakhara fa alqiyaahu fil'azaabish shadeed
"இவன் அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனை ஏற்படுத்தினான் என்றும், ஆகவே, நீங்களிருவரும் இவனைக் கொடிய வேதனையில் போட்டுவிடுங்கள்" (என்றும் கூறப்படும்).
Qaala qareenuhoo Rabbanaa maaa atghaituhoo wa laakin kaana fee dalaahim ba'eed
(அச்சமயம்) இவனுடைய இணை பிரியாத சினேகிதன் (ஆக இருந்த ஷைத்தான் இறைவனை நோக்கி,) "என் இறைவனே! நான் இவனை வழிகெடுக்கவில்லை. தானாகவே அவன் வெகு தூரமான வழிகேட்டில் சென்றுவிட்டான்" என்று கூறுவான்.
Qaala laa takhtasimoo ladaayya wa qad qaddamtu ilaikum bilwa'eed
(ஆகவே, இறைவன் அவர்களை நோக்கி,) "என் முன்பாக நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருக்க வேண்டாம். ஏற்கனவே (இதைப் பற்றி) உங்களுக்கு (எச்சரித்துப்) பயமுறுத்தியிருந்தேன்" என்றும்,
Maa yubaddalul qawlu ladaiya wa maaa ana bizal laamil lil'abeed
"என்னுடைய கட்டளை மாற்றப்படுவதில்லை; நான் என்னுடைய அடியார்களுக்கு அறவே அநியாயம் செய்பவனல்ல" என்றும் கூறுவான்.
Yawma naqoolu li'jahannama halim talaati wa taqoolu hal mim mazeed
தவிர அந்நாளில் நரகத்தை நோக்கி, "உன்னுடைய வயிறு நிறைந்து விட்டதா?" என்று நாம் கேட்போம். அதற்கு அது "இன்னும் ஏதும் இருக்கின்றதா?" என்று கேட்கும்.