Skip to main content

قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
رَبَّنَآ
எங்கள் இறைவா!
أَمَتَّنَا
நீ எங்களுக்கு மரணத்தைக் கொடுத்தாய்
ٱثْنَتَيْنِ
இருமுறை
وَأَحْيَيْتَنَا
எங்களுக்கு வாழ்க்கையைக் கொடுத்தாய்
ٱثْنَتَيْنِ
இருமுறை
فَٱعْتَرَفْنَا
நாங்கள் ஒப்புக் கொண்டோம்
بِذُنُوبِنَا
எங்கள் பாவங்களை
فَهَلْ إِلَىٰ
வெளியேறுவதற்கு ஏதேனும் உண்டா?
مِّن سَبِيلٍ
வழி

Qaaloo Rabbanaaa amat tanasnataini wa ahyaitanas nataini fa'tarafnaa bizunoo binaa fahal ilaa khuroojim min sabeel

அதற்கவர்கள், "எங்கள் இறைவனே! இருமுறை நீ எங்களை மரணிக்கச் செய்தாய்; இருமுறை நீ எங்களுக்கு உயிர் கொடுத்தாய். நாங்கள் எங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு விண்ணப்பம் செய்கின்றோம். ஆகவே, (இதில் இருந்து நாங்கள்) வெளிப்பட ஏதும் வழி உண்டா?" என்று கேட்பார்கள்.

Tafseer

ذَٰلِكُم
இது
بِأَنَّهُۥٓ
ஏனென்றால் நிச்சயமாக
إِذَا دُعِىَ
அழைக்கப்பட்டால்
ٱللَّهُ
அல்லாஹ்
وَحْدَهُۥ
அவன் ஒருவனை மட்டும்
كَفَرْتُمْۖ
நீங்கள் நிராகரித்தீர்கள்
وَإِن يُشْرَكْ
இணை வைக்கப்பட்டால்
بِهِۦ
அவனுக்கு
تُؤْمِنُوا۟ۚ
நம்பிக்கை கொள்கிறீர்கள்
فَٱلْحُكْمُ
எல்லா அதிகாரமும்
لِلَّهِ
அல்லாஹ்வுக்கே
ٱلْعَلِىِّ
மிக உயர்ந்தவனும்
ٱلْكَبِيرِ
மிகப் பெரியவனுமாகிய

Zaalikum bi annahooo izaa du'iyal laahu wahdahoo kafartum wa iny yushrak bihee tu'minoo; falhukmu lillaahil 'Aliyyil Kabeer

(அதற்கு இறைவன்,) "உங்களுக்கு இ(த்தண்டனை வந்த)தன் காரணமாவது: அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறினால், அதனை நீங்கள் மறுத்தீர்கள். அவனுக்கு எவரும் இணை உண்டு என்று கூறினால், அதனை நீங்கள் நம்பினீர்கள்! ஆதலால், (இன்றைய தினம் உங்களுக்குக் கிடைத்திருக்கும் இவ்வேதனை) மிகப் பெரியவனும், மேலானவனுமாகிய அல்லாஹ்வுடைய தீர்ப்பே!" (என்று கூறுவான்).

Tafseer

هُوَ ٱلَّذِى
அவன்தான்
يُرِيكُمْ
உங்களுக்கு காண்பிக்கின்றான்
ءَايَٰتِهِۦ
தனது அத்தாட்சிகளை
وَيُنَزِّلُ
இறக்குகின்றான்
لَكُم
உங்களுக்கு
مِّنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
رِزْقًاۚ
உணவை
وَمَا يَتَذَكَّرُ
நல்லுபதேசம் பெற மாட்டார்கள்
إِلَّا مَن
திரும்புகின்றவர்களைத் தவிர

Huwal lazee yureekum Aayaatihee wa yunazzilu lakum minas samaaa'i rizqaa; wa maa tatazakkaru illaa mai yuneeb

அவன் தன்னுடைய அத்தாட்சிகளை உங்களுக்கு அறிவித்து, வானத்தில் இருந்து உங்களுக்கு உணவுகளையும் இறக்கி வைக்கின்றான். (ஒவ்வொரு விஷயத்திலும்) அவனையே நோக்குபவர்களைத் தவிர, மற்றெவரும் (இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெற மாட்டார்கள்.

