Falamma jaaa'a Aala Lootinil mursaloon
(இறைவனால்) அனுப்பப்பட்ட (அம்)மலக்குகள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்தபொழுது,
Qaala innakum qawmum munkaroon
அவர் (அவர்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் (நான்) அறியாத மக்களாய் இருக்கின்றீர்களே!" என்று கூறினார்.
Qaaloo bal ji'naaka bimaa kaanoo feehi yamtaroon
அதற்கவர்கள், "(உங்களது மக்களாகிய) இவர்கள் எதைச் சந்தேகித்துக் கொண்டிருந்தார்களோ அதை நாம் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறோம்.
Wa atainaaka bilhaqqi wa innaa lasaadiqoon
மெய்யான விஷயத்தையே நாம் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறோம். நிச்சயமாக நாம் (அவர்களை அழித்துவிடுவோம், என்று உங்களுக்கு) உண்மையே கூறுகிறோம்.
Fa asri bi ahlika biqit'im minal laili wattabi' adbaarahum wa laa yaltafit minkum ahadunw wamdoo haisu tu'maroon
ஆகவே, இன்றிரவில் சிறிது நேரம் இருக்கும்பொழுதே நீங்கள் உங்கள் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு, (அவர்கள் முன்னும்) நீங்கள் பின்னுமாகச் செல்லுங்கள். உங்களில் ஒருவருமே திரும்பிப் பார்க்காது உங்களுக்கு ஏவப்பட்ட இடத்திற்குச் சென்று விடுங்கள்" என்றார்கள்.
Wa qadainaaa ilaihi zaalikal amra anna daabira haaa'ulaaa'i maqtoo'um musbiheen
அன்றி, நிச்சயமாக இவர்கள் அனைவரும் விடிவதற்குள்ளாகவே வேரறுக்கப்பட்டு விடுவார்கள் என்றும் நாம் (அம்மலக்குகள் மூலமாக) அவருக்கு அறிவித்தோம்.
Wa jaaa'a ahlul madeenati yastabshiroon
(இதற்கிடையில் லூத் நபியின் வீட்டிற்கு வாலிபர்கள் சிலர் வந்திருப்பதாக அறிந்து) அவ்வூரார் மிக்க சந்தோஷத்துடன் (லூத் நபியின் வீட்டிற்கு) வந்து (கூடி) விட்டனர்.
Qaala inna haaa'ulaaa'i daifee falaa tafdahoon
(லூத் நபி அவர்களை நோக்கி) "நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தாளிகள். ஆகவே, (அவர்கள் முன்பாக) நீங்கள் என்னை இழிவுபடுத்தாதீர்கள்.
Wattaqul laaha wa laa tukhzoon
அன்றி நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; என்னை அவமானப்படுத்தாதீர்கள்" என்று கூறினார்.
Qaalooo awalam nanhaka 'anil 'aalameen
அதற்கவர்கள் "உலகில் யாராயிருந்தாலும் (சிபாரிசுக்கு) நீங்கள் வரக்கூடாதென்று நாம் உங்களைத் தடுத்திருக்கவில்லையா?" என்று கூறினார்கள்.