Wa iz waa'adnaa Moosaaa arba'eena lailatan summattakhaztumul 'ijla mim ba'dihee wa antum zaalimoon
அன்றி (தவ்றாத் வேதத்தைக் கொடுக்க) மூஸாவுக்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். (அதற்காக அவர் சென்ற) பின்னர் (அவர் திரும்பி வருவதற்குள்ளாகவே) நீங்கள் வரம்பு மீறி ஒரு காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள்.
Summa 'afawnaa 'ankum mim ba'di zaalika la'allakum tashkuroon
நீங்கள் நன்றி செலுத்துவீர்களென்று இதற்குப் பின்னும் நாம் உங்களை மன்னித்தோம்.
Wa iz aatainaa Moosal kitaaba wal Furqaana la'allakum tahtadoon
நீங்கள் நேர்வழி பெறுவதற்காக மூஸாவுக்கு (தவ்றாத் என்னும்) வேதத்தையும், பிரித்து அறிவிக்கக்கூடிய (சட்ட திட்டத்)தையும் நாம் கொடுத்தோம்.
Wa iz qaala Moosaa liqawmihee yaa qawmi innakum zalamtum anfusakum bittikhaa zikumul 'ijla fatoobooo ilaa Baari'ikum faqtulooo anfusakum zaalikum khairul lakum 'inda Baari'ikum fataaba 'alaikum; innahoo Huwat Tawwaabur Raheem
பின்னும் (நினைத்துப் பாருங்கள்:) மூஸா தன் சமூகத்தாரை நோக்கி "என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் காளைக்கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டதனால் (பகுத்தறிவுடைய) நீங்கள் (கேவலம் ஒரு மிருகத்தை வணங்கி) உண்மையாகவே உங்களுக்கு தீங்கிழைத்துக் கொண்டீர்கள். நீங்கள் மனம் வருந்தி உங்களை படைத்தவனிடம் மீண்டு உங்(களிலுள்ள வரம்பு மீறியவர்)களை நீங்களே கொன்று விடுங்கள். இதுதான் உங்களை படைத்தவனிடம் உங்களுக்கு நன்மை தரும்" என்று கூறினார். ஆகவே (அவ்வாறே நீங்களும் செய்ததனால்) உங்களை (அல்லாஹ்) மன்னித்துவிட்டான். நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடைய வனுமாக இருக்கின்றான்.
Wa iz qultum yaa Moosaa lan nu'mina laka hattaa naral laaha jahratan fa akhazat kumus saa'iqatu wa antum tanzuroon
அன்றி நீங்கள் மூஸாவை நோக்கி "நாங்கள் அல்லாஹ்வைக் கண்கூடாக காணும் வரையில் உங்களை நம்பமாட்டோம்" என்று கூறியபொழுது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்களை (பூகம்பம் போன்ற) பெரும் சப்தம் பீடித்துக் கொண்டது.
Summa ba'asnaakum mim ba'di mawtikum la'allakum tashkuroon
நீங்கள் (அந்த பெரும் சப்தத்தால்) இறந்துவிட்டதற்குப் பின்னும் நீங்கள் நன்றி செலுத்துவீர்கள் என்பதற்காக உங்களை நாம் உயிர்ப்பித்தோம்.
Wa zallalnaa 'alaikumul ghamaama wa anzalnaa 'alaikumul Manna was Salwaa kuloo min taiyibaati maa razaqnaakum wa maa zalamoonaa wa laakin kaanooo anfusahum yazlimoon
அன்றி நாம் உங்களுக்கு மேகம் நிழலிடும்படிச் செய்து, (உங்களுக்கு உணவாக) "மன்னு ஸல்வா" (என்ற இருவகை உண)வையும் இறக்கி வைத்து (அவர்களை நோக்கி) "நாம் உங்களுக்கு அளித்துவரும் பரிசுத்தமான இவைகளைப் புசித்து வாருங்கள்" என்று கட்டளையிட்டிருந்தோம். (எனினும் நம்முடைய கட்டளையை மீறிய) அவர்கள் நமக்கொன்றும் தீங்கிழைத்து விடவில்லை; தங்களுக்குத்தாமே அவர்கள் தீங்கிழைத்துக் கொண்டனர்.
Wa iz qulnad khuloo haazihil qaryata fakuloo minhaa haisu shi'tum raghadanw wadkhulul baaba sujjadanw wa qooloo hittatun naghfir lakum khataayaakum; wa sanazeedul muhsineen
அன்றி (உங்கள் மூதாதையர்களை நோக்கி) "நீங்கள் இந்த நகருக்கு சென்று அதில் உங்களுக்கு விருப்பமான இடத்தில் (விருப்ப மானவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள். அதன் வாயிலில் (நுழையும் பொழுது) தலைகுனிந்து செல்லுங்கள். "ஹித்ததுன்" (எங்கள் பாவச்சுமை நீங்குக!) எனவும் கூறுங்கள். உங்களுடைய குற்றங்களை நாம் மன்னித்துவிடுவோம். நன்மை செய்தவர்களுக்கு (அதன் கூலியை) அதிகப்படுத்தியும் கொடுப்போம்" எனக் கூறியிருந்தோம்.
Fabaddalal lazeena zalamoo qawlan ghairal lazee qeela lahum fa anzalnaa 'alal lazeena zalamoo rijzam minas samaaa'i bimaa kaanoo yafsuqoon
ஆனால் வரம்பு மீறிக்கொண்டே வந்த அவர்கள் தங்களுக்குக் கூறப்பட்ட வார்த்தையை மாற்றிவிட்டு கூறப்படாத வார்த்தையை ("ஹின்ததுன்"= கோதுமை என்று) கூறினார்கள். அவர்கள் இவ்விதம் (மாற்றிக் கூறி) பாவம் செய்ததனால் வரம்பு மீறிய (அ)வர்கள்மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைத்தோம்.
Wa izis tasqaa Moosaa liqawmihee faqulnad rib bi'asaakal hajara fanfajarat minhusnataaa 'ashrata 'aynan qad 'alima kullu unaasim mash rabahum kuloo washraboo mir rizqil laahi wa laa ta'saw fil ardi mufsideen
மூஸா தன் இனத்தாரு(டன் "தீஹ்" என்னும் பகுதிக்குச் சென்ற சமயத்தில் தண்ணீர் கிடைக்காமல் தாகத்தால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அவர்களுக்)கு தண்ணீர் தேடியபோது (நாம் அவரை நோக்கி) "நீங்கள் உங்களுடைய தடியால் இக்கல்லை அடியுங்கள்" எனக் கூறினோம். (அவர் அவ்வாறு அடித்ததும்) உடனே அதில் இருந்து பன்னிரண்டு ஊற்றுகள் உதித்தோடின. (அவருடைய பன்னிரண்டு பிரிவு) மக்கள் அனைவரும் தாங்கள் அருந்தும் தண்ணீர்த் துறையைத் தெளிவாக அறிந்து கொண்டார்கள். (அப்பொழுது நாம் அவர்களை நோக்கி "உங்களுக்கு) அல்லாஹ் கொடுத்த ("மன்னு மற்றும் ஸல்வா" என்னும் உணவு பதார்தத்) திலிருந்து புசியுங்கள். (கல்லிலிருந்து உதித்தோடும் இந்நீரைப்) பருகுங்கள். ஆனால் பூமியில் விஷமம் செய்துகொண்டு அலையாதீர்கள்" (என்று கூறினோம்.)