Skip to main content

قَالُوا۟
அவர்கள் கூறினர்
لَن نَّبْرَحَ
நாங்கள் நீடித்திருப்போம்
عَلَيْهِ
இதை
عَٰكِفِينَ
வணங்கியவர்களாகவே
حَتَّىٰ يَرْجِعَ
திரும்புகின்ற வரை
إِلَيْنَا
எங்களிடம்
مُوسَىٰ
மூஸா

Qaaloo lan nabraha 'alaihi 'aakifeena hattaa yarji'a ilainaa Moosaa

அதற்கவர்கள் "மூஸா நம்மிடம் திரும்ப வரும் வரையில் இதன் ஆராதனையை நாங்கள் விடமாட்டோம்" என்று கூறி விட்டார்கள்.

Tafseer

قَالَ
கூறினார்
يَٰهَٰرُونُ
ஹாரூனே
مَا
எது
مَنَعَكَ
உம்மை தடுத்தது
إِذْ رَأَيْتَهُمْ
நீர் அவர்களைப் பார்த்தபோது
ضَلُّوٓا۟
அவர்கள் வழிதவறி விட்டார்கள்

Qaala Yaa Haaroonu maa mana 'aka iz ra aitahum dallooo

(மூஸா அவர்களிடம் வந்த பின் ஹாரூனை நோக்கி) "ஹாரூனே! இவர்கள் வழிகெட்டே போனார்கள் என்று நீங்கள் அறிந்த சமயத்தில் (என்னை நீங்கள் பின்பற்றி நடக்க) உங்களைத் தடை செய்தது எது?

Tafseer

أَلَّا تَتَّبِعَنِۖ
நீர் என்னைப் பின்பற்றி நடந்திருக்க வேண்டாமா
أَفَعَصَيْتَ
மாறு செய்துவிட்டீரா
أَمْرِى
எனது கட்டளைக்கு

Allaa tattabi'ani afa'asaita amree

நீங்கள் என்னைப் பின்பற்றி நடந்திருக்க வேண்டாமா? நீங்கள் என்னுடைய கட்டளைக்கு மாறு செய்யவே கருதினீரா?" (என்று கூறி அவருடைய தாடியையும் தலை முடியையும் பிடித்து இழுத்தார்.)

Tafseer

قَالَ
அவர் கூறினார்
يَبْنَؤُمَّ
என் தாயின் மகனே
لَا تَأْخُذْ
பிடிக்காதே
بِلِحْيَتِى
எனது தாடியையும்
وَلَا بِرَأْسِىٓۖ
என் தலையையும்
إِنِّى خَشِيتُ
நிச்சயமாக நான் பயந்தேன்
أَن تَقُولَ
நீர் கூறிவிடுவதை
فَرَّقْتَ
பிரித்து விட்டாய்
بَيْنَ
மத்தியில்
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களுக்கு
وَلَمْ تَرْقُبْ
நீர் கவனிக்காமல்
قَوْلِى
என் கூற்றை

Qaala yabna'umma laa taakhuz bilihyatee wa laa biraasee innee khashetu an taqoola farraqta baina Baneee Israaa'eela wa lam tarqub qawlee

அதற்கவர் "என் தாய் மகனே! என் தலையையும் தாடியையும் பிடி(த்திழு)க்காதீர்கள். (நான் அச்சமயமே அவர்களை விட்டு விலகி இருந்தால்) "இஸ்ராயீலின் சந்ததிகளுக்கிடையில் நீங்கள் பிரிவினையை ஏற்படுத்தி விட்டீர்கள். நீங்கள் என்னுடைய வார்த்தைகளை கவனிக்கவில்லை என்று நீங்கள் என்னைக் கடுகடுப்பீரென்று நிச்சயமாக நான் பயந்(தே அவர்களுடன் இருந்)தேன்" என்று கூறினார்.

Tafseer

قَالَ
கூறினார்
فَمَا خَطْبُكَ
உன் விஷயம் என்ன
يَٰسَٰمِرِىُّ
ஸாமிரியே

Qaala famaa khatbuka yaa Saamiriyy

(பின்னர் மூஸா ஸாமிரீயை நோக்கி) "ஸாமிரீயே! உன் விஷயமென்ன? (ஏன் இவ்வாறு செய்தாய்?)" என்று கேட்டார்.

Tafseer

قَالَ
அவன் கூறினான்
بَصُرْتُ
நான் பார்த்தேன்
بِمَا لَمْ
எதை/அவர்கள் பார்க்கவில்லை
بِهِۦ
அதை
فَقَبَضْتُ
ஆகவே, எடுத்தேன்
قَبْضَةً
ஒரு பிடி
مِّنْ أَثَرِ
காலடி சுவடிலிருந்து
ٱلرَّسُولِ
தூதரின்
فَنَبَذْتُهَا
இன்னும் அதை எறிந்தேன்
وَكَذَٰلِكَ
இப்படித்தான்
سَوَّلَتْ
அலங்கரித்தது
لِى
எனக்கு
نَفْسِى
என் மனம்

Qaala basurtu bimaa lam yabsuroo bihee faqabadtu qabdatam min asarir Rasooli fanabaztuhaa wa kazaalika sawwalat lee nafsee

