Skip to main content

وَقَاسَمَهُمَآ
சத்தியமிட்டான்/அவ்விருவரிடமும்
إِنِّى
நிச்சயமாக நான்
لَكُمَا
உங்கள் இருவருக்கும்
لَمِنَ ٱلنَّٰصِحِينَ
நிச்சயமாக நன்மையை நாடுவோரில்

Wa qaasamahumaaa innee lakumaa laminan naasiheen

"நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையையே கருதுகிறேன்" என்று அவ்விருவரிடமும் சத்தியமும் செய்து,

Tafseer

فَدَلَّىٰهُمَا
ஆக, தரம் தாழ்த்தினான்/அவ்விருவரை
بِغُرُورٍۚ
ஏமாற்றி
فَلَمَّا ذَاقَا
இருவரும் சுவைத்தபோது
ٱلشَّجَرَةَ بَدَتْ
மரத்தை/தெரிந்தன
لَهُمَا
அவ்விருவருக்கு
سَوْءَٰتُهُمَا
அவ்விருவரின் வெட்கத்தலங்கள்
وَطَفِقَا
அவ்விருவரும் முயன்றனர்
يَخْصِفَانِ
அவ்விவரும் மூடிக்கொள்கின்றனர்
عَلَيْهِمَا
தம் இருவர் மீதும்
مِن وَرَقِ
இலைகளினால்
ٱلْجَنَّةِۖ
சொர்க்கத்தின்
وَنَادَىٰهُمَا
அழைத்தான்/அவ்விருவரை
رَبُّهُمَآ
அவ்விருவரின் இறைவன்
أَلَمْ أَنْهَكُمَا
நான் தடுக்கவில்லையா?/உங்களிருவரை
عَن تِلْكُمَا
அம்மரத்தை விட்டு
وَأَقُل
இன்னும் நான்கூறவில்லையா?
لَّكُمَآ
உங்களிருவருக்கு
إِنَّ
நிச்சயமாக
ٱلشَّيْطَٰنَ
ஷைத்தான்
لَكُمَا
உங்களிருவருக்கு
عَدُوٌّ
எதிரி
مُّبِينٌ
வெளிப்படையான

Fadallaahumaa bighuroor; falammaa zaaqash shajarata badat lahumaa saw aatuhumaa wa tafiqaa yakhsifaani 'alaihimaa minw waraqil jannati wa naadaahumaa Rabbuhumaaa alam anhakumaa 'an tilkumash shajarati wa aqul lakumaaa innash Shaitaana lakumaa 'aduwwum mubeen

அவர்களை மயக்கி, (அம்மரத்தின் கனியைப் புசிப்பதற்காக) அதன் பக்கம் அவர்களைச் செல்ல வைத்தான். அவ்விருவரும் அம்மரத்(தின் பழத்)தைச் சுவைக்கவே, அவ்விருவரின் மர்ம உறுப்புகளும் அவர்களுக்குத் தெரிந்து, அச்சோலையின் இலையைக் கொண்டு தங்களை மூடிக்கொள்ள அவர்கள் முயற்சித்தனர். அது சமயம் இறைவன் "அம்மரத்தை விட்டும் நான் உங்களைத் தடுத்திருக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா?" என்று அவ்விருவரையும் அழைத்துக் கூறினான்.

Tafseer

قَالَا
அவ்விருவரும் கூறினர்
رَبَّنَا
எங்கள் இறைவா
ظَلَمْنَآ
நாங்கள் தீங்கிழைத்தோம்
أَنفُسَنَا
எங்கள் ஆன்மாக்களுக்கு
وَإِن لَّمْ
நீ மன்னிக்கவில்லையெனில்/எங்களை
وَتَرْحَمْنَا
இன்னும் நீ கருணை புரியவில்லையெனில்/எங்களுக்கு
لَنَكُونَنَّ
நிச்சயமாக ஆகிவிடுவோம்
مِنَ ٱلْخَٰسِرِينَ
நஷ்டவாளிகளில்

Qaalaa Rabbanaa zalamnaaa anfusanaa wa illam taghfir lanaa wa tarhamnaa lanakoonanna minal khaasireen

(அதற்கு அவர்கள்) "எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று (பிரார்த்தித்துக்) கூறினர்.

