Skip to main content

قَالَ
அவன் கூறினான்
فَمَا بَالُ
நிலை என்னவாகும்
ٱلْقُرُونِ
தலைமுறையினர்கள்
ٱلْأُولَىٰ
முந்திய

Qaala famaa baalul quroonil oolaa

அதற்கவன் "முன்னர் சென்றுபோன (சிலை வணக்கம் செய்து கொண்டிருந்த)வர்களின் கதி என்னாகும்?" என்று கேட்டான்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
عِلْمُهَا
அவர்களைப் பற்றிய ஞானம்
عِندَ رَبِّى
என் இறைவனிடம்
فِى كِتَٰبٍۖ
பதிவுப் புத்தகத்தில்
لَّا يَضِلُّ
தவறு செய்துவிட மாட்டான்
رَبِّى
என் இறைவன்
وَلَا يَنسَى
இன்னும் மறக்கமாட்டான்

Qaala 'ilmuhaa 'inda Rabee fee kitaab, laa yadillu Rabbee wa laa yansaa

அதற்கவர் கூறினார்: "அதைப்பற்றிய ஞானம் என் இறைவனிடமிருக்கும் பதிவுப்புத்தகத்தில் இருக்கின்றது. அவன் (அவர்கள் செய்துகொண்டு இருந்ததில் யாதொன்றையும்) தவற விட்டுவிடவும் மாட்டான்; மறந்துவிடவும் மாட்டான்.

Tafseer

ٱلَّذِى جَعَلَ
எவன்/ஆக்கினான்
لَكُمُ
உங்களுக்கு
ٱلْأَرْضَ
பூமியை
مَهْدًا
விரிப்பாக
وَسَلَكَ
இன்னும் ஏற்படுத்தினான்
لَكُمْ
உங்களுக்கு
فِيهَا
அதில்
سُبُلًا
பாதைகளை
وَأَنزَلَ
இன்னும் இறக்கினான்
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
مَآءً
மழையை
فَأَخْرَجْنَا
உற்பத்தி செய்கிறோம்
بِهِۦٓ
அதன்மூலம்
أَزْوَٰجًا
பல வகைகளை
مِّن نَّبَاتٍ
தாவரங்களிலிருந்து
شَتَّىٰ
பலதரப்பட்ட

Allazee ja'ala lakumul arda mahdanw wa salaka lakum feehaa subulanw wa anzala minas samaaa'i maaa'an fa akhrajnaa biheee azwaajam min nabaatin shatta

அவன்தான் பூமியை உங்களுக்கு இருப்பிடமாக அமைத்து (நீங்கள் செல்லக்கூடிய) வழிகளையும் அதில் ஏற்படுத்தி மேகத்தில் இருந்து மழையையும் பொழியச் செய்கிறான்." (மேலும் என் இறைவன் கூறுகிறான்:) "நாம் இறக்கி வைக்கும் (ஒரே வித) மழை நீரைக் கொண்டு (குணத்திலும், ரசனையிலும்) பற்பல விதமான புற்பூண்டுகளை (ஆண், பெண்) ஜோடி ஜோடிகளாக நாம் வெளிப் படுத்துகின்றோம்.

Tafseer

كُلُوا۟
சாப்பிடுங்கள்
وَٱرْعَوْا۟
இன்னும் மேய்த்துக் கொள்ளுங்கள்
أَنْعَٰمَكُمْۗ
உங்கள் கால் நடைகளை
إِنَّ
நிச்சயம்
فِى ذَٰلِكَ
இதில்
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
لِّأُو۟لِى ٱلنُّهَىٰ
அறிவுடையவர்களுக்கு

Kuloo war'aw an'aamakum; inna fee zaalika la Aayaatil li ulin nuhaa

(ஆகவே, அவைகளை) நீங்களும் புசியுங்கள்; உங்கள் (ஆடு மாடு போன்ற) கால்நடைகளையும் மேயவிடுங்கள். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Tafseer

مِنْهَا
அதிலிருந்துதான்
خَلَقْنَٰكُمْ
உங்களைப் படைத்தோம்
وَفِيهَا
இன்னும் அதில்தான்
نُعِيدُكُمْ
மீட்டுக் கொண்டுவருவோம் உங்களை
وَمِنْهَا
இன்னும் அதிலிருந்துதான்
نُخْرِجُكُمْ
வெளியேற்றுவோம்
تَارَةً
முறை
أُخْرَىٰ
மற்றொரு

Minhaa khalaqnaakum wa feehaa nu'eedukum wa minhaa nukhrijukum taaratan ukhraa

பூமியிலிருந்தே நாம் உங்களைப் படைத்தோம். பின்னர், அதிலேயே நாம் உங்களைச் சேர்த்துவிடுவோம். மற்றொரு தடவையும் (உங்களுக்கு உயிர் கொடுத்து) அதிலிருந்தே நாம் உங்களை வெளிப்படுத்துவோம்." (இவ்வாறு ஃபிர்அவ்னிடம் மூஸா கூறினார்.)

