Zaharal fasaadu fil barri wal bahri bimaa kasabat aydinnaasi li yuzeeqahum ba'dal lazee 'amiloo la'allahum yarji'oon
மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவி விட்டன. அதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்வதற்காக, அவர்களின் தீய செயல்களில் சிலவற்றின் தண்டனையை அவர்கள் (இம்மையிலும்) சுவைக்கும்படி அவன் செய்ய வேண்டியதாகிறது.
Qul seeroo fil ardi fanzuroo kaifa kaana 'aaqibatul lazeena min qabl; kaana aksaruhum mushrikeen
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து பாருங்கள். உங்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு என்னாயிற்று? முன்னிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இணைவைத்து வணங்குபவர்களாகவே இருந்தனர்.
Fa aqim wajhaka lid deenil qaiyimi min qabli any yaatiya Yawmul laa maradda lahoo minal laahi Yawma'iziny yassadda'oon
ஆகவே, (நபியே!) அல்லாஹ்விடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாத ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே நீங்கள் உங்களுடைய முகத்தை நிலையான மார்க்கத்தளவில் திருப்பி விடுங்கள். அந்நாளில் (நல்லவர்களும், தீயவர்களும்) வெவ்வேறாகப் பிரிந்து விடுவார்கள்.
Man kafara fa'alaihi kufruhoo wa man 'amila saalihan fali anfusihim yamhadoon
எவன் நிராகரிப்பவனாக இருக்கிறானோ அவனுடைய நிராகரிப்பு அவனுக்கே கேடாக முடியும். எவர் நற்காரியங்களைச் செய்கின்றாரோ அவர் (அதனை மறுமையில்) தனக்கு நன்மையாகவே அமைத்துக் கொள்கிறார்.
Li yajziyal lazeena aamanoo wa 'amilus saalihaati min fadlih; innahoo laa yuhibbul kaafireen
நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களுக்கே அவன் (அல்லாஹ்) தன் அருளைக் கூலியாகக் கொடுக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவன் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை.
Wa min Aayaatiheee anyyursilar riyaaha mubashshi raatinw wa li yuzeeqakum mir rahmatihee wa litajriyal fulku bi amrihee wa litabtaghoo min fadlihee wa la'allakum tashkuroon
(மழைக்கு முன்னர் குளிர்ந்த) காற்றை நற்செய்தியாக அவன் அனுப்பி வைப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றே. (அதைக் கொண்டு) அவன் தன் அருளை (மழையை) நீங்கள் சுவைக்கும்படிச் செய்து, கப்பல்களையும் அவன் தன் கட்டளையைக் கொண்டே செல்லும்படிச் செய்கிறான். அதனால் (பல தீவுகளில் உள்ள) அவனுடைய அருளை நீங்கள் தேடிக்கொள்கிறீர்கள். (இவைகளுக்காக) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
Wa laqad arsalnaa min qablika Rusulan ilaa qawmihim fajaaa'oohum bil baiyinaati fantaqamnaa minal lazeena ajramoo wa kaana haqqan 'alainaa nasrul mu'mineen
(நபியே!) நிச்சயமாக நாம் உங்களுக்கு முன்னரும் பல தூதர்களை அந்தந்த மக்களிடம் அனுப்பி வைத்தோம். அவர்களும் தெளிவான அத்தாட்சிகளையே அவர்களிடம் கொண்டு வந்தனர். (எனினும், அவற்றை அவர்கள் நிராகரித்து விட்டனர்.) ஆகவே, (அவற்றை நிராகரித்த) குற்றவாளிகளை நாம் பழிவாங்கினோம். (ஏனென்றால் இவ்வாறு பழிவாங்கி) நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது நம்மீது கடமையாகிவிட்டது.
Allaahul lazee yursilur riyaaha fatuseeru sahaaban fa yabsutuhoo fis samaaa'i kaifa yashaaa'u wa yaj'aluhoo kisafan fataral wadqa yakhruju min khilaalihee fa izaaa asaaba bihee mai yashaaa'u min 'ibaadiheee izaa hum yastabshiroon
அல்லாஹ்தான் காற்றை அனுப்பி வைக்கிறான். அது மேகத்தை ஓட்டுகின்றது. அவன் விரும்பியவாறு அதனை வானத்தில் திட்டுத் திட்டாகப் பரப்பிவிடுகிறான். அதிலிருந்து மழை பொழிவதை (நபியே!) நீங்கள் காண்கிறீர்கள். தன் அடியார்களில் அவன் விரும்பியவர்களை அம்மழை வந்தடையும் பட்சத்தில் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
Wa in kaanoo min qabli any yunazzala 'alaihim min qablihee lamubliseen
அதற்கு முன்னர் அவர்கள் தங்கள் மீது மழை பொழியும் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்தவர்களாகவே இருந்தனர்.
Fanzur ilaaa aasaari rahmatil laahi kaifa yuhyil arda ba'da mawtihaa; inna zaalika lamuhyil mawtaa wa Huwa 'alaa kulli shai'in Qadeer
(நபியே!) அல்லாஹ்வின் இவ்வருளால் ஏற்படும் பலன்களை நீங்கள் கவனியுங்கள்! இறந்துபோன பூமியை எவ்வாறு செழிக்கச் செய்கிறான்! (இவ்வாறே) நிச்சயமாக அவன் இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கச் செய்வான். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உடையவன்.