Qaala haaza Siraatun 'alaiya Mustaqeem
அதற்கு (இறைவன்) கூறியதாவது: "அதுதான் என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழி."
Inna 'ibaadee laisa laka 'alaihim sultaanun illaa manittaba'aka minal ghaaween
(மனத்தூய்மையுடைய) என் அடியார்களிடத்தில் நிச்சயமாக உனக்கு யாதொரு செல்வாக்கும் இருக்காது. வழிகேட்டில் உன்னைப் பின்பற்றியவர்களைத் தவிர.
Wa inna jahannama lamaw'iduhum ajma'een
(உன்னைப் பின்பற்றிய) அனைவருக்கும் வாக்களிக்கப்பட்ட இடம் நிச்சயமாக நரகம்தான்.
Lahaa sab'atu abwaab; likulli baabim minhum juz'um maqsoom
அந்நரகத்திற்கு ஏழு வாசல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வாசலிலும் (செல்லக்கூடிய வகையில்) அவர்கள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விடுவார்கள்.
Innal muttaqeena fee Jannaatinw wa 'uyoon
நிச்சயமாக, இறை அச்சமுடையவர்களோ சுவனபதிகளிலும் (அதிலுள்ள) நீரருவிகளிலும் (உல்லாசமாக) இருப்பார்கள்.
Udkhuloohaa bisalaamin aamineen
(அவர்களை நோக்கி) நீங்கள் ஈடேற்றத்துடனும் அச்சமற்றவர்களாகவும் இதில் நுழையுங்கள்" (என்று கூறப்படும்).
Wa naza'naa ma fee sudoorihim min ghillin ikhwaanan 'alaa sururim mutaqaabileen
(ஒருவருக்கு ஒருவர் மீது இம்மையில்) அவர்களின் மனதில் இருந்த குரோதங்களை நாம் நீக்கிவிடுவோம். (அவர்களும்) மெய்யான சகோதரர்களாக ஒருவர் ஒருவரை முகம் நோக்கி கட்டில்களில் (உல்லாசமாகச் சாய்ந்து) இருப்பார்கள்.
Laa yamas suhum feehaa nasabunw wa maa hum minhaa bimukhrajeen
அதில் அவர்களை யாதொரு சிரமமும் அணுகாது. அதில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்.
Nabbi' 'ibaadeee annneee anal Ghafoorur Raheem
(நபியே!) நீங்கள் என்னுடைய அடியார்களுக்கு அறிவியுங்கள்: "நிச்சயமாக நான் மிக்க மன்னிக்கும் கிருபை உடையவன்.
Wa anna 'azaabee uwal 'azaabul aleem
(ஆயினும்) என்னுடைய வேதனையும் நிச்சயமாக மிக்க கொடியதே!"