Skip to main content

وَلَقَدْ ءَاتَيْنَآ
நாம் கொடுத்தோம்
إِبْرَٰهِيمَ
இப்றாஹீமுக்கு
رُشْدَهُۥ
அவருடைய நேர்வழியை
مِن قَبْلُ
முன்னர்
وَكُنَّا
நாம் இருந்தோம்
بِهِۦ
அவரை
عَٰلِمِينَ
நன்கறிந்தவர்களாக

Wa laqad aatainaaa Ibraaheema rushdahoo min qablu wa kunnaa bihee 'aalimeen

நிச்சயமாக நாம் இப்ராஹீமுக்கு இதற்கு முன்னரே நல்லறிவைக் கொடுத்திருந்தோம். (அதற்குரிய) அவருடைய தன்மையை நன்கறிந்தோம்.

Tafseer

إِذْ
சமயத்தை
قَالَ
கூறினார்
لِأَبِيهِ
தனது தந்தைக்கு
وَقَوْمِهِۦ
இன்னும் தனது சமுதாயத்திற்கு
مَا هَٰذِهِ
என்ன/இந்த
ٱلتَّمَاثِيلُ
உருவங்கள்
ٱلَّتِىٓ
எது
أَنتُمْ
நீங்கள்
لَهَا
இதன்மீது
عَٰكِفُونَ
நிலையாக இருக்கின்ற

Iz qaala li abeehi wa qawmihee maa haazihit tamaaseelul lateee antum lahee 'aakifoon

அவர் தன் தந்தையையும், தன் மக்களையும் நோக்கி "நீங்கள் (மிக்க உற்சாகத்தோடு) வணங்கிவரும் இச்சிலைகள் என்ன? (எதற்காக நீங்கள் இவைகளைப் வணங்குகிறீர்கள்)" என்று கேட்டதற்கு,

Tafseer

قَالُوا۟
அவர்கள் கூறினர்
وَجَدْنَآ
கண்டோம்
ءَابَآءَنَا
எங்கள் மூதாதைகளை
لَهَا
அவற்றை
عَٰبِدِينَ
வணங்குபவர்களாக

Qaaloo wajadnaaa aabaaa'anaa lahaa 'aabideen

அவர்கள் "எங்கள் மூதாதைகள் இவைகளை வணங்கிக் கொண்டிருக்க நாங்கள் கண்டோம். (ஆதலால் நாங்களும் அவைகளைப் வணங்குகிறோம்)" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَ
கூறினார்
لَقَدْ
திட்டமாக
كُنتُمْ
இருக்கின்றீர்கள்
أَنتُمْ
நீங்களும்
وَءَابَآؤُكُمْ
மூதாதைகளும் உங்கள்
فِى ضَلَٰلٍ
வழிகேட்டில்
مُّبِينٍ
தெளிவான

Qaala laqad kuntum antum wa aabaaa'ukum fee dalaalim mubeen

அதற்கவர் "நீங்களும் உங்கள் மூதாதைகளும் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றீர்கள்" என்று கூறினார்.

Tafseer

قَالُوٓا۟
கூறினர்
أَجِئْتَنَا
நீர் எங்களிடம் வந்தீரா?
بِٱلْحَقِّ
சத்தியத்தைக் கொண்டு
أَمْ
அல்லது
أَنتَ
நீரும் ஒருவரா
مِنَ ٱللَّٰعِبِينَ
விளையாட்டாக பேசுபவர்களில்

Qaalooo aji'tanaa bil haqqi am anta minal laa'ibeen

அதற்கவர்கள் "நீங்கள் ஏதும் உண்மையான செய்தியை நம்மிடம் கொண்டு வந்திருக்கின்றீரா? அல்லது (இவ்வாறு கூறி நம்முடன்) நீங்கள் விளையாடுகிறீரா?" என்று கேட்டனர்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
بَل
மாறாக
رَّبُّكُمْ
உங்களுக்கும் இறைவன்
رَبُّ
இறைவன்தான்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியின்
ٱلَّذِى
எப்படிப்பட்டவன்
فَطَرَهُنَّ
அவற்றைப்படைத்தான்
وَأَنَا۠
நானும் ஒருவன்
عَلَىٰ ذَٰلِكُم
இதற்கு
مِّنَ ٱلشَّٰهِدِينَ
சாட்சி கூறுபவர்களில்

