Wazkur fil Kitaabi Moosaaa; innahoo kaana mukhlasanw wa kaana Rasoolan Nabiyyaa
(நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் (சிறிது) கூறுங்கள்: நிச்சயமாக அவர் கலப்பற்ற மனதுடையவராகவும் (நம்முடைய) தூதராகவும் நபியாகவும் இருந்தார்.
Wa naadainaahu min jaanibit Tooril aimani wa qarrabnaahu najiyyaa
தூர் (ஸீனாய் என்னும் பாக்கியம் பெற்ற) மலையின் வலது பக்கத்தில் இருந்து அவரை நாம் அழைத்தோம். ரகசியம் பேசுகிறவராக அவரை (நமக்கு) நெருக்கமாக்கினோம்.
Wa wahabnaa lahoo mir rahmatinaaa akhaahu Haaroona Nabiyyaa
நம் கருணையைக் கொண்டு அவருடைய சகோதரர் ஹாரூனை நபியாக அவருக்கு அளித்தோம்.
Wazkur fil Kitaabi ismaa'eel; innahoo kaana saadiqal wa'di wa kaana Rasoolan Nabiyyaa
(நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுங்கள்: நிச்சயமாக அவர் உண்மையான வாக்குறுதி உடையவராகவும், (நம்முடைய) தூதராகவும் நபியாகவும் இருந்தார்.
Wa kaana yaamuru ahlahoo bis Salaati waz zakaati wa kaana 'inda Rabbihee mardiyyaa
அவர் தொழுகையைக் கடைப்பிடித்தொழுகும்படியும், ஜகாத்தும் கொடுத்து வரும்படியும் தன் குடும்பத்தினரை ஏவிக் கொண்டிருந்தார். அவர் தன் இறைவனால் மிகவும் விரும்பப் பட்டவராகவும் இருந்தார்.
Wazkur fil Kitaabi Idrees; innahoo kaana siddeeqan Nabiyyaa
(நபியே!) இத்ரீஸைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுங்கள்: நிச்சயமாக அவர் மிக்க சத்தியவானாகவும் (நம்முடைய) நபியாகவும் இருந்தார்.
Wa rafa'naahu makaanan 'aliyyaa
அவரை மிக்க மேலான இடத்திற்கு உயர்த்தி விட்டோம்.
Ulaaa'ikal lazeena an'amal laahu 'alaihim minan Nabiyyeena min zurriyyati Aadama wa mimman hamalnaa ma'a Noohinw wa min zurriyyati Ibraaheema wa Israaa'eela wa mimman hadainaa wajta bainaaa; izaa tutlaa 'alaihim Aayaatur Rahmaani kharroo sujjadanw wa bukiyyaa
(ஆகவே, மேற்கூறப்பட்ட) இவர்கள் அனைவரும் அல்லாஹ் அருள் புரிந்த நபிமார்களாவர். இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் நாம் (கப்பலில்) ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடைய சந்ததியிலும், இஸ்ராயீல் (என்னும் யஃகூப்) உடைய சந்ததியிலும் உள்ளவர்களாவர். அன்றி, நாம் தெரிந்தெடுத்து நேரான வழியில் நடத்தியவர்களிலும் உள்ளவர்கள். அவர்கள் மீது ரஹ்மானுடைய வசனங்கள் ஓதப்பட்டால் (அதற்குப் பயந்து) அழுதவர்களாக (இறைவனுக்குச்) சிரம் பணிந்து தொழுவார்கள்.
Fakhalafa mim ba'dihim khalfun adaa'us Salaata wattaba'ush shahawaati fasawfa yalqawna ghaiyaa
(இவர்களுக்குப் பின்னர், இவர்களுடைய சந்ததியில்) இவர்களுடைய இடத்தை அடைந்தவர்களோ சரீர இச்சைகளைப் பின்பற்றி தொழுகையை(த் தொழாது) வீணாக்கி விட்டவர்கள். அவர்கள் (மறுமையில்) தீமையையே சந்திப்பார்கள்.
Illaa man taaba wa aamana wa 'amila saalihan fa ulaaa'ika yadkhuloonal jannata wa laa yuzlamoona shai'aa
ஆயினும், அவர்களில் எவர்கள் (கைசேதப்பட்டு) பாவத்தில் இருந்து விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கிறார்களோ அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். அவர் களுக்கு(க் கொடுக்கப்படும் கூலியில்) ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது.