Skip to main content
bismillah

لَآ أُقْسِمُ
சத்தியம் செய்கிறேன்!
بِيَوْمِ
நாளின் மீது
ٱلْقِيَٰمَةِ
மறுமை

Laaa uqsimu bi yawmil qiyaamah

மறுமை நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

Tafseer

وَلَآ أُقْسِمُ
இன்னும் சத்தியம் செய்கிறேன் !
بِٱلنَّفْسِ
ஆன்மாவின் மீது
ٱللَّوَّامَةِ
பழிக்கின்ற

Wa laaa uqsimu bin nafsil lawwaamah

(குற்றம் செய்தவனை) நிந்திக்கும் அவனுடைய மனசாட்சியின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.

Tafseer

أَيَحْسَبُ
எண்ணுகின்றானா
ٱلْإِنسَٰنُ
மனிதன்
أَلَّن نَّجْمَعَ
அறவே ஒன்று சேர்க்க மாட்டோம் என்று
عِظَامَهُۥ
அவனுடைய எலும்புகளை

Ayahsabul insaanu al lan najm'a 'izaamah

(இறந்து உக்கி மண்ணாய்ப் போன) அவனுடைய எலும்புகளை, நாம் ஒன்று சேர்க்கமாட்டோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கின்றானா?

Tafseer

بَلَىٰ
ஏன் முடியாது!
قَٰدِرِينَ
ஆற்றலுடையவர்கள்
عَلَىٰٓ أَن
நாம் சரியாக அமைப்பதற்கு
بَنَانَهُۥ
அவனுடைய விரல் நுனிகளை

Balaa qaadireena 'alaaa an nusawwiya banaanah

அன்று! அவனுடைய (சரீர) அமைப்பை (இறந்த பின்னரும் முன்னிருந்தபடி) சரிப்படுத்த நாம் ஆற்றலுடையோம்.

Tafseer

بَلْ
மாறாக
يُرِيدُ
நாடுகின்றான்
ٱلْإِنسَٰنُ
மனிதன்
لِيَفْجُرَ
பாவம் செய்வதற்கே
أَمَامَهُۥ
தனது வருங்காலத்திலும்

Bal yureedul insaanu liyafjura amaamah

எனினும், மனிதன் இறைவன் முன்பாகவே குற்றம் செய்யக் கருதி, (பரிகாசமாக)

Tafseer

يَسْـَٔلُ
கேட்கிறான்
أَيَّانَ
எப்போது வரும்
يَوْمُ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாள்

Yas'alu ayyyaana yawmul qiyaamah

"மறுமை நாள் எப்பொழுது வரும்" என்று கேட்கின்றான்.

Tafseer

فَإِذَا بَرِقَ
திகைத்துவிட்டால்
ٱلْبَصَرُ
பார்வை

Fa izaa bariqal basar

அது (வரும்) சமயம் பார்வை தட்டழிந்து,

Tafseer

وَخَسَفَ
இன்னும் ஒளி இழந்து விட்டால்
ٱلْقَمَرُ
சந்திரன்

We khasafal qamar

சந்திரனின் பிரகாசம் மங்கி,

Tafseer

وَجُمِعَ
இன்னும் ஒன்று சேர்க்கப்பட்டால்
ٱلشَّمْسُ
சூரியனும்
وَٱلْقَمَرُ
சந்திரனும்

Wa jumi'ash shamusu wal qamar

(அதுநாள் வரை பிரிந்திருந்த) சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.

Tafseer

يَقُولُ
கூறுவான்
ٱلْإِنسَٰنُ
மனிதன்
يَوْمَئِذٍ
அந்நாளில்
أَيْنَ
எங்கே?
ٱلْمَفَرُّ
தப்பிக்குமிடம்

Yaqoolul insaanu yaw ma 'izin aynal mafarr

அந்நாளில் (தப்பித்துக்கொள்ள) "எங்கு ஓடுவது" என்று மனிதன் கேட்பான்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் கியாமா
القرآن الكريم:القيامة
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Qiyamah
ஸூரா:75
வசனம்:40
Total Words:199
Total Characters:652
Number of Rukūʿs:2
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:31
Starting from verse:5551