Skip to main content
bismillah

هَلْ أَتَىٰ
வரவில்லையா
عَلَى ٱلْإِنسَٰنِ
மனிதனுக்கு
حِينٌ
ஒரு நேரம்
مِّنَ ٱلدَّهْرِ
காலத்தில் இருந்து
لَمْ يَكُن
அவன் இருக்கவில்லை
شَيْـًٔا
ஒரு பொருளாக
مَّذْكُورًا
நினைவு கூறப்படுகின்ற

Hal ataa 'alal insaani heenum minad dahri lam yakun shai'am mazkooraa

ஒவ்வொரு மனிதனுக்கும் (அவன் வெளிவருவதற்கு) முன்னர் ஒரு காலம் செல்லவில்லையா? அதில் அவன், இன்ன பொருள் என்றும் கூறுவதற்கில்லாத நிலைமையிலிருந்தான்.

Tafseer

إِنَّا
நிச்சயமாக நாம்
خَلَقْنَا
படைத்தோம்
ٱلْإِنسَٰنَ
மனிதனை
مِن نُّطْفَةٍ
விந்துத் துளியிலிருந்து
أَمْشَاجٍ
கலக்கப்பட்ட
نَّبْتَلِيهِ
அவனை நாம் சோதிக்கின்றோம்
فَجَعَلْنَٰهُ
ஆகவே, அவனை ஆக்கினோம்
سَمِيعًۢا
செவியுறுபவனாக
بَصِيرًا
பார்ப்பவனாக

Innaa khalaqnal insaana min nutfatin amshaajin nabta leehi faja'alnaahu samee'am baseeraa

(பின்னர் ஆண், பெண்) கலந்த ஓர் இந்திரியத் துளியைக் கொண்டு நிச்சயமாக நாம்தாம் மனிதனை படைத்தோம். அவனை நாம் சோதிப்பதற்காகவே, செவியுடையவனாகவும் பார்வையுடைய வனாகவும் அவனை ஆக்கினோம்.

Tafseer

إِنَّا
நிச்சயமாக நாம்
هَدَيْنَٰهُ
அவனுக்கு வழிகாட்டினோம்
ٱلسَّبِيلَ
பாதையை
إِمَّا
ஒன்று
شَاكِرًا
நன்றி உள்ளவனாக
وَإِمَّا كَفُورًا
அவர்கள் நன்றி கெட்டவனாக

Innaa hadainaahus sabeela immaa shaakiranw wa immaa kafoora

பின்னர், நிச்சயமாக நாம் அவனுக்கு நேரான வழியையும் அறிவித்தோம். எனினும், (அதனைப் பின்பற்றி நமக்கு) நன்றி செலுத்துபவர்களும் இருக்கின்றனர். (அதனை) நிராகரித்து விடுபவர்களும் இருக்கின்றனர்.

Tafseer

إِنَّآ
நிச்சயமாக நாம்
أَعْتَدْنَا
தயார் செய்துள்ளோம்
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
سَلَٰسِلَا۟
சங்கிலிகளை(யும்)
وَأَغْلَٰلًا
விலங்குகளையும்
وَسَعِيرًا
கொழுந்துவிட்டெரியும் நெருப்பையும்

Innaaa a'tadnaa lilkaa fireena salaasila wa aghlaalanw wa sa'eeraa

நிராகரிப்பவர்களுக்கு நாம் சங்கிலிகளையும், விலங்குகளையும், நரகத்தையும் நிச்சயமாக தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلْأَبْرَارَ
நல்லவர்கள்
يَشْرَبُونَ
பருகுவார்கள்
مِن كَأْسٍ
ஒரு மது குவளையிலிருந்து
كَانَ
இருக்கும்
مِزَاجُهَا
அதன் கலப்பு
كَافُورًا
காஃபூர் நறுமணத்தால்

innal abraara yashra boona min kaasin kaana mizaa juhaa kaafooraa

நல்லோர்களோ, கிண்ணங்களிலுள்ள கற்பூரம் கலந்த பானத்தை அருந்துவார்கள்.

