Wa Aayatul lahum annaa hamalnaa zurriyatahum fil fulkil mashhoon
கப்பல் நிறைய மக்களை நாம் சுமந்து செல்வதும் நிச்சயமாக அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்.
Wa khalaqnaa lahum mim-mislihee maa yarkaboon
அவர்கள் ஏறிச் செல்ல அதைப்போன்ற (படகு போன்ற) வைகளையும் நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கின்றோம்.
Wa in nashaa nughriqhum falaa sareekha lahum wa laa hum yunqazoon
நாம் விரும்பினால் அவர்களை (கடலில்) மூழ்கடித்து விடுவோம். அச்சமயம் (அபயக் குரலில்) அவர்களை பாதுகாப்ப வர்கள் ஒருவரும் இருக்கமாட்டார். அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.
Illaa rahmatam minnaa wa mataa'an ilaa heen
(இவ்வுலகில்) சிறிது காலம் அவர்களைச் சுகம் அனுபவிக்கும்படி விட்டு வைத்திருப்பதும் நம்முடைய அருள்தான்.
Wa izaa qeela lahumuttaqoo maa baina aideekum wa maa khalfakum la'allakum turhamoon
"உங்களுக்கு முன்னும், உங்களுக்குப் பின்னும் (இருக்கும் இம்மை மறுமையில்) உள்ள வேதனைகளுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். (அதனால்) இறைவனின் கிருபையை நீங்கள் அடையலாம்" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் (அதனை அவர்கள் பொருட்படுத்துவதில்லை.)
Wa maa taateehim min aayatim min ayataati Rabbihim illaa kaanoo 'anhaa mu'rideen
அன்றி, அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் எது வந்தபோதிலும் அதனை அவர்கள் புறக்கணிக்காது இருப்பதும் இல்லை.
Wa izaa qeela lahum anfiqoo mimmaa razaqakumul laahu qaalal lazeena kafaroo lillazeena aamanooo anut'imu mal-law yashaaa'ul laahu at'amahooo in antum illaa fee dalaalim mubeen
அல்லாஹ் உங்களுக்கு அளித்தவைகளில் (ஏழைகளுக்குத்) தானம் செய்யுங்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் "அல்லாஹ் நாடினால் அவனே உணவு கொடுக்கக் கூடியவர்களுக்கு நாம் உணவு கொடுக்கலாமா? பகிரங்கமான வழிகேட்டிலேயே தவிர நீங்கள் இல்லை" என்றும் இந்த நிராகரிப்பவர்கள் (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.
Wa yaqooloona mataa haazal wa'du in kuntum saadiqeen
அன்றி, மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், (எங்களுக்கு வருமென நீங்கள் கூறும்) "தண்டனை எப்பொழுது வரும்?" என்றும் (பரிகாசமாகக்) கேட்கின்றனர்.
Maa yanzuroona illaa saihatanw waahidatan taa khuzuhum wa hum yakhissimoon
ஒரே ஒரு சப்தத்தைத் தவிர வேறு எதையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை! (இதனைப் பற்றி பரிகாசமாக) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் பொழுதே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.
Falaa yastatee'oona taw siyatanw-wa laaa ilaaa ahlihim yarji'oon
அந்நேரத்தில் அவர்கள் மரண சாஸனம் கூறவோ அல்லது தங்கள் குடும்பத்தாரிடம் செல்லவோ முடியாமலாகி விடுவார்கள். (அதற்குள் அழிந்துவிடுவார்கள்.)