Skip to main content

وَكَيْفَ
எவ்வாறு
أَخَافُ
பயப்படுவேன்
مَآ
எதை
أَشْرَكْتُمْ
இணைவைத்தீர்கள்
وَلَا تَخَافُونَ
நீங்கள் பயப்படுவதில்லை
أَنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
أَشْرَكْتُم
இணைவைத்தீர்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வுக்கு
مَا لَمْ
எதை/அவன் இறக்கவில்லை
بِهِۦ
அதற்கு
عَلَيْكُمْ
உங்கள் மீது
سُلْطَٰنًاۚ
ஓர் ஆதாரத்தை
فَأَىُّ
ஆகவே யார்?
ٱلْفَرِيقَيْنِ
இரு பிரிவினரில்
أَحَقُّ
மிகத்தகுதியுடையவர்
بِٱلْأَمْنِۖ
பாதுகாப்புப்பெற
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
تَعْلَمُونَ
அறிகிறீர்கள்

Wa kaifa akhaafu maaa ashraktum wa laa takhaafoona annakum ashraktum billaahi maa lam yunazzil bihee 'alaikum sultaanaa; fa aiyul fareeqaini ahaqqu bil amni in kuntum ta'lamoon

உங்களுக்கு யாதொரு அத்தாட்சியுமில்லாமல் நீங்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்திருப்பதைப் பற்றி ஒரு சிறிதும் நீங்கள் பயப்படாதிருக்க, நீங்கள் இணைவைத்தவைகளுக்கு நான் எவ்வாறு பயப்படுவேன். அச்சமற்றிருக்க நம்மிரு பிரிவினரில் மிகத் தகுதியுடையவர்கள் யார்? என்பதை நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (கூறுங்கள்.)

Tafseer

ٱلَّذِينَ ءَامَنُوا۟
எவர்கள்/நம்பிக்கை கொண்டனர்
وَلَمْ يَلْبِسُوٓا۟
அவர்கள் கலக்கவில்லை
إِيمَٰنَهُم
தங்கள் நம்பிக்கையில்
بِظُلْمٍ
அநியாயத்தை
أُو۟لَٰٓئِكَ لَهُمُ
அவர்களுக்கே
ٱلْأَمْنُ
பாதுகாப்பு உண்டு
وَهُم
அவர்கள்
مُّهْتَدُونَ
நேர்வழி பெற்றவர்கள்

Allazeena aamanoo wa lam yalbisooo eemaanahum bizulmin ulaaa'ika lahumul amnu wa hum muhtadoon

எவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் நம்பிக்கையுடன் (இணை வைத்தல் என்னும்) யாதொரு அநியாயத்தையும் கலந்துவிடவில்லையோ அவர்களுக்கே நிச்சயமாக பாதுகாப்பு உண்டு. அவர்கள்தான் நேரான வழியிலும் இருக்கின்றனர்" (என்று கூறினார்.)

Tafseer

وَتِلْكَ
இவை
حُجَّتُنَآ
நம் சான்று
ءَاتَيْنَٰهَآ
கொடுத்தோம்/அவற்றை
إِبْرَٰهِيمَ
இப்றாஹீமுக்கு
عَلَىٰ
எதிராக
قَوْمِهِۦۚ
அவருடைய சமுதாயம்
نَرْفَعُ
உயர்த்துகிறோம்
دَرَجَٰتٍ
பதவிகளால்
مَّن
எவரை
نَّشَآءُۗ
நாடுகிறோம்
إِنَّ
நிச்சயமாக
رَبَّكَ
உம் இறைவன்
حَكِيمٌ
ஞானவான்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Wa tilka hujjatunaaa aatainaahaaa Ibraaheema 'alaa qawmih; narfa'u darajaatim man nashaaa'; inna Rabbaka Hakeemun 'Aleem

