Mal'ooneena ainamaa suqifoo ukhizoo wa quttiloo taqteelaa
அவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர். ஆகவே, அவர்கள் எங்கு காணப்பட்டபோதிலும் (சிறை) பிடிக்கப்பட்டும், வெட்டி அழிக்கப்பட்டும் விடுவார்கள்.
Sunnatal laahi fil lazeena khalaw min qablu wa lan tajida lisunnatil laahi tabdeelaa
அல்லாஹ் ஏற்படுத்திய வழி இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுதான். ஆகவே, (நபியே!) நீங்கள் அல்லாஹ்வுடைய வழியில் யாதொரு மாறுதலையும் காண மாட்டீர்கள்.
Yas'alukan naasu 'anis Saa'ati qul innamaa 'ilmuhaa 'indal laah; wa maa yudreeka la'allas Saa'ata takoonu qareebaa
(நபியே!) இறுதிநாளைப் பற்றி (அது எப்பொழுது வரும்? என) மனிதர்கள் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "(அது எப்பொழுது வருமென்ற) அதன் ஞானம் அல்லாஹ்விடம் (மட்டும்) தான் இருக்கிறது. நீங்கள் அறிவீர்களா? அது சமீபத்திலும் வந்துவிடக்கூடும்."
Innal laaha la'anal kaafireena wa a'adda lahum sa'eeraa
மெய்யாகவே அல்லாஹ் நிராகரிப்பவர்களைச் சபித்து, கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கின்றான்.
Khaalideena feehaaa abadaa, laa yajidoona waliyyanw wa laa naseeraa
அவர்கள் என்றென்றும் அதில்தான் தங்கிவிடுவார்கள். (அவர்களை) பாதுகாத்துக் கொள்பவர்களையும் (அவர்களுக்கு) உதவி செய்பவர்களையும் அங்கு அவர்கள் காணமாட்டார்கள்.
Yawma tuqallabu wujoohuhum fin Naari yaqooloona yaa laitanaaa ata'nal laaha wa ata'nar Rasoolaa
நரகத்தில் அவர்களுடைய முகங்களை புரட்டிப் புரட்டிப் பொசுக்கும் நாளில் "எங்களுடைய கேடே! நாங்கள் அல்லாஹ் வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டிருக்க வேண்டாமா?" என்று கதறுவார்கள்.
Wa qaaloo Rabbanaaa innaaa ata'naa saadatanaa wa kubaraaa'anaa fa adalloonas sabeelaa
அன்றி "எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம். நாங்கள் தப்பான வழியில் செல்லும்படி அவர்கள் செய்து விட்டார்கள்.
Rabbanaaa aatihim di'fai ni minal 'azaabi wal'anhum la nan kabeera
(ஆகவே) எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைக் கொடுத்து, அவர்கள் மீது பெரிய சாபத்தைப் போடு" என்று கூறுவார்கள்.
yaa aiyuhal lazeena aamanoo las takoonoo kalla zeena aazaw Moosaa fa barra ahul laahu mimmmaa qaaloo; wa kaana 'indal laahi wajeehaa
நம்பிக்கையாளர்களே! மூஸாவை(ப் பற்றி பொய்யாக அவதூறு கூறி அவரை)த் துன்புறுத்திய மக்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். அவர்கள் கூறிய அவதூற்றிலிருந்து மூஸாவை அல்லாஹ் பரிசுத்தமாக்கி விட்டான். அவர் அல்லாஹ்விடத்தில் மிக்க கண்ணியமானவராகவே இருந்தார்.
Yaaa aiyuhal lazeena aamanut taqul laaha wa qooloo qawlan sadeedaa
(ஆகவே,) நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள்.