Iqtarabatis Saa'atu wsan shaqqal qamar
மறுமை நெருங்கிவிட்டது. (அதற்கு அத்தாட்சியாக) சந்திரனும் பிளந்து விட்டது.
Wa iny yaraw aayatany yu'ridoo wa yaqooloo sihrum mustamirr
எனினும், அவர்கள் எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் (அதனைப்) புறக்கணித்து "இது சகஜமான சூனியந்தான்" என்று கூறுகின்றனர்.
Wa kazzaboo wattaba'ooo ahwaaa'ahum; wa kullu amrim mustaqirr
அன்றி, அதனை பொய்யாக்கி தங்களது சரீர இச்சைகளையே பின்பற்றுகின்றனர். (அவர்கள் எதனை புறக்கணித்தாலும் வர வேண்டிய) ஒவ்வொரு விஷயமும் (அதனதன் நேரத்தில்) உறுதியாகி விடும்.
Wa laqad jaaa'ahum minal ambaaa'i maa feehi muzdajar
(இவர்களுக்குப்) போதுமான படிப்பினை தரக்கூடிய பல விஷயங்கள் (இதற்கு முன்னரும்) நிச்சயமாக அவர்களிடம் வந்தே இருக்கின்றன.
Hikmatum baalighatun famaa tughnin nuzur
(அவை அவர்களுக்கு) முழு ஞானம் அளிக்கக் கூடியவை தான். எனினும், (அவைகளைக் கொண்டு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்தது (இவர்களுக்கு) யாதொரு பயனும் அளிக்கவில்லை.
Fatawalla 'anhum; yawma yad'ud daa'i ilaa shai 'in nukur
ஆகவே, (நபியே!) நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுங்கள். இவர்கள் வெறுக்கும் (அந்தக் கேள்வி கணக்கு) விஷயத்திற்காக (இஸ்ராஃபீல் என்னும்) அழைப்பவர் அழைக்கும் நாளில்,
khushsha'an absaaruhum yakrujoona minal ajdaasi ka annahum jaraadum muntashir
(அந்நாளில்) இவர்கள் கீழ் நோக்கிய பார்வையுடன் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுப் பரவிக் கிடக்கும் வெட்டுக் கிளியைப்போல் அழைப்பவரிடம் விரைந்தோடி வருவார்கள்.
Muhti'eena ilad daa'i yaqoolul kafiroona haazaa yawmun 'asir
இது மிக கஷ்டமான நாள் என்றும் அந்நிராகரிப்பவர்கள் (அச்சமயம்) கூறுவார்கள்.
Kazzabat qablahum qawmu Noohin fakazzaboo 'abdanaa wa qaaloo majnoo nunw wazdujir
(இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்த நூஹுடைய மக்களும் (அந்த நாளைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்கள் (அதைப் பற்றி எச்சரிக்கை செய்த) நம்முடைய தூதராகிய அடியாரைப் பொய்யாக்கியதுடன், அவரைப் பைத்தியக்காரனென்று கூறி (துன்புறுத்துவதாகவும்) மிரட்டிக் கொண்டுமிருந்தார்கள்.
Fada'aa Rabbahooo annee maghloobun fantasir
ஆகவே, அவர் தன் இறைவனை நோக்கி "நிச்சயமாக நான் (இவர்களிடம்) தோற்றுவிட்டேன். நீ எனக்கு உதவி செய்!" என்று பிரார்த்தனை செய்தார்.
القرآن الكريم: | القمر |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | Al-Qamar |
ஸூரா: | 54 |
வசனம்: | 55 |
Total Words: | 342 |
Total Characters: | 1423 |
Number of Rukūʿs: | 3 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 37 |
Starting from verse: | 4846 |