Qaala bar Rabbukum Rabbus samaawaati wal ardil lazee fatarahunna wa ana 'alaa zaalikum minash shaahideen

அதற்கவர் "(நான் விளையாடுபவன்) இல்லை. உங்கள் (உண்மையான) இறைவன் வானங்களையும், பூமியையும் படைத்து வளர்ப்பவன்தான். (இந்த சிலைகளன்று.) இதற்கு நானே உங்களுக்குச் சாட்சி கூறுகிறேன்" என்று கூறினார்.

Tafseer

وَتَٱللَّهِ
அல்லாஹ்வின் மீது சத்தியமாக
لَأَكِيدَنَّ
நிச்சயமாக நான் சதி செய்வேன்
أَصْنَٰمَكُم
உங்கள் சிலைகளுக்கு
بَعْدَ
பின்னர்
أَن تُوَلُّوا۟
நீங்கள் திரும்பிச் சென்ற

Wa tallaahi la akeedanna asnaamakum ba'da an tuwalloo mudbireen

(அன்றி, இங்கிருந்து) "நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் சிலைகளைப் பங்கப்படுத்தி விடுவேன்" (என்றும் கூறினார்.)

Tafseer

فَجَعَلَهُمْ
அவற்றை ஆக்கிவிட்டார்
جُذَٰذًا
சிறுசிறு துண்டுகளாக
إِلَّا
தவிர
كَبِيرًا
பெரிய சிலை
لَّهُمْ
அவர்களுக்குரிய
لَعَلَّهُمْ
அவர்கள்
إِلَيْهِ
அதனளவில்
يَرْجِعُونَ
திரும்ப வருவதற்காக

Faja'alahum juzaazan illaa kabeeral lahum la'allahum ilaihi yarji'oon

(அவ்வாறே அவர்கள் சென்ற பின்னர்) அவற்றில் பெரிய சிலையைத் தவிர (மற்ற) அனைத்தையும் துண்டு துண்டாக உடைத்துத் தள்ளிவிட்டார். அவர்கள் (திரும்ப வந்த பின்னர் இதைப் பற்றி விசாரிப்பதற்காகப்) பெரிய சிலையிடம் செல்லக்கூடும் (என்று அதனை மட்டும் உடைக்கவில்லை).

Tafseer

قَالُوا۟
அவர்கள் கூறினர்
مَن فَعَلَ
யார்?/செய்தார்
هَٰذَا
இதை
بِـَٔالِهَتِنَآ
எனவே கடவுள்களுக்கு
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
لَمِنَ ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களில் ஒருவர் ஆவார்

Qaaloo man fa'ala haazaa bi aalihatinaaa innahoo laminaz zaalimeen

அவர்கள் (திரும்ப வந்து இக்காட்சியைக் கண்டதும்) "எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவன் எவன்? நிச்சயமாக அவன் மகா அநியாயக்காரன்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالُوا۟
அவர்கள் கூறினர்
سَمِعْنَا
நாங்கள் செவியுற்றோம்
فَتًى
ஒரு வாலிபரை
يَذْكُرُهُمْ
விமர்சிக்கின்றார் அவற்றை
يُقَالُ
சொல்லப்படும்
لَهُۥٓ
அவருக்கு
إِبْرَٰهِيمُ
இப்றாஹீம்

Qaaloo sami'naa fatany yazkuruhum yuqaalu lahooo Ibraaheem

அதற்கு (அவர்களில் சிலர்) "ஒரு வாலிபர் இவைகளைப் பற்றி(க் குறை) கூறிக் கொண்டிருப்பதை நாங்கள் செவியுற்று இருக்கின்றோம். அவருக்கு "இப்ராஹீம்" என்று பெயர் கூறப்படுகின்றது" என்று கூறினார்கள்.

Tafseer