Tafseer

قَالَ
கூறினான்
ٱهْبِطُوا۟
இறங்கிவிடுங்கள்
بَعْضُكُمْ
உங்களில் சிலர்
لِبَعْضٍ
சிலருக்கு
عَدُوٌّۖ
எதிரி
وَلَكُمْ
உங்களுக்கு
فِى ٱلْأَرْضِ
பூமியில்
مُسْتَقَرٌّ
தங்குமிடம்
وَمَتَٰعٌ
இன்னும் சுகம்
إِلَىٰ
வரை
حِينٍ
ஒரு காலம்

Qaalah bitoo ba'dukum liba'din aduwwunw wa lakum fil ardi mmustaqarrunw wa mataa'un ilaaheen

(அதற்கு இறைவன் "இதிலிருந்து) நீங்கள் வெளியேறி விடுங்கள். உங்களில் ஒருவர் மற்றவருக்கு எதிரியாகி விடுவீர்கள். பூமியில்தான் உங்களுக்குத் தங்குமிடம் உண்டு. (அதில்) ஒரு காலம் வரை சுகம் அனுபவிக்கலாம்" என்று கூறினான்.

Tafseer

قَالَ
கூறினான்
فِيهَا
அதில்தான்
تَحْيَوْنَ
வாழ்வீர்கள்
وَفِيهَا
இன்னும் அதில்தான்
تَمُوتُونَ
இறப்பீர்கள்
وَمِنْهَا
இன்னும் அதிலிருந்துதான்
تُخْرَجُونَ
எழுப்பப்படுவீர்கள்

Qaala feehaa tahyawna wa feehaa tamootoona wa minhaa tukhrajoon

(அன்றி) "அதிலேயே நீங்கள் உயிர் வாழ்வீர்கள்; அதிலேயே நீங்கள் இறப்பீர்கள்; (பின்னர் ஒரு நாளில்) அதிலிருந்தே எழுப்பவும் படுவீர்கள்" என்றும் கூறினான்.

Tafseer

يَٰبَنِىٓ
சந்ததிகளே
ءَادَمَ
ஆதமின்
قَدْ أَنزَلْنَا
திட்டமாக/இறக்கினோம் (படைத்தோம்)
عَلَيْكُمْ
உங்கள் மீது (உங்களுக்கு)
لِبَاسًا
ஆடையை
يُوَٰرِى
மறைக்கின்ற(து)
سَوْءَٰتِكُمْ
உங்கள் வெட்கத்தலங்களை
وَرِيشًاۖ
இன்னும் அலங்காரத்தை
وَلِبَاسُ
ஆடை
ٱلتَّقْوَىٰ
இறையச்சத்தின்
ذَٰلِكَ
அதுதான்
خَيْرٌۚ
மிகச் சிறந்தது
ذَٰلِكَ
இவை
مِنْ ءَايَٰتِ
அத்தாட்சிகளில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ
அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக

Yaa Baneee Aadama qad anzalnaa 'alaikum libaasany yuwaaree saw aatikum wa reeshanw wa libaasut taqwaa zaalika khair; zaalika min Aayaatil laahi la'allahum yaz zakkaroon

ஆதமுடைய மக்களே! உங்களுடைய மானத்தை மறைக்கக் கூடியதும் (உங்களை) அலங்கரிக்கக் கூடியதுமான ஆடைகளை நிச்சயமாக நாம் உங்களுக்கு அருள் புரிந்திருக்கின்றோம். எனினும், (பாவங்களை மறைத்துவிடக் கூடிய) இறை அச்சம் எனும் ஆடைதான் மிக்க மேலானது. இவை அனைத்தும் அல்லாஹ்வுடைய வசனங்களாகும். (இவற்றைக் கொண்டு) அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவார்களாக!

