Wa yaqooloona mataa haazal wa'du in kuntum saadiqeen
(நம்பிக்கையாளர்களை நோக்கி நிராகரிக்கும்) அவர்கள் "மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் நீங்கள் பயமுறுத்தும் வேதனை எப்பொழுது வரும்?" என்று கேட்கின்றார்கள்.
Qul 'asaaa any-yakoona radifa lakum ba'dul lazee tasta'jiloon
அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் அவசரப்படுபவைகளில் சில இப்பொழுதே உங்களைப் பின் தொடரவும் கூடும்."
Wa innna Rabbaka lazoo fadlin 'alan naasi wa laakina aksarahum laa yashkuroon
ஆயினும், நிச்சயமாக உங்களது இறைவன் மனிதர்கள் மீது மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான். (ஆதலால், தண்டனையை இதுவரை தாமதப்படுத்தி இருக்கிறான்.) எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதற்கு) நன்றி செலுத்துவதில்லை.
Wa inna Rabbaka la ya'lamu maa tukinnu sudooruhum wa maa yu'linoon
(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன் அவர்கள் தங்கள் உள்ளங்களில் மறைந்திருப்பதையும், (அதற்கு மாறாக) அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிவான்.
Wa maa min ghaaa'ibatin fis samaaa'i wal ardi illaa fee kitaabimm mubeen
வானத்திலோ பூமியிலோ மறைவாக இருக்கும் எதுவுமே ("லவ்ஹுல் மஹ்ஃபூள்" என்னும்) அவனுடைய தெளிவான குறிப்புப் புத்தகத்தில் பதியப்படாமலில்லை.
Inna haazal Qur-aana yaqussu 'alaa Baneee israaa'eela aksaral lazee hum feehi yakhtalifoon
நிச்சயமாக இந்தக் குர்ஆன், இஸ்ராயீலின் சந்ததிகள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ அவைகளில் பெரும்பாலானவற்றை அவர்களுக்கு விவரித்துக் கூறுகிறது.
Wa innahoo lahudanw wa rahmatul lilmu'mineen
ஆகவே, அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டார்களோ அவர்களுக்கு இது நேர்வழி காட்டுவதாகவும் அருளாகவும் இருக்கின்றது.
Inna Rabbaka yaqdee bainahum bihukmih; wa Huwal 'Azeezul 'Aleem
நிச்சயமாக உங்கள் இறைவன் தன் உத்தரவைக் கொண்டு (இந்தக் குர்ஆன் மூலம்) அவர்களுக்கிடையில் (ஏற்பட்ட விவகாரங்களைப் பற்றி) தீர்ப்பளிக்கின்றான். அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் (அனைத்தையும்) அறிந்தவனாகவும் இருக்கின்றான்.
Fatawakkal 'alal laahi innaka 'alal haqqil mubeen
ஆகவே, (நபியே!) நீங்கள் அல்லாஹ்வையே நம்புங்கள். நிச்சயமாக நீங்கள் தெளிவான உண்மையின் மீதே இருக்கின்றீர்கள்.
Innaka laa tusmi'ul mawtaa wa laa tusmi'us summad du'aaa izaa wallaw mudbireen
(நபியே!) மரணித்தவர்களுக்குக் கேட்கும்படிச் செய்ய நிச்சயமாக உங்களால் முடியாது. (அவ்வாறே உங்களுக்குப்) புறங்காட்டிச் செல்லும் செவிடர்களுக்கு நீங்கள் அழைக்கும் (உங்களுடைய) சப்தத்தைக் கேட்கும்படிச் செய்யவும் முடியாது.