(மேற்கூறப்பட்ட) இவை நம்முடைய உறுதிமிக்க ஆதாரங்களாகும். இப்ராஹீம் தன் மக்களைத் (தர்க்கத்தில்) வெல்வதற்காக, நாம் இவைகளை அவருக்குக் (கற்றுக்) கொடுத்தோம். நாம் விரும்பியவர்களின் பதவியை நாம் எவ்வளவோ உயர்த்தி விடுகின்றோம். (நபியே!) நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக ஞானமுடையவனாகவும், மிகுந்த அறிவுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَوَهَبْنَا
இன்னும் வழங்கினோம்
لَهُۥٓ
அவருக்கு
إِسْحَٰقَ
இஸ்ஹாக்கை
وَيَعْقُوبَۚ
இன்னும் யஃகூபை
كُلًّا
எல்லோரையும்
هَدَيْنَاۚ
நேர்வழி செலுத்தினோம்
وَنُوحًا
இன்னும் நூஹை
هَدَيْنَا
நேர்வழி செலுத்தினோம்
مِن قَبْلُۖ
இதற்கு முன்னர்
وَمِن
இன்னும் இருந்து
ذُرِّيَّتِهِۦ
அவருடைய சந்ததி
دَاوُۥدَ
தாவூதை
وَسُلَيْمَٰنَ
இன்னும் ஸுலைமானை
وَأَيُّوبَ
இன்னும் அய்யூபை
وَيُوسُفَ
இன்னும் யூஸýஃபை
وَمُوسَىٰ
இன்னும் மூஸாவை
وَهَٰرُونَۚ
இன்னும் ஹறாரூனை
وَكَذَٰلِكَ
இவ்வாறே
نَجْزِى
கூலிகொடுக்கிறோம்
ٱلْمُحْسِنِينَ
நல்லறம்புரிவோருக்கு

Wa wahabnaa lahoo ishaaqa wa ya'qoob; kullan hadainaa; wa Noohan hadainaa min qablu wa min zurriyyatihee Daawooda wa Sulaimaana wa Ayyooba wa Yoosufa wa Moosaa wa haaroon; wa kazaalika najzil muhsineen

நாம் (இப்ராஹீமாகிய) அவருக்கு இஸ்ஹாக்கையும் (அவருடைய மகன்) யஃகூபையும் (சந்ததிகளாகத்) தந்தருள் புரிந்தோம். இவர்கள் அனைவரையும் நாம் நேரான வழியில் செலுத்தினோம். இதற்கு முன்னர் நூஹையும், அவருடைய சந்ததிகளாகிய தாவூத், ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நாம் நேரான வழியில் செலுத்தினோம். நன்மை செய்பவர்களுக்கு இவ்வாறே நாம் (நற்) கூலி அளிக்கின்றோம்.

Tafseer

وَزَكَرِيَّا
இன்னும் ஸகரிய்யாவை
وَيَحْيَىٰ
இன்னும் யஹ்யாவை
وَعِيسَىٰ
இன்னும் ஈஸாவை
وَإِلْيَاسَۖ
இன்னும் இல்யாûஸ
كُلٌّ
எல்லோரும்
مِّنَ ٱلصَّٰلِحِينَ
நல்லோரில்

Wa Zakariyyaa wa Yahyaa wa 'Eesaa wa Illyaasa kullum minas saaliheen

ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் (ஆகியோரையும் நேரான வழியில் செலுத்தினோம்.) இவர்கள் அனைவரும் நன்னடத்தை உடையவர்கள்.

Tafseer

وَإِسْمَٰعِيلَ
இன்னும் இஸ்மாயீலை
وَٱلْيَسَعَ
இன்னும் அல்யஸஉவை
وَيُونُسَ
இன்னும் யூனுஸ்
وَلُوطًاۚ
இன்னும் லூத்தை
وَكُلًّا
எல்லோரையும்
فَضَّلْنَا
மேன்மைப்படுத்தினோம்
عَلَى ٱلْعَٰلَمِينَ
அகிலத்தாரை விட

Wa Ismaa'eela wal Yasa'a wa Yoonusa wa Lootaa; wa kullan faddalnaa 'alal 'aalameen

இஸ்மாயீல், அல்யஸவு (எலிஸை,) யூனுஸ், லூத் (இவர்களையும் நேரான வழியில் செலுத்தினோம்.) இவர்கள் அனைவரையும் உலகத்திலுள்ள அனைவரின் மீதும் மேன்மையாக்கியும் வைத்தோம்.

Tafseer

وَمِنْ ءَابَآئِهِمْ
இன்னும் இவர்களுடைய மூதாதைகளிலும்
وَذُرِّيَّٰتِهِمْ
இன்னும் இவர்களுடைய சந்ததிகளிலும்
وَإِخْوَٰنِهِمْۖ
இன்னும் இவர்களுடைய சகோதரர்களிலும்
وَٱجْتَبَيْنَٰهُمْ
இன்னும் அவர்களை தேர்ந்தெடுத்தோம்
وَهَدَيْنَٰهُمْ
இன்னும் அவர்களுக்கு நேர்வழி காட்டினோம்
إِلَىٰ
பக்கம்
صِرَٰطٍ مُّسْتَقِيمٍ
நேரான பாதை

Wa min aabaaa'ihim wa zurriyyaatihim wa ikhwaanihim wajtabainaahum wa hadainaahum ilaa Siraatim Mustaqeem

இவர்களுடைய மூதாதைகளிலும், இவர்களுடைய சந்ததிகளிலும், இவர்களுடைய சகோதரர்களிலும் (பலரை) மேன்மையாக்கி வைத்ததுடன் இவர்கள் அனைவரையும் தேர்ந்தெடுத்து நேரான வழியிலும் செலுத்தினோம்.