Tafseer

فَٱدْعُوا۟
ஆகவே அழையுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
مُخْلِصِينَ لَهُ
அவனுக்கு பரிசுத்தமாக்கியவர்களாக
ٱلدِّينَ
வழிபாடுகளை
وَلَوْ كَرِهَ
வெறுத்தாலும் சரியே!
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பவர்கள்

Fad'ul laaha mukhliseena lahud deena wa law karihal kaafiroon

ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நிராகரிப்பவர்கள் வெறுத்தபோதிலும் நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிப்பட்டு, கலப்பற்ற மனதுடையவர்களாக அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருங்கள்.

Tafseer

رَفِيعُ
உயர்த்தக்கூடியவன்
ٱلدَّرَجَٰتِ
அந்தஸ்துகளை
ذُو ٱلْعَرْشِ
அர்ஷுடையவன்
يُلْقِى
இறக்கினான்
ٱلرُّوحَ
வஹ்யை
مِنْ أَمْرِهِۦ
தனது கட்டளையை உள்ளடக்கிய
عَلَىٰ مَن
தான் நாடியவர் மீது
مِنْ عِبَادِهِۦ
தனது அடியார்களில்
لِيُنذِرَ
அவர்எச்சரிப்பதற்காக
يَوْمَ ٱلتَّلَاقِ
சந்திக்கின்ற நாளைப் பற்றி

Rafee'ud darajaati zul 'Arshi yulqir rooha min amrihee 'alaa mai yashaaa'u min 'ibaadihee liyunzira yawmat talaaq

அவன் மிக்க உயர்ந்த பதவிகள் உடையவன். அர்ஷுக்கும் சொந்தக்காரன். (தன்னைச்) சந்திக்கும் நாளைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, தன் அடியார்களில் தான் விரும்பிய வர்களின் மீது தன் கட்டளையை வஹீ மூலம் இறக்கி வைக்கின்றான்.

Tafseer

يَوْمَ
நாளை(ப் பற்றி)
هُم
அவர்கள்
بَٰرِزُونَۖ
வெளிப்பட்டு நிற்பார்கள்
لَا يَخْفَىٰ
மறைந்துவிடாது
عَلَى
முன்னால்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
مِنْهُمْ
அவர்களில்
شَىْءٌۚ
எதுவும்
لِّمَنِ
யாருக்கு உரியது?
ٱلْمُلْكُ
ஆட்சி
ٱلْيَوْمَۖ
இன்று
لِلَّهِ
அல்லாஹ்விற்கே உரியது
ٱلْوَٰحِدِ ٱلْقَهَّارِ
ஒருவனும்/அடக்கி ஆள்பவனுமாகிய

Yawma hum baarizoona laa yakhfaa 'alal laahi minhum shai; limanil mulkul Yawma lillaahil Waahidil Qahaar

(மரணித்த) அவர்கள் அந்நாளில் (சமாதிகளிலிருந்து) வெளிப்பட்டு(த் தங்கள் இறைவனின்) முன் வந்து நிற்பார்கள். அவர்கள் செய்த யாதொரு விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைந்து விடாது. (அவர்களை நோக்கி,) இன்றைய தினம், "எவருடைய ஆட்சி? (என்று கேட்டு அனைவரையும்) அடக்கி ஆளும் ஒருவனாகிய அந்த அல்லாஹ்வுக்குரியதே!" (என்றும் பதில் கூறப்படும்).