அதற்கவன் "அவர்கள் பார்க்காததொன்றை நான் பார்த்தேன். தூதர் காலடி மண்ணில் ஒரு பிடியை எடுத்து (பசுவின்) சிலையில் எறிந்தேன். (அது சப்தமிட்டது) இவ்வாறு (செய்யும் படியாக) என் மனமே என்னைத் தூண்டியது" என்று கூறினான்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
فَٱذْهَبْ
நீ சென்று விடு
فَإِنَّ لَكَ
நிச்சயமாக உனக்கு
فِى ٱلْحَيَوٰةِ
இவ்வாழ்க்கையில்
أَن تَقُولَ
என்று சொல்வதுதான்
لَا مِسَاسَۖ
தொடாதீர்
وَإِنَّ لَكَ
இன்னும் உமக்கு உண்டு
مَوْعِدًا
ஒரு குறிப்பிட்ட நேரம்
لَّن تُخْلَفَهُۥۖ
அதை நீ தவறவிடமாட்டாய்
وَٱنظُرْ
இன்னும் பார்
إِلَىٰٓ إِلَٰهِكَ
உனது தெய்வத்தை
ٱلَّذِى ظَلْتَ
எது/இருந்தாய்
عَلَيْهِ
அதனை
عَاكِفًاۖ
வணங்கியவனாக
لَّنُحَرِّقَنَّهُۥ
நிச்சயமாக நாம் அதை எறிந்து விடுவோம்
ثُمَّ
பிறகு
لَنَنسِفَنَّهُۥ
அதை பரப்பிவிடுவோம்
فِى ٱلْيَمِّ
கடலில்
نَسْفًا
பரப்பப்பட்டதாக

Qaala fazhab fa inna laka fil hayaati an taqoola laa misaasa wa inna laka maw'idal lan tukhlafahoo wanzur ilaaa ilaahikal lazee zalta 'alaihi 'aakifaa; lanuharriqannnahoo summa lanansifanahoo fil yammi nasfaa

அதற்கு மூஸா (அவனை நோக்கி "இங்கிருந்து) அப்புறப்பட்டுவிடு. நிச்சயமாக நீ (எவரைக் கண்டபோதிலும்) "என்னைத் தீண்டாதீர்கள்" என்று கூறித் திரிவதுதான் இவ்வுலகத்தில் உனக்குரிய தண்டனை. (மறுமையிலோ) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட கொடிய வேதனையுண்டு. நீ அதிலிருந்து தப்பவே மாட்டாய். இதோ! நீ ஆராதனை செய்து கொண்டிருந்த தெய்வத்தைப் பார். நிச்சயமாக நான் அதனை உருக்கி(ப் பஸ்பமாக்கிச்) கடலில் தூற்றி விடுவேன்" என்றும்,

Tafseer

إِنَّمَآ إِلَٰهُكُمُ
நிச்சயமாக உங்கள் (வணக்கத்திற்குரிய) இறைவன்
ٱللَّهُ
அல்லாஹ்தான்
ٱلَّذِى
அவன்
لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
إِلَّا
தவிர
هُوَۚ
அவனை
وَسِعَ
அவன் விசாலமாகி இருக்கின்றான்
كُلَّ شَىْءٍ
எல்லாவற்றையும்
عِلْمًا
அறிவால்

Innamaaa ilaahukkumul laahul lazee laa ilaaha illaa Hoo; wasi'a kulla shai'in ilmaa

உங்கள் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறொருவனுமில்லை. அவன் அனைத்தையும் அறியக்கூடிய விசாலமான கல்வி ஞானமுடையவன்" என்றும் கூறினார்.

Tafseer

كَذَٰلِكَ
இவ்வாறு
نَقُصُّ
நாம் விவரிக்கிறோம்
عَلَيْكَ
உமக்கு
مِنْ أَنۢبَآءِ
செய்திகளை
مَا قَدْ
முன் சென்றுவிட்டவர்களின்
وَقَدْ
திட்டமாக
ءَاتَيْنَٰكَ
உமக்கு கொடுத்தோம்
مِن لَّدُنَّا
நம் புறத்திலிருந்து
ذِكْرًا
ஒரு நல்லுரையை

Kazaalika naqussu 'alaika min ambaaa'i maa qad sabaq; wa qad aatainaaka mil ladunnaa Zikraa

(நபியே!) இவ்வாறே உங்களுக்கு முன்னர் சென்று போனவர்களின் சரித்திரத்தை(ப் பின்னும்) நாம் உங்களுக்குக் கூறுவோம். நம்மிடமிருந்து நல்லுபதேசத்தை (உடைய இவ்வேதத்தை) நிச்சயமாக நாம்தான் உங்களுக்கு அளித்தோம்.

Tafseer

مَّنْ
யார்
أَعْرَضَ
புறக்கணித்தாரோ
عَنْهُ
அதை
فَإِنَّهُۥ
நிச்சயமாக அவர்
يَحْمِلُ
அவர் சுமப்பார்
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
وِزْرًا
பாவத்தை

Man a'rada 'anhu, fa innahoo yahmilu Yawmal Qiyaamati wizraa

எவன் இதனை (நம்பிக்கை கொள்ளாமல்) புறக்கணிக் லிகின்றானோ அவன் மறுமை நாளில் நிச்சயமாக(ப் பெரியதொரு) பாவத்தையே சுமப்பான்.

Tafseer