Tafseer

عَيْنًا
ஓர் ஊற்றாகும்
يَشْرَبُ
அருந்துவார்கள்
بِهَا
அதில் இருந்து
عِبَادُ
அடியார்கள்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
يُفَجِّرُونَهَا
அதை அவர்கள் ஓட வைப்பார்கள்
تَفْجِيرًا
ஓட வைத்தல்

'Aynany yashrabu bihaa 'ibaadul laahi yafajjiroonahaa tafjeeraa

அது (சொந்தமாக) அல்லாஹ்வினுடைய (நல்) அடியார்கள் அருந்துவதற்காக ஏற்பட்ட ஓர் ஊற்றின் நீராகும். அதனை அவர்கள் (தாங்கள் விரும்பிய இடமெல்லாம்) ஓடச் செய்வார்கள்.

Tafseer

يُوفُونَ
நிறைவேற்றுவார்கள்
بِٱلنَّذْرِ
நேர்ச்சையை
وَيَخَافُونَ
இன்னும் பயப்படுவார்கள்
يَوْمًا
ஒரு நாளை
كَانَ
இருக்கும்
شَرُّهُۥ
அதன் தீமை
مُسْتَطِيرًا
சூழ்ந்ததாக, பரவியதாக, கடுமையானதாக

Yoofoona binnazri wa yakhaafoona yawman kaana sharruhoo mustateeraa

இவர்கள் (தங்கள்) நேர்ச்சைகளையும் நிறைவேற்றுவார்கள். நீண்ட வேதனையுடைய (மறுமை) நாளை பயந்துகொள்வார்கள்.

Tafseer

وَيُطْعِمُونَ
இன்னும் உணவளிப்பார்கள்
ٱلطَّعَامَ
உணவை
عَلَىٰ حُبِّهِۦ
அதன் பிரியம் இருப்பதுடன்
مِسْكِينًا
ஏழைகளுக்கும்
وَيَتِيمًا
அனாதைகளுக்கும்
وَأَسِيرًا
கைதிகளுக்கும்

Wa yut''imoonat ta'aama 'alaa hubbihee miskeenanw wa yatemanw wa aseeraa

அன்றி, அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிப்பார்கள்.

Tafseer

إِنَّمَا نُطْعِمُكُمْ
நாங்கள் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம்
لِوَجْهِ
முகத்திற்காகத்தான்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
لَا نُرِيدُ
நாங்கள் நாடவில்லை
مِنكُمْ
உங்களிடம்
جَزَآءً
கூலியையும்
وَلَا شُكُورًا
நன்றியையும்

Innaamaa nut'imukum li wajhil laahi laa nureedu minkum jazaaa'anw wa laa shukooraa

(தம்மிடம் பெறுபவர்களை நோக்கி) "நாம் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்தை நாடியேயன்றி, உங்களிடம் நாம் யாதொரு கூலியையோ அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ கருதவில்லை (என்றும்)

Tafseer

إِنَّا
நிச்சயமாக நாங்கள்
نَخَافُ
பயப்படுகின்றோம்
مِن رَّبِّنَا
எங்கள் இறைவனிடம்
يَوْمًا
ஒரு நாளை
عَبُوسًا
கடுகடுக்கின்ற
قَمْطَرِيرًا
சுருங்கிவிடுகின்ற

Innaa nakhaafu mir Rabbinna Yawman 'aboosan qamtareeraa

"நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனின் ஒரு நாளைப் பற்றிப் பயப்படுகின்றோம். அந்நாளில் முகம் கடுகடுத்துச் சுண்டி விடும்" (என்றும் கூறுவார்கள்).

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துத் தஹ்ர்
القرآن الكريم:الانسان
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Insan
ஸூரா:76
வசனம்:31
Total Words:240
Total Characters:1054
Number of Rukūʿs:2
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:98
Starting from verse:5591