Skip to main content

قَالَ
அவன் கூறினான்
فَأْتِ بِهِۦٓ
அதைக் கொண்டுவாரீர்
إِن كُنتَ
நீர் இருந்தால்
مِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களில்

Qaala faati biheee in kunta minas saadiqeen

அதற்கவன் "நீங்கள் சொல்வது உண்மையானால், அதனைக் கொண்டு வாருங்கள்" என்று கூறினான்.

Tafseer

فَأَلْقَىٰ
ஆகவே அவர் எறிந்தார்
عَصَاهُ
தனது கைத்தடியை
فَإِذَا
உடனே
هِىَ
அது
ثُعْبَانٌ
மலைப் பாம்பாக
مُّبِينٌ
தெளிவான

Fa alqaa 'asaahu fa izaaa hiya su'baanum mubeen

ஆகவே, மூஸா தன் தடியை எறிந்தார். உடனே அது பெரியதொரு பாம்பாகி விட்டது.

Tafseer

وَنَزَعَ
அவர் வெளியே எடுத்தார்
يَدَهُۥ
தனது கையை
فَإِذَا
உடனே
هِىَ
அது ஆகிவிட்டது
بَيْضَآءُ
வெண்மையாக
لِلنَّٰظِرِينَ
பார்ப்பவர்களுக்கு

Wa naza'a yadahoo faizaa hiya baidaaa'u linnaa zireen

அன்றி, அவர் தன்னுடைய கையை(ச் சட்டைப் பையில்) இட்டு வெளியில் எடுத்தார். உடனே அது பார்ப்பவர்களுக்கு(க் கண்ணைக் கூசச்செய்யும் பிரகாசமுடைய) வெண்மையாகத் தோன்றியது.

Tafseer

قَالَ
அவன் கூறினான்
لِلْمَلَإِ
பிரமுகர்களிடம்
حَوْلَهُۥٓ
தன்னை சுற்றியுள்ள
إِنَّ
நிச்சயமாக
هَٰذَا
இவர்
لَسَٰحِرٌ
ஒரு சூனியக்காரர்தான்
عَلِيمٌ
நன்கறிந்த

Qaala lilmala-i hawlahooo inna haazaa lasaahirun 'aleem

(இதனைக் கண்ணுற்ற ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ இருந்தவர்களை நோக்கி, "நிச்சயமாக இவர் மிகவும் நன்கு அறிந்த சூனியக்காரராக இருக்கிறார்.

Tafseer

يُرِيدُ
அவர் நாடுகிறார்
أَن يُخْرِجَكُم
உங்களை வெளியேற்ற
مِّنْ أَرْضِكُم
உங்கள் பூமியிலிருந்து
بِسِحْرِهِۦ
தனது சூனியத்தால்
فَمَاذَا
ஆகவே, என்ன?
تَأْمُرُونَ
நீங்கள் கருதுகிறீர்கள்

Yureedu ai yukhrijakum min ardikum bisihrihee famaazaa taamuroon

இவர் தன் சூனியத்தால் உங்கள் ஊரை விட்டும் உங்களைத் துரத்திவிட எண்ணுகிறார். ஆகவே, இதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்" என்று கேட்டான்.

Tafseer

قَالُوٓا۟
அவர்கள் கூறினர்
أَرْجِهْ
அவருக்கும் அவகாசம் அளி!
وَأَخَاهُ
அவரது சகோதரருக்கும்
وَٱبْعَثْ
இன்னும் அனுப்பு
فِى ٱلْمَدَآئِنِ
நகரங்களில்
حَٰشِرِينَ
அழைத்து வருபவர்கள்

Qaalooo arjih wa akhaahu wab'as filmadaaa'ini haashireen

அதற்கவர்கள், "அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் ஒரு தவணை அளித்து, துப்பறிபவர்களைப் பல ஊர்களுக்கும் அனுப்பிவை.

Tafseer

يَأْتُوكَ
அவர்கள் உன்னிடம் கொண்டு வருவார்கள்
بِكُلِّ
எல்லோரையும்
سَحَّارٍ
பெரிய சூனியக்காரர்கள்
عَلِيمٍ
கற்றறிந்தவர்(கள்)

Yaatooka bikulli sah haarin 'aleem

அவர்கள் நன்கறிந்த சூனியக்காரர்கள் அனைவரையும் (தேடிப்பிடித்து) உங்களிடம் அழைத்து வருவார்கள்" என்று கூறினார்கள்.

Tafseer

فَجُمِعَ
ஆகவே, ஒன்று சேர்க்கப்பட்டனர்
ٱلسَّحَرَةُ
சூனியக்காரர்கள்
لِمِيقَٰتِ
குறிப்பிட்ட தவணையில்
يَوْمٍ
ஒரு நாளின்
مَّعْلُومٍ
அறியப்பட்ட

Fa jumi'as saharatu limeeqaati Yawmim ma'loom

(அவ்வாறே துப்பறிபவர்கள் பல ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு) குறித்த நாளில், குறித்த நேரத்தில் (குறித்த இடத்தில்) சூனியக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட்டார்கள்.

Tafseer

وَقِيلَ
கூறப்பட்டது
لِلنَّاسِ
மக்களுக்கு
هَلْ أَنتُم
நீங்கள் ஒன்று சேருவீர்களா?

Wa qeela linnaasi hal antum mujtami'oon

எல்லா மனிதர்களுக்கும் "(குறித்த காலத்தில்) நீங்கள் வந்து சேருவீர்களா?" என்று பறை சாற்றப்பட்டது..

Tafseer

لَعَلَّنَا نَتَّبِعُ
நாம் பின்பற்றலாம்
ٱلسَّحَرَةَ
சூனியக்காரர்களை
إِن كَانُوا۟
அவர்கள் ஆகிவிட்டால்
ٱلْغَٰلِبِينَ
வெற்றியாளர்களாக

La'allanaa nattabi'us saharata in kaanoo humul ghaalibeen

(இவ்வாறு அங்கு கூடும்) சூனியக்காரர்கள் வெற்றி கொண்டால் (அவர்களுடைய மார்க்கத்தையே) நாங்கள் பின்பற்றவும் கூடும் (என்றும் பறை சாற்றப்பட்டது).

Tafseer