Bal iyyaahu tad'oona fa yakshifu maa tad'oona ilaihi in shaaa'a wa tansawna maa tushrikoon
அவ்வாறன்று! நீங்கள் இணைவைத்தவைகளை எல்லாம் மறந்துவிட்டு அவனையே அழைப்பீர்கள். நீங்கள் எ(வ்வேதனையை நீக்குவ)தற்காக அவனை அழைப்பீர்களோ அதனை அவன் விரும்பினால் நீக்கியும் விடுவான்.
Wa laqad arsalnaaa ilaaa umamim min qablika fa akhaznaahum bilbaasaaa'i waddarraaa'i la'allahum yata darra'oon
(நபியே!) உங்களுக்கு முன்னிருந்த பல வகுப்பினருக்கும் நாம் (நம்முடைய தூதர்களை) நிச்சயமாக அனுப்பி வைத்தோம். (எனினும் அத்தூதர்களை அவர்கள் நிராகரித்துவிட்டனர். ஆகவே) அவர்கள் பணிந்து வருவதற்காக நோயைக் கொண்டும், வறுமையைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடித்தோம்.
Falaw laaa iz jaaa'ahum baasunaa tadarra'oo wa laakin qasat quloobuhum wa zaiyana lahumush Shaitaanu maa kaanoo ya'maloon
நம்முடைய வேதனை அவர்களிடம் வருவதற்குள் அவர்கள் பணிந்துவிட வேண்டாமா? ஆனால் அவர்களுடைய உள்ளங்கள் இறுகி விட்டன. அன்றி, அவர்கள் செய்து கொண்டிருந்ததையே ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டான்.
Falammaa nasoo maa zukkiroo bihee fatahnaa 'alaihim abwaaba kulli shai'in hattaaa izaa farihoo bimaaa ootooo akhaznaahum baghtatan fa izaa hum mmublisoon
அவர்களுக்குச் செய்யப்பட்ட நல்லுபதேசத்தை அவர்கள் மறந்துவிடவே (அவர்களைச் சோதிப்பதற்காக) ஒவ்வொரு பொரு(ள் செல்வங்க)ளின் வாயிலையும் நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம். (அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் தாராளமாக கிடைத்துக் கொண்டிருந்தன.) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவைகளைக் கொண்டு அவர்கள் ஆனந்தமடைந்து கொண்டிருந்த சமயத்தில் (நம் வேதனையைக் கொண்டு) நாம் அவர்களைத் திடீரென பிடித்துக் கொண்டோம் (தண்டித்தோம்). அந்நேரத்தில் அவர்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர்.
Faquti'a daabirul qawmil lazeena zalamoo; walhamdu lillaahi Rabbil 'aalameen
ஆகவே, அநியாயம் செய்து கொண்டிருந்த அந்த மக்களின் வேர் அறுபட்டு விட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனே உலகத்தாரின் இறைவன்.
Qul ara'aitum in akhazal laahu sam'akum wa absaarakum wa khatama 'alaa quloobikum man ilaahun ghairul laahi yaateekum bih; unzur kaifa nusarriful Aayaati summa hum yasdifoon
"அல்லாஹ், உங்களுடைய கேள்விப்புலனையும் பார்வைகளையும் எடுத்துவிட்டு உங்கள் உள்ளங்களின் மீது முத்திரை வைத்துவிட்டால், அல்லாஹ்வை அன்றி எந்த இறைவன் அவைகளை உங்களுக்குக் கொடுப்பான் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?" என்று (நபியே!) நீங்கள் (அவர்களைக்) கேளுங்கள். (நம்முடைய ஆற்றலுக்குரிய) அத்தாட்சிகளை எவ்வாறு (விதவிதமாக) விவரிக்கின்றோம் என்பதை நீங்கள் கவனியுங்கள். (இவ்வாறிருந்தும்) பின்னும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர்.
Qul ara'aitakum in ataakum 'azaabul laahi baghtatan aw jahratan hal yuhlaku illal qawmuz zaalimoon
(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கேளுங்கள்: "திடீரெனவோ அல்லது முன்னெச்சரிக்கையுடனோ அல்லாஹ் வுடைய வேதனை உங்களிடம் வந்து விட்டால் (என்னாகும் என்பதை) நீங்கள் சிந்தித்தீர்களா? (அந்நேரத்தில் இந்த) அநியாயக்கார மக்களைத் தவிர (மற்றெவரும்) அழிக்கப் படுவார்களா?"
Wa maa nursilul mursaleena illaa mubashshireena wa munzireena faman aamana wa aslaha falaa khawfun 'alaihim wa laa hum yahzanoon
(நன்மையைக் கொண்டு) நற்செய்தி கூறுபவர்களாகவும், (தீமையைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவுமே அன்றி (நம்முடைய) தூதர்களை நாம் அனுப்பவில்லை. ஆகவே, எவர்கள் (இந்நபியை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் கவலை கொள்ளவும் மாட்டார்கள்.
Wallazeena kazzaboo bi Aayaatinaa yamassuhumul 'azaabu bimaa kaanoo yafsuqoon
ஆனால் (உங்களில்) எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களை, அவர்களுடைய (இப்) பாவத்தின் காரணமாக வேதனை பிடித்துக்கொள்ளும்.
Qul laaa aqoolu lakum 'indee khazaaa'inul laahi wa laaa a'lamul ghaiba wa laaa aqoolu lakum innee malakun in attabi'u illaa maa yoohaaa ilaiy; qul hal yastawil a'maa walbaseer; afalaa tatafakkaroon
(நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கிறதென்று நான் உங்களுக்குக் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். உண்மையாகவே நான் ஒரு மலக்கு என்றும் நான் உங்களிடம் கூறவில்லை. எனினும், எனக்கு வஹீயின் மூலம் அறிவிக்கப் பட்டவைகளை அன்றி (வேறொன்றையும்) நான் பின்பற்றுவது இல்லை" என்று கூறி, "குருடனும், பார்வையுடையவனும் சமம் ஆவார்களா? (இவ்வளவு கூட) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?" என்றும் கேளுங்கள்.