Tafseer

ٱلْيَوْمَ
இன்று
تُجْزَىٰ
கூலி கொடுக்கப்படும்
كُلُّ
எல்லா
نَفْسٍۭ
ஆன்மாவுக்கும்
بِمَا كَسَبَتْۚ
அவைசெய்தவற்றுக்கு
لَا ظُلْمَ
எவ்வித அநியாயமும் இருக்காது
ٱلْيَوْمَۚ
இன்று
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
سَرِيعُ
மிக விரைவானவன்
ٱلْحِسَابِ
விசாரிப்பதில்

Al-Yawma tujzaa kullu nafsim bimaa kasabat; laa zulmal Yawm; innal laaha saree'ul hisaab

இன்றைய தினம் ஒவ்வொரு ஆத்மாவுக்கும், அவைகள் செய்த செயல்களுக்குத் தக்க கூலி கொடுக்கப்படும். இன்றைய தினம் யாதொரு அநியாயமும் நடைபெறாது. அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்(டுத் தீர்ப்பளிப்)பதில் மிகத் தீவிரமானவன்.

Tafseer

وَأَنذِرْهُمْ
அவர்களை நீர் எச்சரிப்பீராக!
يَوْمَ ٱلْءَازِفَةِ
நெருங்கி வரக்கூடிய நாளைப் பற்றி
إِذِ ٱلْقُلُوبُ
போது/உள்ளங்கள்
لَدَى ٱلْحَنَاجِرِ
தொண்டைகளுக்கு அருகில்
كَٰظِمِينَۚ
துக்கம் நிறைந்தவர்களாக
مَا لِلظَّٰلِمِينَ
அந்த அநியாயக்காரர்களுக்கு இருக்கமாட்டார்
مِنْ حَمِيمٍ
நண்பர் எவரும்
وَلَا شَفِيعٍ
இன்னும் ஒரு பரிந்துரையாளரும் இருக்க மாட்டார்
يُطَاعُ
ஏற்றுக்கொள்ளப்படுகின்றார்

Wa anzirhum yawmal aazifati izil quloobu ladal hanaajiri kaazimeen; maa lizzaalimeena min hameeminw wa laa shafee'iny-yutaa'

(நபியே!) சமீபத்திலிருக்கும் (மறுமை) நாளைப் பற்றி நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (அந்நாளில் அவர்களுடைய) உள்ளங்கள் கோபத்தால் அவர்களின் தொண்டைகளை அடைத்துக்கொள்ளும். அநியாயம் செய்பவர் களுக்கு உதவி செய்பவர்கள் (அந்நாளில்) ஒருவரும் இருக்க மாட்டார். அனுமதி பெற்ற சிபாரிசு செய்பவர்களும் இருக்க மாட்டார்.

Tafseer

يَعْلَمُ
அவன் நன்கறிவான்
خَآئِنَةَ
மோசடிகளையும்
ٱلْأَعْيُنِ
கண்களின்
وَمَا تُخْفِى
மறைப்பதையும்
ٱلصُّدُورُ
நெஞ்சங்கள்

Ya'lamu khaaa'inatal a'yuni wa maa tukhfis sudoor

(மனிதர்களின்) கண்கள் செய்யும் சூதுகளையும், உள்ளங்களில் மறைந்து இருப்பவைகளையும் இறைவன் நன்கறிவான்.

Tafseer

وَٱللَّهُ
அல்லாஹ்
يَقْضِى
தீர்ப்பளிக்கின்றான்
بِٱلْحَقِّۖ
உண்மையைத்தான்
وَٱلَّذِينَ
எவர்களை
يَدْعُونَ
அவர்கள் அழைக்கின்றார்களோ
مِن دُونِهِۦ
அவனையன்றி
لَا يَقْضُونَ
அவர்கள் தீர்ப்பளிக்க மாட்டார்கள்
بِشَىْءٍۗ
எதையும்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ هُوَ
அல்லாஹ்தான்
ٱلسَّمِيعُ
நன்கு செவிமடுப்பவன்
ٱلْبَصِيرُ
உற்று நோக்குபவன்

Wallaahu yaqdee bilhaqq, wallazeena yad'oona min doonihee laa yaqdoona bishai'; innal laaha Huwas Samee'ul Baseer

ஆதலால், முற்றிலும் நீதமாகவே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். இவர்கள் (இறைவனென) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவைகளோ (அதற்கு மாறாக) எத்தகைய தீர்ப்பும் கூறமுடியாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்.

Tafseer