Skip to main content

إِلَّآ إِبْلِيسَ
இப்லீஸைத் தவிர
أَبَىٰٓ
மறுத்து விட்டான்
أَن يَكُونَ
ஆகுவதற்கு/உடன்
ٱلسَّٰجِدِينَ
சிரம் பணிந்தவர்கள்

Illaaa ibleesa abaaa ai yakoona ma'as saajideen

இப்லீஸைத் தவிர; (அவன்) சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து சிரம் பணியாது விலகிக் கொண்டான்.

Tafseer

قَالَ
கூறினான்
يَٰٓإِبْلِيسُ
இப்லீஸே!
مَا لَكَ
உனக்கென்ன நேர்ந்தது?
أَلَّا تَكُونَ
நீ ஆகாதிருக்க
مَعَ
உடன்
ٱلسَّٰجِدِينَ
சிரம் பணிந்தவர்கள்

Qaala yaaa Ibleesu maa laka allaa takoona ma'as saajideen

(அதற்கு உங்கள் இறைவன் இப்லீஸை நோக்கி) "இப்லீஸை! சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து நீயும் சிரம் பணியாத காரணமென்ன?" என்று கேட்டான்.

Tafseer

قَالَ
கூறினான்
لَمْ أَكُن
நான் இல்லை
لِّأَسْجُدَ
சிரம் பணிபவனாக
لِبَشَرٍ
ஒரு மனிதனுக்கு
خَلَقْتَهُۥ
படைத்தாய்/அவனை
مِن
இருந்து
صَلْصَٰلٍ
‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடியது
مِّنْ
இருந்து
حَمَإٍ
களிமண்
مَّسْنُونٍ
பிசுபிசுப்பானது

Qaala lam akul li asjuda libasharin khalaqtahoo min salsaalim min hama im masnoon

அதற்கவன் "(காய்ந்தால்) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் நீ படைத்த மனிதனுக்கு (நெருப்பால் படைக்கப்பட்ட) நான் சிரம் பணிவதற்கில்லை; (ஏனென்றால், நான் அவரைவிட மேலானவன்)" என்று கூறினான்.

Tafseer

قَالَ فَٱخْرُجْ
கூறினான்/வெளியேறு
مِنْهَا
இதிலிருந்து
فَإِنَّكَ
நிச்சயமாக நீ
رَجِيمٌ
விரட்டப்பட்டவன்

Qaala fakhruj minhaa fa innaka rajeem

அதற்கு இறைவன் "நீ இங்கிருந்து அப்புறப்பட்டுவிடு. நிச்சயமாக நீ (எம் சந்நிதியிலிருந்து) விரட்டப்பட்டு விட்டாய்" என்று கூறினான்.

Tafseer

وَإِنَّ
இன்னும் நிச்சயமாக
عَلَيْكَ
உம்மீது
ٱللَّعْنَةَ
சாபம்
إِلَىٰ يَوْمِ
கூலி நாள் வரை

Wa inna 'alikal la'nata ilaa Yawmid Deen

அன்றி "விசாரணை நாள் (வரும்) வரையில் உன்மீது நிச்சயமாக என்னுடைய சாபமும் (கோபமும்) உண்டாவதாக!" (என்றும் கூறினான்.)

Tafseer

قَالَ
கூறினான்
رَبِّ
என் இறைவா
فَأَنظِرْنِىٓ
அவகாசமளி எனக்கு
إِلَىٰ
வரை
يَوْمِ
நாள்
يُبْعَثُونَ
எழுப்பப்படுவார்கள்

Qaala Rabbi fa anzirneee ilaa Yawmi yub'asoon

அதற்கவன் "என் இறைவனே! (இறந்தவர்கள்) உயிர் பெற்றெழும்பும் நாள் (வரும்) வரையில் நீ எனக்கு அவகாசமளி" என்று கேட்டான்.

Tafseer

قَالَ
கூறினான்
فَإِنَّكَ
நிச்சயமாக நீ
مِنَ ٱلْمُنظَرِينَ
அவகாசமளிக்கப்பட்டவர்களில்

Qaala fa innaka minal munzareen

அதற்கு (இறைவன்) "நிச்சயமாக (அவ்வாறே) குறிப்பிட்ட அந்நாள் வரையிலும் உனக்கு அவகாசமளிக்கப்பட்டது" என்றான்.

Tafseer

إِلَىٰ
வரை
يَوْمِ
நாள்
ٱلْوَقْتِ
நேரத்தின்
ٱلْمَعْلُومِ
குறிப்பிடப்பட்டது

Ilaa Yawmil waqtil ma'loom

அதற்கு (இறைவன்) "நிச்சயமாக (அவ்வாறே) குறிப்பிட்ட அந்நாள் வரையிலும் உனக்கு அவகாசமளிக்கப்பட்டது" என்றான்.

Tafseer

قَالَ
கூறினான்
رَبِّ
என் இறைவா
بِمَآ أَغْوَيْتَنِى
நீ வழி கெடுத்ததன் காரணமாக/என்னை
لَأُزَيِّنَنَّ
நிச்சயமாக அலங்கரிப்பேன்
لَهُمْ
அவர்களுக்கு
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَلَأُغْوِيَنَّهُمْ
இன்னும் நிச்சயமாக வழிகெடுப்பேன்/அவர்களை
أَجْمَعِينَ
அனைவரையும்

Qaala Rabbi bimaaa aghwaitanee la uzayyinaana lahum fil ardi wa la ughwiyan nahum ajma'een

அதற்கவன் "என் இறைவனே! நீ என் வழியைத் தடுத்துக் கொண்டதன் காரணமாக பூமியிலுள்ள (பொருள்களை) நான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்.

Tafseer

إِلَّا
தவிர
عِبَادَكَ
உன் அடியார்களை
مِنْهُمُ
அவர்களில்
ٱلْمُخْلَصِينَ
பரிசுத்தமானவர்கள்

Illaa 'ibaadaka minhumul mukhlaseen

எனினும், அவர்களில் கலப்பற்ற (பரிசுத்த) உள்ளத்தை உடைய உன் (நல்) அடியார்களைத் தவிர; (அவர்களை வழி கெடுக்க என்னால் முடியாது)" என்று கூறினான்.

Tafseer