Fa izaa jaaa'at humul hasanatu qaaloo lanaa haazihee wa in tusibhum saiyi'atuny yattaiyaroo bi Moosaa wa mam ma'ah; alaaa innamaa taaa'iruhum 'indal laahi wa laakinna aksarahum laa ya'lamoon
எனினும் அவர்களோ, அவர்களுக்கு (யாதொரு) நன்மை வரும் சமயத்தில் எங்களுக்கு (வரவேண்டியது) தான் வந்தது என்றும், யாதொரு தீங்கேற்படும் சமயத்தில் "(இது எங்களுக்கு வர வேண்டியதல்ல. எனினும் பீடை பிடித்த இந்த) மூஸாவாலும், அவருடைய மக்களாலுமே வந்தது" என்றும் கூறினார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட (இத்)துர்ப்பாக்கியம் அல்லாஹ்விடம் இருந்தே வந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்வதில்லை.
Wa qaaloo mahmaa taatinaa bihee min Aayatil litasharanaa bihaa famaa nahnu laka bimu'mineen
அன்றி, அவர்கள் (மூஸாவை நோக்கி) "நீங்கள் எங்களை வசப்படுத்துவதற்காக எவ்வளவோ (அற்புதமான) சூனியத்தை நீங்கள் எங்கள் முன் செய்தபோதிலும் நாங்கள் உங்களை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்" என்று கூறிவிட்டார்கள்.
Fa arsalnaa 'alaihimut toofaana waljaraada walqum mala waddafaadi'a waddama Aayaatim mufassalaatin fastakbaroo wa kaanoo qawmam mujrimeen
ஆகவே, அவர்கள் மீது (மழையுடன் கூடிய) புயல் காற்று, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் ஆகிய தெளிவான இவ்வத்தாட்சிகளை (ஒன்றன் பின் ஒன்றாக) நாம் அனுப்பி வைத்தோம். (இதன்) பின்னரும் அவர்கள் கர்வம்கொண்டு குற்றம் செய்யும் மக்களாகவே இருந்தார்கள்.
Wa lammaa waqa'a 'alaihimur rijzu qaaloo ya Moosad-u lanaa rabbaka bimaa 'ahida 'indaka la'in kashafta 'annar rijza lanu 'minanna laka wa lanursilanna ma'aka Banee Israaa'eel
அவர்கள் மீது (இவைகளில் யாதொரு) வேதனை வரும்போதெல்லாம் அவர்கள் (மூஸாவை நோக்கி) "மூஸாவே! உங்களுடைய இறைவன் (உங்கள் பிரார்த்தனையை அங்கீகரிப்பதாக) உங்களுக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி (இக்கஷ்டத்தை நீக்கும்படி) நமக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். நம்முடைய இக்கஷ்டத்தை நீங்கள் நீக்கினால் நிச்சயமாக நாங்கள் உங்களை நம்பிக்கை கொண்டு இஸ்ராயீலின் சந்ததிகளையும் நிச்சயமாக நாம் உங்களுடன் அனுப்பி விடுகின்றோம்" என்று கூறுவார்கள்.
Falammaa kashafnaa 'anhumur rijza ilaaa ajalin hum baalighoohu izaa hum yankusoon
நாம் அவர்களுடைய வேதனையை நீக்கியபோதெல்லாம் (அவர்கள் தங்கள் வாக்குறுதிக்கு மாறு செய்துகொண்டே வந்தார்கள்.) இவ்வாறு அவர்களுக்கு ஏற்பட்ட (இறுதி) தவணையை அவர்கள் அடையும் வரையில் (தொடர்ந்து) மாறு செய்தே வந்தனர்.
Fantaqamnaa minhum fa aghraqnaahum kazzaboo bi Aayaatinaa wa kaanoo 'anhaa ghaafileen
ஆகவே, அவர்கள் நம்முடைய அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாது (இவ்வாறு) அவைகளைப் பொய்யாக்கிக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழி வாங்கினோம்.
Wa awrasnal qawmal lazeena kaanoo yustad'afoona mashaariqal ardi wa maghaari bahal latee baaraknaa feehaa wa tammat kalimatu Rabbikal husnaa 'alaa Baneee Israaa'eela bimaa sabaroo wa dammarnaa maa kaana yasna'u Fir'awnu wa qawmuhoo wa maa kaanoo ya'rishoon
ஆகவே, எவர்களை இவர்கள் பலவீனமானவர்களென்று (கேவலமாக) எண்ணிக் கொண்டிருந்தார்களோ அந்த மக்களுக்கே மிக்க பாக்கியமுள்ள (அவர்களுடைய) பூமியின் கிழக்குப் பாகம், மேற்குப் பாகம் ஆகிய அனைத்தையும் சொந்தமாக்கிக் கொடுத்தோம். ஆகவே, இஸ்ராயீலின் சந்ததிகள் (ஃபிர்அவ்னால் ஏற்பட்ட கஷ்டங்களை) பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (அவர்களுக்கு) உங்கள் இறைவன் கொடுத்த வாக்கு மிக நல்லவிதமாகவே நிறைவேறிற்று. ஃபிர்அவ்னும் அவனுடைய மக்களும் கட்டியிருந்த மாட மாளிகைகளையும் (உற்பத்தி செய்திருந்த தோட்டம் துறவுகளையும்) நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.
Wa jaawaznaa bi Banneee Israaa'eelal bahra fa ataw 'alaa qawminy ya'kufoona 'alaaa asnaamil lahum; qaaloo yaa Moosaj'al lanaa ilaahan kamaa lahum aalihah; qaala innakum qawmun tajhaloon
நாம் இஸ்ராயீலின் சந்ததிகளை கடலைக் கடத்தி (அழைத்து)ச் சென்ற சமயம் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தினர் அருகில் அவர்கள் சென்றபொழுது, (அதனைக் கண்ணுற்ற அவர்கள் மூஸாவை நோக்கி) "மூஸாவே! அவர்கள் வைத்திருக்கும் சிலைகளைப் போல் எங்களுக்கும் ஒரு சிலையை (நாங்கள் வணங்குவதற்கு) ஆக்கி வையுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு (மூஸா அவர்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கின்றீர்கள்" என்று கூறினார்.
Innaa haaa'ulaaa'i mutabbarum maa hum feehi wa baatilum maa kaanoo ya'maloon
(அன்றி, சிலையை வணங்கும் மக்களைச் சுட்டிக் காண்பித்து) "நிச்சயமாக இந்த மக்களிருக்கும் மார்க்கம் அழிந்துவிடக் கூடியது. அவர்கள் செய்பவை அனைத்தும் வீணானவை. (அவர்களுக்கு யாதொரு பலனையும் அளிக்காது" என்றும் கூறினார்.)
Qaala a-ghairal laahi abgheekum ilaahanw wa Huwa faddalakum 'alal 'aalameen
(தவிர) "அல்லாஹ் அல்லாததையா நான் உங்களுக்கு இறைவனாக ஆக்கி வைப்பேன்? அவன்தான் உங்களை உலகத்தார் அனைவரையும் விட மேன்மையாக்கி வைத்தான்" என்றும் அவர் கூறினார்.