Tafseer

وَلَقَدْ أَرَيْنَٰهُ
திட்டமாக அவனுக்கு நாம் காண்பித்தோம்
ءَايَٰتِنَا
நமது அத்தாட்சிகள்
كُلَّهَا
அனைத்தும்
فَكَذَّبَ
எனினும் அவன் பொய்ப்பித்தான்
وَأَبَىٰ
இன்னும் ஏற்க மறுத்தான்

Wa laqad arainaahu Aayaatinaa kullahaa fakaz zaba wa abaa

நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் அவனுக்குக் காண்பித்தோம். எனினும், அவனோ (இவை யாவும்) பொய்யெனக் கூறி (நம்பிக்கை கொள்ளாது) விலகிக்கொண்டான்.

Tafseer

قَالَ
அவன் கூறினான்
أَجِئْتَنَا
எங்களிடம் வந்தீரா?
لِتُخْرِجَنَا
எங்களை நீர் வெளியேற்றுவதற்காக
مِنْ أَرْضِنَا
எங்கள் பூமியிலிருந்து
بِسِحْرِكَ
உமது சூனியத்தால்
يَٰمُوسَىٰ
மூஸாவே!

Qaala aji'tanaa litukhri janaa min ardinaa bisihrika yaa Moosa

(அன்றி) "மூஸாவே! நீங்கள் உங்களுடைய சூனியத்தின் மூலம் எங்களை, எங்களின் ஊரைவிட்டு வெளியேற்றவா எங்களிடம் வந்தீர்கள்?

Tafseer

فَلَنَأْتِيَنَّكَ
நிச்சயமாக உம்மிடம் கொண்டு வருவோம்
بِسِحْرٍ
ஒரு சூனியத்தை
مِّثْلِهِۦ
அதுபோன்ற
فَٱجْعَلْ
ஆகவே, ஏற்படுத்து
بَيْنَنَا
எங்களுக்கு மத்தியிலும்
وَبَيْنَكَ
உங்களுக்கு மத்தியிலும்
مَوْعِدًا
குறிப்பிட்ட நேரத்தை
لَّا نُخْلِفُهُۥ
அதற்கு மாறுசெய்ய மாட்டோம்
نَحْنُ
நாமும்
وَلَآ أَنتَ
நீயும் (அதற்கு மாறுசெய்யக் கூடாது)
مَكَانًا
ஓர் இடத்தில்
سُوًى
சமமான

Falanaatiyannaka bisihrim mislihee faj'al bainanaa wa bainaka maw'idal laa nukhlifuhoo nahnu wa laaa anta makaanan suwaa

இதைப்போன்ற சூனியத்தை நாங்களும் உங்களுக்குச் செய்து காண்பிப்போம். நாங்களோ அல்லது நீங்களோ தவறிவிடாது இருக்கக் கூடியவாறு ஒரு சமமான பூமியில் செய்து காண்பிக்க எங்களுக்கும் உங்களுக்குமிடையில் ஒரு தவணையைக் குறிப்பிடுங்கள்" என்று கூறினான்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
مَوْعِدُكُمْ
வாக்களிக்கப் பட்ட நேரம் உங்களுக்கு
يَوْمُ ٱلزِّينَةِ
யவ்முஸ் ஸீனா
وَأَن يُحْشَرَ
இன்னும் ஒன்றுதிரட்டப்படுவது
ٱلنَّاسُ
மக்கள்
ضُحًى
முற்பகலில்

Qaala maw'idukum yawmuz zeenati wa ai yuhsharan naasu duhaa

அதற்கு மூஸா "உங்கள் பண்டிகை நாளே உங்களுக்குத் தவணையாகும். ஆனால், மக்கள் அனைவரும் முற்பகலிலேயே கூடிவிடவேண்டும்" என்று கூறினார்.

Tafseer

فَتَوَلَّىٰ
திரும்பிச் சென்றான்
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
فَجَمَعَ
ஒன்றிணைத்தான்
كَيْدَهُۥ
தனது சூழ்ச்சியை
ثُمَّ
பிறகு
أَتَىٰ
வந்தான்

Fatawallaa Fir'awnu fajjama'a kaidahoo summa ataa

பின்னர், ஃபிர்அவ்ன் அவரைவிட்டு விலகி (தன் இருப்பிடம் சென்று சூனியத்திற்குரிய) தன்னுடைய எல்லா சூழ்ச்சிகளையும் சேகரித்துக் கொண்டு பின்பு (குறித்த நாளில், குறித்த இடத்திற்கு) வந்தான்.

Tafseer