Skip to main content

قَالُوا۟
கூறினார்கள்
يَٰشُعَيْبُ
ஷுஐபே
مَا نَفْقَهُ
நாம் விளங்கவில்லை
كَثِيرًا
பலவற்றை
مِّمَّا تَقُولُ
நீர் கூறுவதில்
وَإِنَّا
நிச்சயமாக நாம்
لَنَرَىٰكَ
உம்மை காண்கிறோம்
فِينَا
எங்களில்
ضَعِيفًاۖ
பலவீனராக
وَلَوْلَا
இல்லாவிடில்
رَهْطُكَ
உம் இனத்தார்
لَرَجَمْنَٰكَۖ
கல் எறிந்தே கொன்றிருப்போம்/உம்மை
وَمَآ أَنتَ
இல்லை/நீர்/நம்மிடம்
بِعَزِيزٍ
மதிப்புடையவராக

Qaaloo yaa Shu'aibu maa nafqahu kaseeram mimmaa taqoolu wa innaa lanaraaka feenaa da'eefanw wa law laa rahtuka larajamnaaka wa maaa anta 'alainaa bi'azeez

அதற்கவர்கள் "ஷுஐபே! நீங்கள் கூறுபவற்றில் பெரும்பாலானவற்றை நாம் விளங்கிக்கொள்ள (முடிய)வில்லை. நிச்சயமாக நாம் உங்களை எங்களில் பலவீனமானவராகவே காண்கிறோம். உங்களுடைய இனத்தார் இல்லாவிடில் உங்களைக் கல் எறிந்தே கொன்றிருப்போம். நீங்கள் நம்மைவிட மதிப்புடைய வரல்ல" என்றார்கள்.

Tafseer

قَالَ
கூறினார்
يَٰقَوْمِ
என் மக்களே
أَرَهْطِىٓ
என் இனத்தாரா?
أَعَزُّ
அதிகம் மதிப்புடையவர்(கள்)
عَلَيْكُم
உங்களிடம்
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வை விட
وَٱتَّخَذْتُمُوهُ
நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள்/அவனை
وَرَآءَكُمْ
பின்னால் உங்களுக்கு
ظِهْرِيًّاۖ
எறியப்பட்டவனாக
إِنَّ
நிச்சயமாக
رَبِّى
என் இறைவன்
بِمَا
எவற்றை
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
مُحِيطٌ
சூழ்ந்திருப்பவன்

Qaala yaa qawmi arahteee a'azzu 'alaikum minal laahi wattakhaztumoohu waraaa'akum zihriyyan inna Rabbee bimaa ta'maloona muheet

அதற்கவர் "என்னுடைய மக்களே! அல்லாஹ்வைவிட என்னுடைய இனத்தாரா உங்களுக்கு மிக்க மதிப்புடையவர்களாகி விட்டனர்? நீங்கள் இறைவனை உங்கள் முதுகுப்புறம் தள்ளி விட்டீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் செயலைச் சூழ்ந்துகொண்டு இருக்கிறான்" என்று கூறினார்.

Tafseer

وَيَٰقَوْمِ
என் மக்களே
ٱعْمَلُوا۟
நீங்கள் செயல்படுங்கள்
عَلَىٰ مَكَانَتِكُمْ
உங்கள் தகுதிக்கு ஏற்ப
إِنِّى
நிச்சயமாக நான்
عَٰمِلٌۖ
செயல்படுகிறேன்
سَوْفَ تَعْلَمُونَ
அறிவீர்கள்
مَن
யாருக்கு?
يَأْتِيهِ
அவருக்கு வரும்
عَذَابٌ
ஒரு வேதனை
يُخْزِيهِ
இழிவுபடுத்தும்/தன்னை
وَمَنْ
இன்னும் யார்?
هُوَ
அவர்
كَٰذِبٌۖ
பொய்யர்
وَٱرْتَقِبُوٓا۟
எதிர் பார்த்திருங்கள்
إِنِّى
நிச்சயமாக நான்
مَعَكُمْ
உங்களுடன்
رَقِيبٌ
எதிர்பார்ப்பவன்

Wa yaa qawmi' maloo 'alaa makaanatikum innee 'aamilun sawfa ta'lamoona mai yaateehi 'azaabuny yukhzeehi wa man huwa kaazib; wartaqibooo innnee ma'akum raqeeb

அன்றி, "என்னுடைய மக்களே! நீங்கள் உங்கள் போக்கில் (உங்கள் காரியத்தைச்) செய்து கொண்டிருங்கள், நானும் (என் போக்கில் என் காரியத்தைச்) செய்து கொண்டிருக்கிறேன். இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடையும்? பொய் சொல்பவர் யார்? என்பதை நீங்கள் அதிசீக்கிரத்தில் அறிந்துகொள்வீர்கள். (அந்நேரத்தை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நானும் உங்களுடன் (அதனை) எதிர்பார்த்திருக்கிறேன்" (என்றும் கூறினார்).

Tafseer

وَلَمَّا جَآءَ
வந்த போது
أَمْرُنَا
நம் கட்டளை
نَجَّيْنَا
பாதுகாத்தோம்
شُعَيْبًا
ஷுஐபை
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
مَعَهُۥ
அவருடன்
بِرَحْمَةٍ
அருளைக் கொண்டு
مِّنَّا
நமது
وَأَخَذَتِ
இன்னும் பிடித்தது
ٱلَّذِينَ
எவர்களை
ظَلَمُوا۟
அநியாயம்செய்தார்கள்
ٱلصَّيْحَةُ فَأَصْبَحُوا۟
சப்தம்/காலையில் ஆகிவிட்டனர்
فِى دِيَٰرِهِمْ
தங்கள் இல்லங்களில்
جَٰثِمِينَ
இறந்தவர்களாக

Wa lammaa jaaa'a amrunaa najjainaa shu'aibanw wal lazeena aamanoo ma'ahoo birahmatim minnaa wa akhazatil lazeena zalamus saihatu fa asbahoo fee diyaarihim jaasimeen

(பின்னர் அவர்களிடம்) நம்முடைய வேதனை வந்த பொழுது ஷுஐபையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் அருளைக் கொண்டு நாம் பாதுகாத்துக் கொண்டோம். அநியாயம் செய்தவர்களை விடியற்காலை நேரத்தில் இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே (இறந்து) கிடந்தனர்.