Tafseer

يَٰبَنِىٓ
சந்ததிகளே
ءَادَمَ
ஆதமின்
لَا يَفْتِنَنَّكُمُ
ஏமாற்றிவிட வேண்டாம்/உங்களை
ٱلشَّيْطَٰنُ كَمَآ
ஷைத்தான்/போன்று
أَخْرَجَ
வெளியேற்றினான்
أَبَوَيْكُم
உங்கள் தாய் தந்தையை
مِّنَ ٱلْجَنَّةِ
சொர்க்கத்திலிருந்து
يَنزِعُ
கழட்டுகிறான்
عَنْهُمَا
அவ்விருவரை விட்டு
لِبَاسَهُمَا
அவ்விருவரின் ஆடையை
لِيُرِيَهُمَا
அவன் காண்பிப்பதற்காக/அவ்விருவருக்கு
سَوْءَٰتِهِمَآۗ
அவ்விருவருடைய வெட்கத்தலங்களை
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
يَرَىٰكُمْ
பார்க்கிறான்/உங்களை
هُوَ وَقَبِيلُهُۥ
அவன்/இன்னும் அவனுடைய இனத்தார்
مِنْ حَيْثُ
நீங்கள் அவர்களைப் பார்க்காதவாறு
إِنَّا
நிச்சயமாக நாம்
جَعَلْنَا
ஆக்கினோம்
ٱلشَّيَٰطِينَ
ஷைத்தான்களை
أَوْلِيَآءَ
நண்பர்களாக
لِلَّذِينَ
எவர்களுக்கு
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Yaa Banee Aadama laa yaftinannnakumush Shaitaanu kamaaa akhraja abawaikum minal Jannati yanzi'u 'anhumaa libaasahumaa liyuriyahumaa saw aatihimaaa; innahoo yaraakum huwa wa qabeeluhoo min haisu laa tarawnahum; innaa ja'alnash Shayaateena awliyaaa'a lillazeena laa yu'minoon

ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் தாய் தந்தையை (அவர்கள் இன்பமுடன் வசித்து வந்த) சோலையிலிருந்து வெளியேற்றி (துன்பத்திற்குள்ளாக்கி)யது போல உங்களையும் துன்பத்திற்குள்ளாக்கி விட வேண்டாம். அவர்களுடைய மானத்தை அவர்களுக்குக் காண்பிப்பதற்காக அவன் அவர்களுடைய ஆடையைக் களைந்து விட்டான். நிச்சயமாக அவனும் அவனுடைய இனத்தாரும் நீங்கள் அவர்களைக் காணமுடியாதவாறு (மறைவாக இருந்துகொண்டு) உங்களை (வழி கெடுக்க சமயம்) பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். நிச்சயமாக நம்பிக்கை கொள்ளாதவர்களுக்குத்தான் அந்த ஷைத்தான்களை நாம் நண்பர்களாக்கி இருக்கிறோம்.

Tafseer

وَإِذَا فَعَلُوا۟
அவர்கள் செய்தால்
فَٰحِشَةً
ஒரு மானக்கேடானதை
قَالُوا۟
கூறுகின்றனர்
وَجَدْنَا
கண்டோம்
عَلَيْهَآ
இதன் மீது
ءَابَآءَنَا
எங்கள் மூதாதைகளை
وَٱللَّهُ
அல்லாஹ்வும்
أَمَرَنَا
ஏவினான்/எங்களுக்கு
بِهَاۗ قُلْ
இதை/கூறுவீராக
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَا يَأْمُرُ
ஏவ மாட்டான்
بِٱلْفَحْشَآءِۖ
மானக்கேடானதை
أَتَقُولُونَ
கூறுகிறீர்களா?
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
مَا
எவற்றை
لَا تَعْلَمُونَ
அறியமாட்டீர்கள்

Wa izaa fa'aloo faahishatan qaaloo wajadnaa 'alaihaaa aabaaa'ana wallaahu amaranaa bihaa; qul innal laaha laa yaamuru bilfahshaaa'i a-taqooloona 'alal laahi mmaa laa ta'lamoon

