Skip to main content

قَوْمَ
மக்களிடம்
فِرْعَوْنَۚ
ஃபிர்அவ்னின்
أَلَا يَتَّقُونَ
அவர்கள் அஞ்சிக் கொள்ள வேண்டாமா!

Qawma Fir'awn; alaa yattaqoon

"அந்த ஃபிர்அவ்னுடைய மக்கள் எனக்குப் பயப்பட மாட்டார்களா?" (என்று கேட்டான்.)

Tafseer

قَالَ
அவர் கூறினார்
رَبِّ
என் இறைவா!
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَخَافُ
பயப்படுகிறேன்
أَن يُكَذِّبُونِ
அவர்கள் என்னை பொய்ப்பிப்பார்கள் என்று

Qaala Rabbi inneee akhaafu ai yukazziboon

அதற்கு அவர் "என் இறைவனே! அவர்கள் என்னைப் பொய்யாக்கி விடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன்" என்றார்.

Tafseer

وَيَضِيقُ
இன்னும் நெருக்கடிக்குள்ளாகிவிடும்
صَدْرِى
என் நெஞ்சம்
وَلَا يَنطَلِقُ
இன்னும் பேசாது
لِسَانِى
என் நாவு
فَأَرْسِلْ
ஆகவே, நீ அனுப்பு
إِلَىٰ هَٰرُونَ
ஹாரூனுக்கு

Wa yadeequ sadree wa laa yantaliqu lisaanee fa arsil ilaa Haaroon

"(அவ்வாறு அவர்கள் பொய்யாக்கினால்) என் மனமுடைந்து விடும். (அத்துடன் எனக்குக் கொன்னல் இருப்பதால்) என் நாவால் (சரியாகப்) பேச முடியாது. ஆதலால் (என்னுடன்) வருமாறு ஹாரூனுக்கு நீ அறிவிப்பாயாக!

Tafseer

وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
عَلَىَّ
என் மீது
ذَنۢبٌ
ஒருகுற்றம்இருக்கிறது
فَأَخَافُ
ஆகவே, நான் பயப்படுகிறேன்
أَن يَقْتُلُونِ
அவர்கள் என்னை கொன்று விடுவார்கள் என்று

Wa lahum 'alaiya zambun fa akhaafu ai yaqtuloon

அன்றி, என் மீது அவர்களுக்கு ஒரு குற்றச்சாட்டுதலும் இருக்கிறது. அதற்காக அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என்றும் நான் பயப்படுகிறேன்" (என்றும் கூறினார்).

Tafseer

قَالَ
அவன் கூறினான்
كَلَّاۖ
அவ்வாறல்ல!
فَٱذْهَبَا
நீங்கள் இருவரும் செல்லுங்கள்
بِـَٔايَٰتِنَآۖ
எனது அத்தாட்சிகளை கொண்டு
إِنَّا مَعَكُم
நிச்சயமாக நாம் உங்களுடன்
مُّسْتَمِعُونَ
செவியேற்பவர்களாக

Qaala kallaa fazhabaa bi Aayaatinaaa innaa ma'akum mustami'oon

அதற்கு (இறைவன்) கூறியதாவது: "அவ்வாறன்று (பயப்படாதீர்கள்; ஹாரூனையும் அழைத்துக் கொண்டு) நீங்கள் இருவரும் என்னுடைய அத்தாட்சிகளை (எடுத்து)க் கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் இருந்து (அனைத்தையும்) கேட்டுக் கொண்டிருப்பேன்.

Tafseer

فَأْتِيَا
ஆகவே, நீங்கள் இருவரும் வாருங்கள்
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னிடம்
فَقُولَآ
நீங்கள் இருவரும் கூறுங்கள்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
رَسُولُ
தூதராக இருக்கிறோம்
رَبِّ
இறைவனுடைய
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்

Faatiyaa Fir'awna faqoolaaa innaa Rasoolu Rabbil 'aalameen

ஆகவே, நீங்களிருவரும் ஃபிர்அவ்னிடம் சென்று "நிச்சயமாக நாங்கள் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்ப்பவனின் தூதர்களாவோம்" என்றும்,

Tafseer

أَنْ أَرْسِلْ
நிச்சயமாக அனுப்பிவிடு
مَعَنَا
எங்களுடன்
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களை

An arsil ma'anaa Baneee Israaa'eel

"இஸ்ராயீலின் சந்ததிகளை நீ எங்களுடன் அனுப்பிவிடு என்றும் கூறுங்கள்!" (என்றும் கட்டளையிட்டான்.)

Tafseer

قَالَ
அவன் கூறினான்
أَلَمْ نُرَبِّكَ
நாம் உம்மை வளர்க்கவில்லையா?
فِينَا
எங்களில்
وَلِيدًا
குழந்தையாக
وَلَبِثْتَ
இன்னும் தங்கியிருந்தாய்
فِينَا
எங்களுடன்
مِنْ عُمُرِكَ
உமது வாழ்க்கையில்
سِنِينَ
ஆண்டுகள்

Qaala alam nurabbika feenaa waleedanw wa labista feenaa min 'umurika sineen

(அவ்வாறே அவர்கள் ஃபிர்அவ்னிடம் சென்று கூறவே) அதற்கவன் (மூஸாவை நோக்கி) "நாங்கள் உங்களைக் குழந்தையாக எடுத்துக் கொண்டு வளர்க்கவில்லையா? நீங்கள் (உங்கள் வாலிபத்தை அடையும் வரையில்) பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்திருந்தீர்கள்.

Tafseer

وَفَعَلْتَ
இன்னும் நீ செய்துவிட்டாய்
فَعْلَتَكَ
உனது செயலை
ٱلَّتِى فَعَلْتَ
எது/செய்தாய்
وَأَنتَ
நீயோ இருக்கிறாய்
مِنَ ٱلْكَٰفِرِينَ
நன்றியறியாதவர்களில்

Wa fa'alta fa'latakal latee fa'alta wa anta minal kaafireen

நீங்கள் செய்(யத் தகா)த (ஒரு) காரியத்தையும் செய்தீர்கள்! (அதனை மன்னித்திருந்தும்) நீங்கள் நன்றி கெட்டவராகவே இருக்கின்றீர்கள்" என்றான்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
فَعَلْتُهَآ
அதை நான் செய்தேன்
إِذًا
அப்போது
وَأَنَا۠
நானோ
مِنَ ٱلضَّآلِّينَ
அறியாதவர்களில்

Qaala fa'altuhaaa izanw wa ana minad daaaleen

அதற்கு மூஸா "நான் அறியாதவனாக இருந்த நிலைமையில் அதனை நான் செய்தேன்.

Tafseer