Tafseer

كَأَن لَّمْ
அவர்கள் வசிக்காததைப் போல்
فِيهَآۗ
அதில்
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
بُعْدًا
அழிவு
لِّمَدْيَنَ
மத்யனுக்கு
كَمَا بَعِدَتْ
அழிந்தது போன்று
ثَمُودُ
ஸமூத்

Ka-al-lam yaghnaw feehaaa; alaa bu'dal li Madyana Kamaa ba'idat Samood

அதில் அவர்கள் ஒரு காலத்திலும் வசித்திருக்காதவர்களைப் போல் (யாதொரு அடையாளமுமின்றி) அழிந்துவிட்டனர். "ஸமூத்" (மக்)கள் மீது சாபம் ஏற்பட்டபடியே இந்த "மத்யன்" (மக்)கள் மீதும் சாபம் ஏற்பட்டுவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
أَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
مُوسَىٰ
மூஸாவை
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களுடன்
وَسُلْطَٰنٍ
இன்னும் அத்தாட்சி
مُّبِينٍ
தெளிவான(து)

Wa laqad arsalnaa Moosaa bi Aayaatinaa wa sultaanim mubeen

அன்றி, நம் வசனங்களுடனும் தெளிவான அத்தாட்சி யுடனும் மூஸாவை நம்முடைய தூதராக (ஃபிர்அவ்னிடமும் அவனுடைய மக்களிடமும்) நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம்.

Tafseer

إِلَىٰ فِرْعَوْنَ
ஃபிர்அவ்னிடம்
وَمَلَإِي۟هِۦ
இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்கள்
فَٱتَّبَعُوٓا۟
அவர்கள் பின்பற்றினர்
أَمْرَ
கட்டளையை
فِرْعَوْنَۖ
ஃபிர்அவ்னின்
وَمَآ أَمْرُ
இல்லை/கட்டளை
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுடைய
بِرَشِيدٍ
நல்லறிவுடையதாக

Ilaa Fir'awna wa mala'ihee fattaba'ooo amra Fir'awna wa maaa amru Fir'awna birasheed

(ஆகவே, அவர்) ஃபிர்அவ்னிடமும் அவனுடைய கூட்டத்தாரிடமும் (சென்றார்.) ஃபிர்அவ்னுடைய கட்டளையை (அவனுடைய கூட்டத்தினர்) பின்பற்றிக் கொண்டிருந்தனர். ஃபிர்அவ்னுடைய கட்டளையோ நேரான வழியில் இருக்கவில்லை.

Tafseer

يَقْدُمُ
முன் செல்வான்
قَوْمَهُۥ
தன் மக்களுக்கு
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
فَأَوْرَدَهُمُ
சேர்ப்பான்/அவர்களை
ٱلنَّارَۖ
நரகத்தில்
وَبِئْسَ
அது கெட்டது
ٱلْوِرْدُ
சேருமிடம்
ٱلْمَوْرُودُ
சேரப்படும்

Yaqdumu qawmahoo Yawmal Qiyaamati fa awrada humun Naara wa bi'sal wirdul mawrood

மறுமை நாளில் அவன் தன் மக்களுக்கு முன் (வழிகாட்டியாகச்) சென்று அவர்களை நரகத்தில் சேர்ப்பான். அவர்கள் செல்லுமிடம் மிகக் கெட்டது.

Tafseer

وَأُتْبِعُوا۟
இன்னும் அவர்களை தொடர்ந்தது
فِى هَٰذِهِۦ
இதில்
لَعْنَةً
சாபம்
وَيَوْمَ ٱلْقِيَٰمَةِۚ
இன்னும் மறுமை நாளில்
بِئْسَ
மிகக் கெட்டது
ٱلرِّفْدُ
சன்மானம்
ٱلْمَرْفُودُ
சன்மானம் கொடுக்கப்பட்டது

Wa utbi'oo fee haazihee la'natanw wa Yawmal Qiyaamah; bi'sar rifdul marfood

இம்மையிலும் மறுமையிலும் சாபம் அவர்களைப் பின்தொடர்கிறது. அவர்களுக்குக் கிடைக்கும் சன்மானம் மிகக் கெட்டது.

Tafseer

ذَٰلِكَ
இவை
مِنْ أَنۢبَآءِ
சரித்திரங்களில்
ٱلْقُرَىٰ
ஊர்கள்
نَقُصُّهُۥ
விவரிக்கிறோம்/ இவற்றை
عَلَيْكَۖ
உம்மீது
مِنْهَا
இவற்றில்
قَآئِمٌ
நிற்கிறது
وَحَصِيدٌ
இன்னும் அறுக்கப்பட்டது

Zaalika min ambaaa'il quraa naqussuhoo 'alaika minhaa qaaa'imunw wa haseed

(மேலே கூறிய) இவை சில ஊர்(வாசி)களின் சரித்திரங் களாகும். இவற்றை நாம் உங்களுக்குக் கூறினோம். இவற்றில் சில (இப்போதும்) இருக்கின்றன; சில அழிந்துவிட்டன.

Tafseer