Tafseer

ذَٰلِكَ
இதுவே
هُدَى
நேர்வழி
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
يَهْدِى
நேர்வழி செலுத்துகிறான்
بِهِۦ
அதன் மூலம்
مَن يَشَآءُ
எவரை/நாடுகிறான்
مِنْ
அடியார்களில்
عِبَادِهِۦۚ
அடியார்களில் தன்
وَلَوْ أَشْرَكُوا۟
அவர்கள் இணைவைத்தால்
لَحَبِطَ
அழிந்து விடும்
عَنْهُم
அவர்களை விட்டு
مَّا
எவை
كَانُوا۟
இருந்தார்கள்
يَعْمَلُونَ
செய்கிறார்கள்

Zaalika hudal laahi yahdee bihee mai yashaaa'u min 'ibaadih; wa law ashrakoo lahabita 'anhum maa kaanoo ya'maloon

(இவர்கள் அனைவரும் சென்ற) இதுவே அல்லாஹ்வுடைய நேரான வழியாகும். தன் அடியார்களில் அவன் விரும்பியவர்களை அதில் செலுத்துகின்றான். அவர்கள் (இதனைத் தவிர்த்து அல்லாஹ்வுக்கு) இணைவைத்தாலோ அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்கள் அனைத்தும் அழிந்துவிடும்.

Tafseer

أُو۟لَٰٓئِكَ
ٱلَّذِينَ
இவர்கள்/எவர்கள்
ءَاتَيْنَٰهُمُ
கொடுத்தோம்/அவர்களுக்கு
ٱلْكِتَٰبَ
வேதத்தை
وَٱلْحُكْمَ
இன்னும் ஞானத்தை
وَٱلنُّبُوَّةَۚ
இன்னும் நபித்துவத்தை
فَإِن يَكْفُرْ
ஆகவே நிராகரித்தால்
بِهَا
அவற்றை
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
فَقَدْ وَكَّلْنَا
பொறுப்பாக்கி விடுவோம்
بِهَا
அவற்றுக்கு
قَوْمًا
ஒரு சமுதாயத்தை
لَّيْسُوا۟
அவர்கள் இல்லை
بِهَا
அவற்றை
بِكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களாக

Ulaaa'ikal lazeena aatainaahumul Kitaaba wal hukma wan Nubuwwah; fa iny yakfur bihaa haaa'ulaaa'i faqad wakkalnaa bihaa qawmal laisoo bihaa bikaafireen

இவர்களுக்குத்தான் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் நாம் கொடுத்திருந்தோம். ஆகவே, அவைகளை (மக்காவாசிகளாகிய) இவர்கள் நிராகரித்து விட்டால் (இவர்களுக்குப் பதிலாக) நிராகரிக்காத (உண்மை முஸ்லிம்களான) மக்களை நிச்சயமாக நாம் ஏற்படுத்தி விடுவோம்.

Tafseer

أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
ٱلَّذِينَ هَدَى
எவர்கள்/நேர்வழி செலுத்தினான்
ٱللَّهُۖ
அல்லாஹ்
فَبِهُدَىٰهُمُ
ஆகவே அவர்களுடைய நேர்வழியைக் கொண்டே
ٱقْتَدِهْۗ
பின்பற்றுவீராக/அதை
قُل
கூறுவீராக
لَّآ أَسْـَٔلُكُمْ
நான் கேட்க மாட்டேன்/உங்களிடம்
عَلَيْهِ
இதற்காக
أَجْرًاۖ
ஒரு கூலியை
إِنْ هُوَ
இல்லை/இது
إِلَّا ذِكْرَىٰ
தவிர/நல்லுபதேசம்
لِلْعَٰلَمِينَ
அகிலத்தார்களுக்கு

Ulaaa'ikal lazeena hadal laahu fabihudaahumuq tadih; qul laaa as'alukum 'alaihi ajran in huwa illaa zikraa lil 'aalameen

(நபியே!) இவர்கள் அனைவரையும் அல்லாஹ் நேரான வழியில் செலுத்தினான். ஆகவே, அவர்களுடைய நேரான வழியை நீங்களும் பின்பற்றுங்கள். மேலும் "இ(ந்தக் குர்ஆனை உங்களுக்கு அறிவிப்ப)தற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. உலகத்தார் அனைவருக்கும் இது ஒரு நல்லுபதேசமாகும்" என்று கூறுங்கள்.

Tafseer