Yaa qawmid khulul Ardal MMuqaddasatal latee katabal laahu lakum wa laa tartaddoo 'alaaa adbaarikum fatanqaliboo khaasireen
(தவிர, அவர்) "என் சமூகத்தாரே! அல்லாஹ் உங்களுக்கென விதித்த பரிசுத்தமான பூமியில் (இருக்கும் உங்கள் எதிரியுடன் போர் புரிந்து அதில்) நுழையுங்கள். (அவர்களுக்கு) நீங்கள் புறங்காட்டித் திரும்பாதீர்கள். (புறம் காட்டினால்) நீங்கள் நஷ்டமடைந்தவர் களாகவே திரும்புவீர்கள்" (என்றும் கூறினார்.)
Qaaloo yaa Moosaaa innaa feehaa qwman jabbaareena wa innaa lan nadkhulahaa hattaa yakhrujoo minhaa fa innaa daakhiloon
(அதற்கு) அவர்கள் (மூஸாவை நோக்கி) "மூஸாவே! நிச்சயமாக அதில் மிக பலசாலிகளான மக்கள் இருக்கின்றனர். அவர்கள், அதைவிட்டு வெளியேறும் வரையில் நாங்கள் அதனுள் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிட்டால் நாங்கள் தவறாமல் நுழைந்துவிடுவோம்" என்றனர்.
Qaala rajulaani minal lazeena yakhaafoona an'amal laahu 'alaihimad khuloo 'alaihimul baab, fa izaa dakhaltumoohu fa innakum ghaaliboon; wa 'alal laahi fatawakkalooo in kuntum mu'mineen
(இவ்வாறு) பயந்தவர்களில் (ஜோஷுவ, காலெப் என்ற) இருவர்மீது அல்லாஹ் அருள்புரிந்திருந்தான். அவர்கள் (மற்றவர்களை நோக்கி) "நீங்கள் (அவர்கள் பலத்தைப்பற்றி பயப்படவேண்டாம்.) அவர்களை எதிர்த்து (அந்நகரத்தின்) வாயில் வரையில் சென்று விடுங்கள். அதில் நீங்கள் நுழைந்த மாத்திரத்தில் நிச்சயமாக நீங்கள் வெற்றி பெற்று விடுவீர்கள். நீங்கள் (உண்மை) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வையே நம்புங்கள்" என்று கூறினார்கள்.
Qaaloo yaa Moosaaa innaa lan nadkhulahaa abadam maa daamoo feehaa fazhab anta wa Rabbuka faqaatilaaa innaa haahunaa qaa'idoon
(இதன் பிறகும் அவர்கள் மூஸாவை நோக்கி) "மூஸாவே! அவர்கள் அதிலிருக்கும் வரையில் ஒருக்காலும் நாங்கள் அதில் செல்லவே மாட்டோம். நீங்களும், உங்களுடைய இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்" என்று கூறினார்கள்.
Qaala Rabbi innee laaa amliku illaa nafsee wa akhee fafruq bainanaa wa bainal qawmil faasiqeen
(அதற்கு மூஸா) "என் இறைவனே! நிச்சயமாக என் மீதும், என் சகோதரர் மீதும் தவிர, (மற்ற எவர் மீதும்) எனக்கு அதிகாரம் இல்லை. ஆகவே, பாவிகளாகிய இந்த மக்களிலிருந்து நீ எங்களைப் பிரித்து விடுவாயாக!" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
Qaala fa innahaa muhar ramatun 'alaihim arba'eena sanah; yateehoona fil ard; falaa taasa 'alal qawmil faasiqeen
(அதற்கு இறைவன், அவ்வாறாயின் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட) "அந்த இடம் நாற்பது வருடங்கள் வரையில் அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது. (அதுவரையில்) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள். ஆகவே, இந்தப் பாவிகளான மக்களைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்!" என்று (மூஸாவுக்குக்) கூறினான்.
Watlu 'alaihim naba abnai Aadama bilhaqq; iz qarrabaa qurbaanan fatuqubbila min ahadihimaa wa lam yutaqabbal minal aakhari qaala la aqtulannnaka qaala innamaa yataqabbalul laahu minal muttaqeen
(நபியே!) ஆதமுடைய (ஹாபீல், காபீல் என்னும்) இரு மகன்களின் உண்மைச் செய்திகளை நீங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பியுங்கள். இருவரும் "குர்பானி" (பலி) கொடுத்தபோது, அவ்விருவரில் ஒருத்தருடைய (குர்பானி அ)து ஏற்றுக் கொள்ளப் பட்டது. மற்றவருடையது ஏற்கப்படவில்லை. ஆதலால் "நிச்சயம் நான் உன்னைக் கொன்று விடுவேன்" என்றார். உடனே (குர்பானி ஏற்றுக்கொள்ளப்பட்ட நல்லவர்) "அல்லாஹ் ஏற்றுக் கொள்வ தெல்லாம் இறை அச்சமுள்ளவர்(களின் பலி)களைத்தான்" என்று பதில் கூறினார்.
La'im basatta ilaiya yadaka litaqtulanee maaa ana bibaasitiny yadiya ilaika li aqtulaka inneee akhaaful laaha Rabbal 'aalameen
(அன்றி) "நீ என்னை வெட்டுவதற்காக உன் கையை என்னளவில் நீட்டினா(ல், அந்நேரத்தி)லும் நான் உன்னை வெட்டு வதற்காக என்னுடைய கையை உன்னளவில் நீட்டவே மாட்டேன். ஏனென்றால், நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பாதுகாப்பவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்.
Inee ureedu an tabooo'a bi ismee wa ismika fatakoona min Ashaabin Naar; wa zaalika jazaaa'uz zaalimeen
"என்னுடைய பாவச் சுமையையும், உன்னுடைய பாவச் சுமையுடன் நீ சுமந்துகொண்டு (இறைவனிடம்) வருவதையே நான் விரும்புகிறேன். அவ்வாறு நீ வந்தால் நரகவாசியாகி விடுவாய்; இதுதான் அநியாயக்காரர்களுக்குரிய கூலியாகும்" (என்று கூறினார்.)
Fatawwa'at lahoo nafsu hoo qatla akheehi faqatalahoo fa asbaha minal khaasireen
(இதன் பின்னரும்) அவர் தன் சகோதரரை வெட்டி விடும்படியாக அவருடைய மனம் அவரைத் தூண்டவே, அவர் அவரை வெட்டிவிட்டார். அதனால் அவர் நஷ்டமடைந்தவரானார்.