(நம்பிக்கை கொள்ளாத) அவர்கள் யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்(யும்போது, அதனைக் கண்ட எவரும் அவர்களைக் கண்டித்)தால், அவர்கள் "எங்கள் முன்னோர்களும் இவ்வாறு செய்யவே நாங்கள் கண்டோம். அன்றி இவ்வாறு (செய்யும்படியாகவே) அல்லாஹ்வும் எங்களுக்குக் கட்டளை யிட்டிருக்கின்றான்" என்று கூறுகின்றனர். (அதற்கு நபியே! அவர்களை நோக்கி) "நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான காரியங்களைச் செய்யும்படி ஏவவே மாட்டான். அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றை(ப் பொய்யாக)க் கூறலாமா?" என்று கூறுங்கள்.

Tafseer

قُلْ
கூறுவீராக
أَمَرَ
ஏவினான்
رَبِّى
என் இறைவன்
بِٱلْقِسْطِۖ
நீதத்தை
وَأَقِيمُوا۟
இன்னும் நிலைநிறுத்துங்கள்
وُجُوهَكُمْ
உங்கள் முகங்களை
عِندَ كُلِّ
இடம்/எல்லாம்
مَسْجِدٍ
மஸ்ஜிது
وَٱدْعُوهُ
அழையுங்கள்/அவனை
مُخْلِصِينَ لَهُ
தூய்மைப்படுத்தியவர்களாக/அவனுக்கு
ٱلدِّينَۚ
வழிபடுவதை
كَمَا بَدَأَكُمْ
போன்று/ஆரம்பமாக படைத்தான்/உங்களை
تَعُودُونَ
திரும்புவீர்கள்

Qul amara Rabbee bilqisti wa aqeemoo wujoohakum 'inda kulli masjidin wad'oohu mukhliseena lahud deen; kamaa bada akum ta'oodoon

அன்றி, "என் இறைவன் நீதத்தையே கட்டளை யிட்டிருக்கின்றான். ஒவ்வொரு தொழுகையின்போதும் (மனதில்) அவனையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள். நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிப்பட்டு, கலப்பற்ற மனதோடு அவனிடமே நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் உங்களை (இல்லாமையில் இருந்து) வெளியாக்கியது போல (இறந்த பின்னரும் உயிர்ப்பிக்கப்பட்டு அவனிடமே) நீங்கள் மீளுவீர்கள்" என்றும் கூறுங்கள்.

Tafseer

فَرِيقًا
ஒரு பிரிவை
هَدَىٰ
நேர்வழிப்படுத்தினான்
وَفَرِيقًا
இன்னும் ஒரு பிரிவு
حَقَّ
உறுதியாகி விட்டது
عَلَيْهِمُ
அதன் மீது
ٱلضَّلَٰلَةُۗ
வழிகேடு
إِنَّهُمُ
நிச்சயமாக அவர்கள்
ٱتَّخَذُوا۟
எடுத்துக் கொண்டனர்
ٱلشَّيَٰطِينَ
ஷைத்தான்களை
أَوْلِيَآءَ
தோழர்களாக
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
وَيَحْسَبُونَ
இன்னும் எண்ணுகின்றனர்
أَنَّهُم
நிச்சயமாக தாங்கள்
مُّهْتَدُونَ
நேர்வழி பெற்றவர்கள்

Fareeqan hadaa wa fareeqan haqqa 'alaihimud dalaalah; innahumut takhazush Shayaateena awliyaaa'a min doonil laahi wa yahsaboona annnahum muhtadoon

(உங்களில்) சிலரை அவன் நேரான வழியில் செலுத்தியிருக்க மற்றோர் மீது வழிகேடே விதிக்கப்பட்டதன் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி ஷைத்தான்களையே தங்கள் தோழர்களாக எடுத்துக் கொண்டதுடன் தாங்கள் நிச்சயமாக நேரான வழியில் இருப்பதாகவும் எண்ணிக் கொண்டதுதான்.

Tafseer