Skip to main content

أَوْفُوا۟
முழுமைப்படுத்துங்கள்
ٱلْكَيْلَ
அளவையை
وَلَا تَكُونُوا۟
ஆகிவிடாதீர்கள்
مِنَ ٱلْمُخْسِرِينَ
நஷ்டம் ஏற்படுத்துபவர்களில்

Awful kaila wa laa takoonoo minal mukhsireen

அளவை முழுமையாக அளங்கள். (மக்களுக்கு) நஷ்டமிழைப்பவர்களாக இருக்க வேண்டாம்.

Tafseer

وَزِنُوا۟
நிறுங்கள்!
بِٱلْقِسْطَاسِ
தராசைக் கொண்டு
ٱلْمُسْتَقِيمِ
நேரான

Wa zinoo bilqistaasil mustaqeem

சரியான தராசு கொண்டு நிறுங்கள்.

Tafseer

وَلَا تَبْخَسُوا۟
குறைக்காதீர்கள்
ٱلنَّاسَ
மக்களுக்கு
أَشْيَآءَهُمْ
பொருள்களை அவர்களுடைய
وَلَا تَعْثَوْا۟
இன்னும் கடும் குழப்பம் செய்யாதீர்கள்!
فِى ٱلْأَرْضِ
பூமியில்
مُفْسِدِينَ
கலகம்செய்தவர்களாக

Wa laa tabkhasun naasa ashyaaa 'ahum wa laa ta'saw fil ardi mufsideen

மனிதர்களுக்கு நிறுத்துக் கொடுக்க வேண்டிய பொருளை நீங்கள் குறைத்து விடாதீர்கள். நீங்கள் பூமியில் விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள்.

Tafseer

وَٱتَّقُوا۟
அஞ்சிக் கொள்ளுங்கள்!
ٱلَّذِى خَلَقَكُمْ
உங்களைப் படைத்தவனை
وَٱلْجِبِلَّةَ
படைப்பினங்களையும்
ٱلْأَوَّلِينَ
முன்னோர்களான

Wattaqul lazee khalaqakum waljibillatal awwaleen

உங்களையும் உங்களுக்கு முன்னுள்ளோரையும் எவன் படைத்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள்" என்றும் கூறினார்.

Tafseer

قَالُوٓا۟
அவர்கள் கூறினர்
إِنَّمَآ أَنتَ
நீரெல்லாம்
مِنَ ٱلْمُسَحَّرِينَ
சூனியம் செய்யப்பட்ட படைப்புகளில் ஒருவர்தான்

Qaalooo innamaa anta minal musahhareen

அதற்கவர்கள் "நீங்கள் (எவராலோ) பெரும் சூனியம் செய்யப்பட்டு விட்டீர்.

Tafseer

وَمَآ أَنتَ
நீர் இல்லை
إِلَّا
தவிர
بَشَرٌ
மனிதராகவே
مِّثْلُنَا
எங்களைப் போன்ற
وَإِن نَّظُنُّكَ
நிச்சயமாக உம்மை நாங்கள் கருதுகிறோம்
لَمِنَ ٱلْكَٰذِبِينَ
பொய்யர்களை சேர்ந்தவராகவே

Wa maaa anta illaa basharum mislunaa wa innazunnuka laminal kaazibeen

நீங்கள் நம்மைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை. நிச்சயமாக நாம் உங்களைப் பொய்யர்களில் ஒருவராகவே மதிக்கின்றோம்.

Tafseer

فَأَسْقِطْ
விழ வைப்பீராக
عَلَيْنَا
எங்கள் மீது
كِسَفًا
சில துண்டுகளை
مِّنَ
இருந்து
ٱلسَّمَآءِ
வானத்தில்
إِن كُنتَ
நீர் இருந்தால்
مِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களில்

Fa asqit 'alainaa kisafam minas samaaa'i in kunta minas saadiqeen

நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் வானத்(தைப் பல துண்டாக்கி, அ)திலிருந்து ஒரு சில துண்டுகளை நம்மீது எறியுங்கள்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
رَبِّىٓ
என் இறைவன்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை

Qaala Rabbeee a'lamu bimaa ta'maloon

அதற்கவர் "நீங்கள் செய்து கொண்டிருக்கும் (மோச) காரியத்தை என் இறைவன் நன்கறிவான்; (இதற்குரிய தண்டனையை உங்களுக்கு அவசியம் தருவான்)" என்று கூறினார்.

Tafseer

فَكَذَّبُوهُ
ஆக, அவர்கள் அவரை பொய்ப்பித்தனர்
فَأَخَذَهُمْ
ஆகவே, பிடித்தது அவர்களை
عَذَابُ
தண்டனை
يَوْمِ
நாளின்
ٱلظُّلَّةِۚ
மேகம்
إِنَّهُۥ
நிச்சயமாக அது
كَانَ
இருக்கிறது
عَذَابَ
தண்டனையாக
يَوْمٍ
ஒரு நாளின்
عَظِيمٍ
பெரிய

Fakazzaboohu fa akhazahum 'azaabu Yawmiz zullah; innahoo kaana 'azaaba Yawmin 'Azeem

(எனினும்) பின்னரும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆகவே, ஒரு நாள் அவர்களை (அடர்ந்த) நிழலையுடைய மேகத்தின் வேதனை பிடித்துக் கொண்டது. நிச்சயமாக அது வேதனையுடைய மகத்தான நாளாகவே இருந்தது.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில் இருக்கிறது
لَءَايَةًۖ
ஓர் அத்தாட்சி
وَمَا كَانَ
இல்லை
أَكْثَرُهُم
அதிகமானவர்கள் அவர்களில்
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக

Inna fee zaalika la Aayah; wa maa kaana aksaruhum mu'mineen

நிச்சயமாக இதிலோர் அத்தாட்சி இருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.

Tafseer